Monday, September 7, 2026

 மனிதர்களால் உண்டாக்கப்பட்ட கடவுள் . தொழுகை முறை , சடங்குகள் மதத்திற்கு மதம் வேறுபட்டிருந்தாலும் இயற்கை அவர்களுக்குள்ளும் உள்ளார்ந்த ஒற்றுமையை சுட்டிக்காட்டத்  தவறவில்லை .  உணவின் சுவை நிறம் திடம் மாறுபட்டிருந்தாலும் ஆற்றல் தேவைக்காக எடுத்துக்கொள்ளும் உணவை மென்று சாப்பிட்டு ஒரே மாதிரியாகத்தான் ஜீரணிக்கின்றார்கள் . தவித்தால் தாகத்திற்கு நீர்தான் குடிக்கிறார்கள் . இறந்த பிறகு எல்லோருடைய உடலும் எந்த வேற்றுமையையும் காட்டுவதில்லை .கூடி இருப்பவர்கள் தான் வேற்றுமை காட்டுகின்றார்கள் .இனப்பெருக்கத்திற்கு எல்லோரும் ஒரே வழிமுறையைத்தான் பின்பற்றுகிறார்கள் . எல்லோருக்கும் ரத்தம் அதே சிவப்பு. வியர்வை உப்பு கரிக்கின்றது. கழிவுகள் ஒரே மாதிரியாகத்தான் வெளியேறுகின்றன.   

No comments:

Post a Comment