Tuesday, February 25, 2025

 ஒரு நாட்டின்  வளர்ச்சிஎன்பது நாட்டு மக்களின் ஒருமித்த வளர்ச்சியே. கருத்து வேறுபாடுகளை ஒருபாற்கோடாமை இன்றி பேசித் தீர்த்துக்கொள்ளலாம் . அப்போது ஒருவருக்கு ஏற்படும் இன்னல்களையும் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்துப் பேசினால் தீர்வு ஏற்படும். சுயநலம் ஒருவரைத் தீயவனாக வளர்த்துவிடுகின்றது. தீயவர்கள் பெரும்பான்மையினராக வளரும் போது தீயவர்களேஆட்சிப்பொறுப்பிற்கு வருகின்றார்கள் . தீயவர்கள் ஆள்பவர்களாக இருக்கும் போது சமுதாயத்தில் தீயவர்களே பெரும்பான்மையாகி விடுகின்றார்கள். தீயவர்களாக இருந்துகொண்டு தீயவர்களை வளர்த்து விடுவதால் காலப்போக்கில் தீயவர்கள் பெரும்பான்மையாகி ,அந்தப் பெரும்பான்மையினைத் தக்கவைத்துக்கொள்ள ஒன்று சேர்ந்து செயல்படு கிறார்கள் . அவர்களுடைய ஒற்றுமையில் நன்மக்கள் அச்சப்பட்டு முடக்கப் பட்டுவிடுகின்றார்கள் .இன்றைக்கு நேர்மையானவர்கள் எவரும் அரசியலில் ஈடுபட விரும்புவதில்லை தப்பித் தவறி வந்தவர்கள் தீயவர்களாக மாற்றப்பட்டு விடுகின்றார்கள் .மாறாதவர் பிழைத்திருக்கவேண்டுமானால் அரசியலை விட்டு விலகவேண்டும்.  இல்லாவிட்டால் மரணத்தை தழுவ நேரிடும்.

நேர்மைத்தனம் விளம்பரம் தேடுவதில்லை . விளம்பரம் தேடும் நேர்மை உண்மையான நேர்மையாக இருப்பதில்லை . விளம்பரமில்லாத நேர்மை மக்களைச் சென்றடைவதில்லை  என்பதால் அதை எதிர்ப்பது விளம்பரத்தால் வாழும் தீயவர்களுக்கு எளிதாக இருக்கின்றது . தீயவர்கள் இந்த அளவிற்கு முன்னேறி வந்ததிற்குக் காரணம் அவர்களுக்குள் இருக்கும் புரிதலுடன் கூடிய உள்ளார்ந்த ஒற்றுமைதான் . உழைப்பின்றி கிடைக்கும் வருமானத்தில் நஷ்டம் என்பதே இல்லை . இலாபத்தில் ஏற்படும் நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு விடுவதால்  இந்த ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுவதில்லை . வருமானம்  சீனியர் ,ஜூனியர் அடிப்படையில் பங்கிடப்படுகின்றது . இதில் மாற்றம் ஏற்படும்போது அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேடிக்கொள்கின்றார்கள். கட்சி மாறுவதும் , புதிய கட்சி தொடங்குவதும் இந்த நிலையின் பின்விளைவுகளே. 

நேர்மையான அரசியல் இந்திய நாட்டிற்குத் தேவை. அதை நேர்மையான  ஒருவரால் மட்டும் தரமுடியாது . நேர்மையானவர்கள் கூட்டு முயற்சியால்       மட்டுமே தரமுடியும் .நேர்மையானவர்கள் ஒன்று சேராவிட்டால் இது ஒருநாளும் கைகூடாது.     


Monday, February 24, 2025

 இன்றைக்கு எல்லோருக்கும் தீர்வு காணமுடியாமல் இருக்கும் பல பிரச்சனைகளுள் ஒன்று விலைவாசி உயர்வைச்சமாளிப்பது .விலைவாசி ஏற்றத் தாழ்வு என்பது உற்பத்தி  மற்றும் தேவை இவை களுக்கிடையே உள்ள இடைவெளியின் அளவைப்பொறுத்தது என்றுதான் முன்பு பொருளாதார வல்லுநர்கள் கூறினார்கள்.  உண்மையில் அவை மட்டும்தான் விலைவாசியைத் தீர்மானிக்கின்றாதா  என்றால் அது தவறு என்றுதான் தோன்றுகின்றது . ஏனெனில் அவற்றோடு மட்டும் தொடர்புடையதாக இருந்தால் விலைவாசி ஒவ்வொருநாளும் எல்லைமீறி உயராது. சிலசமயம் உற்பத்தி குறையும் போது உயரும் . கூடும்போது குறையும். விலைவாசி உயர்வுக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன என்பதையே இவை சுட்டிக்காட்டுகின்றன .தேவை அதிகம் என்றால் தொழித்துறையில் உற்பத்தி பெருகி தொழில் வளர்ச்சிப்பாதையில் முன்னேறி விலைவாசியை மட்டுப்படுத்தியிருக்கும் அந்தமுன்னேற்றம் அரசியல் காரணங்களினால் தடைப்படும் போது விலைவாசி கூடுகின்றது . தொழில் தொடங்க இருக்கும் நிபந்தனைகளை இலஞ்சம் வாங்காமல்  மேலும் எளிமைப்படுத்தினால்  தேவைக்கேற்ற உற்பத்தியை அவ்வப்போது புதுப்பித்துக்கொள்ளமுடியும் . தேவை இயல்பானதாக இருக்கும் போது பொருளின் விலையை உயர்த்தி அதிகம் பொருள் சம்பாதிக்க விரும்பும் வர்த்தகர்கள் கூடுதலாக கையிருப்பில் இருக்கும் பொருளை ப்பதுக்கி வைத்து  உற்பத்தி குறைவு  தேவை அதிகம்  என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி  விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்கின்றார்கள் . விலை உயர்விற்கு கூடுதல் செலவோ அல்லது உழைப்போ காரணமாக இருப்பதில்லை. முன்பு நேர்மையான அரசாங்கம் பொருட்களை பதுக்கிவைப்பபவர்களை கண்டுபிடித்து தண்டித்தார்கள் . இன்றைக்கு அதன் மூலம் ஆதாயம் தேடிக்கொள்கின்றார்கள். மேலும்  விற்பனை விலை உயர  கூடுதல் முயற்சியின்றி GST  உயர வருவாய் அதிகரிப்பதாலும் ,இலஞ்சம் பெற வாய்ப்பு அதிகரிப்பதாலும் மக்களிடம் கிளர்ச்சியைத் தூண்டிய, இலஞ்சம் பெறமுடியாத  ஒரு சில முறைகேடுகளைமட்டுமே தடை செய்கின்றார்கள் .

  மக்களின் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்காத ஆட்சியாளர்களின் சுய நலத்திற்க்காக உருவாக்கிய  அரசாங்கத் திட்டங்களுக்காக வரியை அவ்வப்போது அதிகரிக்கின்றார்கள் . இது விலைவாசியை நேரிடையாகவும் மறைமுக மாகவும்  பாதிக்கின்றது .கல்விக் கட்டணம், போக்குவரத்துக்கட்டணம் , மருத்துவச் செலவு , வீட்டு வரி ,மின்சாரக் கட்டணம் போன்றவை அதிகரிக்கும் போது வர்த்தகர்கள் முன்பு பெற்றஅதே இலாபத்தை த் தக்கவைத்துக்கொள்ள உற்பத்திப் பொருளின் விலையை உயர்த்திவிடுகின்றார்கள் . இதனால் வரி உயர்வின் பாதிப்பு மக்கள் மீது கூடுதலாகிறது . அதாவது வர்த்தகர்களின் இழப்பை  மக்களே ஈடுசெய்ய வேண்டியிருக்கின்றது .,விலைவாசி உயர்வு தாறுமாறாக இருக்கும்போது அதன் தாக்கம் மக்களிடையே எதிர்மறையாக இருக்கின்றது. விலைவாசி ஏற்றத்தை நேர்மையான  ,இயல்பான சம்பாத்தியத்தால் ஈடுசெய்ய முடியாததால் மக்கள் பெரும்பாலானோர் தவறான வழிகளில் பொருள் ஈட்டும் முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள் .உண்மையான காரணமின்றி விதிக்கப்படும்  கூடுதல் வரிவிதிப்பு அரசியல்வாதிகளுக்கு  நலம் பயக்கலாம் . நாட்டின் நலத்தை மேம்படுத்துவதில்லை .

Saturday, February 22, 2025

 மொழி என்பது ஒருவர் தன்தனித்திறமைகளை   மொழி என்பது ஒருவர் தன் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள மக்களால் உண்டாக்கப்பட்ட ஒரு கருவி . எல்லோருக்கும் இருக்கும் ஒரு பொது ஊடகம் . கருத்துப்பரிமாற்றங்களுக்கு ஒரு மொழி போதும். ஆனால் மக்களில் ஒரு பிரிவினர் தங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக்கொள்ள விளைந்த போதுபல மொழிகள் உண்டாக்கப்பட்டன . மொழிகள் மூலம் தொழில்  இரகசியங்களை பாதுகாத்துக்கொண்டார்கள் . ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட கருவி போதும். பல கருவிகள் தேவையில்லை . பல கருவிகள் இருந்தால் பணிகளில் சுயசுய சிந்தனை ,  ஏற்படுவதில்லை  .  (A bad workman always quarrels with his tools, too many tools make a labour to become a bad workman) விலையுயர்ந்த ஒரு கருவியை விலைக்கு வாங்குவதால் மட்டும் அந்தக்கருவியை எல்லா நேரங்களிலும் பயனுறுதிறனுடன் பயன்டுத்தும் திறமை வந்துவிடுவதில்லை . அதற்குப் பயிற்சிவேண்டும் .பல மொழிகளை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தேவைஇல்லாத வளர்ச்சி .அதனால் ஒருவர்க்கு கூடுதல் திறமையை பெறுவதற்கான வாய்ப்பு மிகச் சொற்ப அளவு கூடலாம் அனால் தனித்திறமை மொழியால் மட்டுமே கிடைத்துவிடுவதில்லை. திறமைகளும்  , மனித வளமும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாத நாட்டில் கூடுதல் மொழியைக் கற்றுக்கொள்ள கட்டாய ப் படுத்துவது மாணவர்களுக்கு கூடுதல் சுமை . மொழியைக் கற்றுக்கொள்ளும் கட்டாயத்தில்  திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புக்களை த் தவறவிட்டுவிடுவதற்கு வாய்ப்பு கள் அதிகம் .  தாய்மொழி மற்றும் ஆங்கிலம்            கட்டாயம் என்றும் மற்றொரு மொழி கற்க விரும்புகின்றவர்கள் தனி நிறுவனங்கள் மூலம் பெறலாம் என்றும் மொழிக்கொள்கையை வகுத்துக்கொள்ள வேண்டும் .


Thursday, February 13, 2025

 கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சில அழிவுப்பூர்வமான மாற்றங்கள் ஆக்கப்பூர்வமான மாற்றங்களுக்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளன .மக்கள் எல்லோரும் உள்ளூர சுயநலமிக்கவர்களாக வளர்ந்து வருகின்றார்கள் . சமுதாய அக்கறையை யாரிடமும் காணமுடியவில்லை . அதை மூடிமறைக்க நல்லவர்கள் போல வேஷம் போடுகின்றார்கள் . ஆதாரமின்றி மற்றவர்களைக் குறைகூறுகின்றார்கள் . பெரிய குற்றவாளிகளை விட்டுவிட்டு பலன் கேட்டுப்பெறுகின்றார்கள் . சின்னச் சின்னச் தவறு செய்பவர்களை த் தேடித்கண்டுபிடித்து குன்றவளிகள் என்று தண்டிக்கின்றார்கள் . இந்த பரிணாம வளர்ச்சி எங்கே கொண்டுபோய் விடுமோ ?

Wednesday, February 12, 2025

 மக்கள் தவறான வழிகளில் குறுகிய காலத்தில் உழைப்பின்றி அதிகப் பொருள் சம்பாதிக்க விரும்புகின்றார்கள் . இதற்கு இந்திய அரசியல்வாதிகள் கற்றுக்கொடுத்த பாடம் அரசியலை ஒரு தொழிலாக ஏற்றுக்கொள்வதுதான் .ஆட்சியாளர்கள் மட்டுமே தவறான வழிகளில் பணம் சம்பாதிப்பவர்களுக்கு வழிகாட்டிகளாகவும் ,பாதுக்காவலர்களாகவும் இருக்க முடியும் என்பதால் ஆளும் கட்சியில் தொண்டர்களாக இருந்துகொண்டு பலனடைகின்றார்கள் . பலனடைபவர்கள் பங்கு கொடுக்கவேண்டும் என்பது உள்ளார்ந்த ஒப்பந்தம் .பலனும் பங்கீடும் ஒருவருடைய அரசியல் சீனியாரிட்டியை க்காட்டும் அளவுகோலாகும். ஒருவருடைய சீனியாரிட்டியை முந்திக்கொண்டு வேறொருவர் முந்திச் செல்ல கட்சித் தொடர்கள் அனுமதிப்பதில்லை  என்றாலும் பலன் மற்றும் பங்கீடுகளில் ஏற்படும் பிழைகளால் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் கட்சி தாவலையும் புதிய கட்சிகளின் உதயத்தையும் அவ்வப்போது செய்கின்றார்கள் . நேர்மையான அரசியலை மேற்கொள்ளாத ஆட்சியாளர்களும் , மக்களின் ஆதரவு தனக்கே இருக்கின்றது என்பதை வெளிக்காட்ட இவர்களைப்போன்ற கட்சித் தொடர்களை விளம்பரமாக்கிக் கொள்வதும் , அவர்களால் சமுதாய வீதியில் ஏற்படும் வேண்டாத மாற்றங்களைக் கண்டுகொலாமல் இருப்பதும் இந்திய மக்களால் இன்னமும் இனமறிந்து கொள்ளாத கொரோனா  வைரஸ்ஸாகும் .  மக்களின் நலம் காக்க இரண்டு காட்சிகள் போதும்- ஒரு கட்சி ,ஒரு எதிர்க்கட்சி.  தன்னலம் மிகும் போதுதான் கட்சிகள் பலவாகின்றன  


Thursday, February 6, 2025

 முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும்  என்றும் வைரத்தை வைரத்தாலதான் வெட்டமுடியும் என்றும் தமிழ் ச் சான்றோர்கள் கூறுவார்கள் .ஆனால்  சமுதாயத்தில் தீயவனை தீயவனாக இருந்துகொண்டு முழுமையாகத் திருத்தவோ அல்லது தடுக்கவோ முடியாது .நேர்மையான சமுதாயத்தில் ஒரு நேர்மையானவன் துளிர்க்கும் தீயவர்களை திருத்திவிடுவான் ள்ளது தண்டித்துவிடுவான் போலித்தனமான நேர்மையுடன் வளரும் சமுதாயத்தில் உண்மையான நேர்மையுள்ளவர்கள் யாருமில்லை .தவறிப்போய் ஒரு நேர்மையானவன் இருந்தாலும் அவனுக்கு சமுதாயம் துணைநிற்பதில்லை ..அவனால் தவறான வழியில் முன்னேறும் சமுதாயத்தை தடுத்து நிறுத்தமுடிவதில்லை மக்களுக்காக நேர்மையானவர்கள் போல வேஷம் போடும் அரசியல் தலைவர்களால் தீயவர்களுடன் நட்பு கொள்ளமட்டுமே முடியும் ,அவர்களை க் கட்டுப்படுத்த முடியாது .. இது இயற்கை யின் நியதி அதை மூடி மறுக்கமுடியாது .

Wednesday, February 5, 2025

 மக்களின்  நடவடிக்கைகளே கடவுளை மெய்ப்பிக்கின்றன என்று சொல்லும் போது மக்களின் நடவடிக்கைகளே  கடவுளை பொய்ப்பிக்கவும் செய்கின்றன. எடுத்துக்கட்டாக  கடவுள் தூணிலும் இருப்பார்  துரும்பிலும் இருப்பர் என்றும்  கடவுள் ஒருவரே என்றும் அவர் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்றும் கூறுவார்கள் . ஆனால் அதை நிம்பினாலும் நம்பாமல்  ஒரே கடவுளைத் தேடி  பல இடங்களுக்குச் செல்வார்கள் .  எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை இருக்கும் இடத்தில் இருந்துகொண்டு  தொழுதுவிட்டு உழைக்கும் எண்ணத்தை செயல்படுத்தவேண்டும் . நாம் வாழ்வதற்குத்தான் படைக்கப்பட்டோம் . அது உழைப்பதால் மட்டுமே முழுமைபெறும் . நேர்மையாகவும் ,ஒற்றுமையாகவும் வாழ்வதற்குத்தான் கடவுள் தேவை . அது வே ஒருவருடைய அடிப்படைக் கொள்கையாக  இருக்குமானால்  அவரே கடவுளாகிவிடுகின்றார் .