Wednesday, July 8, 2026

100 ஆண்டுகள் வாழ்வது எப்படி என்ற நூல் வெளியீட்டுவிழா .50 வது வயதில் அவர் எளிதிய 100 வது நூல்.எல்லோரும் பாராட்டிப் பேசினார்கள் மகிழ்ச்சியால் இதயம் துள்ளாமல் துள்ளியது விழா முடிந்து கனத்த இதயத்துடன் வீடு திரும்பிய நூலின் ஆசிரியர் வீட்டின் கதவைத் தட்டிவிட்டு காத்திருந்தார் .அதிக மகிழ்ச்சியை அவரது சின்ன இதயம் தாங்கிக்கொள்ளவில்லை. கதவைத் திறந்த மனைவியின் மேல் கட்டையாகச் சாய்ந்தார். 100 ஆண்டுகள் வாழ்வது எப்படி நூலின் முதல் பிரதி கீழே விழுந்து கிடந்தது. கையில் வைத்திருந்த மாலை அதன் மேல் விழுந்து இறுதி மரியாதை செய்தது .

No comments:

Post a Comment