Thursday, July 2, 2026

ஒரு எரிமலை வெடித்து அனல் குழம்பை கக்கத் தொடங்கியது. இந்த முறை அது விடமால் மாதக்கணக்கில் குழம்பை உமிழ , அது வழிந்தோடி மலையடிவார கிராமங்களுக்கு ச் சென்று படிந்தது. மக்களுக்கு அது தங்கம் என்று வெகுநாட்கள் கழித்தே தெரியவந்தது . தங்கமலை ரகசியம் மலையடிவார கிராமங்களில் உள்ள மக்களுக்குத் தெரியவர பாறைப் படி வுகளை வெட்டி வெட்டி எடுத்துச் சென்றனர். போட்டி பொறாமையில் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு மாண்டும் போயினர் . வெட்டி எடுத்து ஒவ்வொருவரும் வீட்டில் சேர்ந்து வைத்திருக்கும் தங்கமே மலைபோல குவிய அங்கிருக்கும் மக்களுக்கு தங்கத்தின் மேல் உள்ள ஆசை குறையத் தொடங்கியது . பயனற்ற பொருளும் .பயன்படுத்தப்படாத பொருளும் ஒன்றுதான் பயன்படுத்தப்படாதபோது பயனுள்ள பொருளும் பயனற்ற பொருளாகிவிடுகின்றது .தேவையின்றி ஆசை காரணமாக சேர்க்கப்படும் எந்தப்பொருளும் பயனற்ற பொருளாகி விடும்

No comments:

Post a Comment