Friday, July 3, 2026

டிஜிட்டல் அர்ரெஸ்ட் என்பது ஏமாற்றுக்காரர்கள் செய்யும் தில்லுமுல்லு.அப்படி என்று எதுவுமில்லை அதனால் அதைக்கண்டு மக்கள் பயப்படத்தேவையில்லை என்று அரசு சார்பாக மக்களுக்கு அறிவுரை கூறுகின்றார்கள். ஆனால்உண்மையில் பெரும்பாலான சமுதாய மக்கள் ஏற்கனவே தங்களை டிஜிட்டல் அரஸ்ட்டை தாங்களாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.அதனால்தான் போலியான மனிதர்களை ,போலியான வாக்குறுதிகளை , போலியான செயல்பாடுகளை , போலியான விளம்பரங்ளை ,போலியான கணக்கு மற்றும் புள்ளி விவரங்களை எந்தவிதமான எதிர்ப்பின்றி நம்பும் அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறார்கள்.சினிமா , சுவரொட்டி ,விளம்பரம் போன்றவற்றால் ஒரேநேரத்தில் எல்லோரையும் அரெஸ்ட் செய்தது தெரியாமல் டிஜிட்டல் அர்ரெஸ்ட் செய்துவிடுகிறார்கள் . இதனால் ஹீரோயிசம் - காரணமின்றி ஒருவரைப் புகழ்தல் , பெஸிமிஸ்டிக் - காரணமின்றி ஒருவரை க் குற்றம் காணுதல் போன்ற பண்புகள் நம்மிடம் மிகுந்து வருகின்றன.

No comments:

Post a Comment