Sunday, July 26, 2026

ஏமாற்றுபவர்கள் ஏமாந்தவர்களை ஏமாற்றினால் நீங்கள் யாரை குறைகூறுவீர்கள் ? ஏமாற்றுபவர்களையா அல்லது ஏமாந்து போவோர்களையா ? என்னைக் கேட்டால் நான் ஏமாற்றுபவர்களையே தண்டிக்க வேண்டும் என்று கூறுவேன் . கோழியா இல்லை முட்டையா எது முதலில் வந்தது என்பதைப்போல முதலில் வந்தது ஏமாற்றுபவர்களா அல்லது ஏமாந்துபோவோர்களா ? ஏமாற்றுபவர்கள் இல்லாவிட்டால் ஏமாந்துபோவோர்கள் இருக்க மாட்டார்கள் .ஏமாந்தவர்கள் என்ற இனம் இயற்கையாக வந்ததில்லை .அது ஏமாற்றுபவர்களினால் மட்டுமே உருவானது . ஏமாற்றுவது என்பது சார்பில்லாத தன்னிச்சையான செயல் . ஏமாறுவது என்பது சார்புறு செயல்.எனவே முதலில் கட்டுபடுத்த வேண்டியது ஏமாற்றுபவர்களையே ஏமாற்றுதல் ,ஏமாறுதல் என்ற வினைச் செயல்களில் ஏமாற்றுதல் மட்டுமே தன்வினைச் செயல் , ஏமாறுதல் என்பது எம்மாற்றப்படுவதை தடுத்துக்கொள்ள செய்யவேண்டிய எதிர் வினைச் செயலின் செயலின்மை .ஒருவன் நேர்மையாக சமுதாயத்தோடு இணக்கமாக வாழ இந்த இரு வினைகளுமே தேவையில்லை. நேர்மைத்தவறி வாழ நினைப்பவர்கள் ஏமாற்றுவதை த் தொழிலாகக் கொள்கின்றார்கள் . ஏமாற்றுவது வந்ததால்தான் ஏமாறுவது வந்தது. ஏமாற்றுவது இல்லையென்றால் ஏமாறுவதும் இல்லை .ஏமாற்றுவது என்பது இயற்கையின் பார்வையில் மனித இயல்பு இல்லை . அது தீயவர்களின் தீய பண்பு. இது எப்போதும் மறைவொழுக்க நடவடிக்கைகளாகவே இருக்கும் ஏமாற்றுபவர்கள் இயற்கையின் வரம்பிற்கு அப்பாற்பட்டு இயல்புநிலைக்கு மீறிய இயல்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கு . ஆனால் ஏமாற்றப்படுவோம் என்பதை அறியாமல் அதை தடுத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கற்றுக்கொள்ளாமல் போவதால் ஏமாந்துபோவோர்கள் ஏமாந்து போகின்றார்கள்

No comments:

Post a Comment