Tuesday, October 20, 2026

        .   வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்காக ஒருவர் தான் சம்பாதித்த பணத்திற்காக அரசுக்கு விதிமுறைப்படி செலுத்தவேண்டிய வருமான வரியில் தில்லுமுல்லு செய்தால் வரி யோடு 200  சதவீதம் அபராதமும் கட்டவேண்டும் .அதிக உழைப்பு அதிக வரி நிகர லாபம் குறைவு என்ற எண்ணம் அந்த தில்லுமுல்லுகளுக்கு ஒரு காரணம் . அரசுக்கு கட்டவேண்டிய பணத்தை ஏமாற்றினால் இவ்வளவு தண்டனை என்றால் அரசின் பணத்தையே  உழைப்பு ஏதுமின்றி கொள்ளையடிப்பவர்களுக்கு எவ்வளவு தணடனை கொடுக்கவேண்டும் . அவர்கள் அரசியல்வாதிகளாக இருந்தால் தண்டனை இல்லை ஆட்சியில் பதவி வேறு பரிசாக ..அதனால் தான் வேறு எந்த வேலைக்கும் இல்லாத  கூட்டம்  ஆட்சியாளர்களாகவும்  அரசியல்வாதிகளாகவும் வர  போட்டி போடுகின்றது .இந்தியா உழைப்பால் முன்னேறிய பிற நாட்டினர் பாராட்டும்படி முன்னேற்றம் காணவில்லை. இந்தியாவின் முன்னேற்றம் அரசியல்வாதிகள் பீற்றிக்கொள்வதற்காக மட்டும் இருக்கக் கூடாது. அதை பயன் ஒவ்வொரு குடிமகனுக்கும் சென்றடையவேண்டும் 

No comments:

Post a Comment