Monday, October 19, 2026

 ஒரு சமயம்  ஒரு  ஞானி ஒரு கிராமத்திற்கு வந்து ஒரு ஆஸ்ரமத்தை ஏற்படுத்தினார். .அந்த கிராமத்து மக்கள் அவரிடம்   வந்து அவர்களுடைய  குறைகளைக் கூறி மன நிம்மதி பெறுவது வழக்கமானது . ஒருநாள் ஒரு முதியவர் வந்து சமுதாயக் குறையைக் கூறி அதை எப்படிக்கழிவது என்று கேட்டார். ஐயா .இந்தச் சமுதாயம் மேலும் மேலும் சீரழிந்து கொண்டே வருகின்றது . மக்களிடம் உண்மையான மகிழ்ச்சியை முகத்தில் பார்க்க முடியவில்லை .மக்கள் மேலும் மேலும் ஒருவருக்கொருவர் எதிரியாகப் பார்க்கின்றார்கள் .ஒன்றுபட்ட சமுதாயத்தின் முன்னேற்றம் என்பது நமது குறிக்கோள் ,கொள்கை என்றால் ஏன் அதில் குறிப்பிடும்படியான மாற்றத்தைக் காண முடியவில்லை ?இது நாளைக்கு நிஜமாகும் என்று நம் முன்னோர்கள் சொல்லி , முப்பாட்டன் சொல்லி, தாத்தா சொல்லி ,தந்தை சொல்லி பல ஆண்டுகள் இல்லை இல்லை பல யுகங்கள்கடந்து விட்டன .இருந்தும் இந்த நிலையில் மாற்றமே இல்லையே . மாற்றம் வருமா வராதா என்று கேட்டார் .

வரும் ஆனால் வராது என்றும் சொல்லலாம் , வராது ஆனால் வரும் என்றும் சொல்லலாம் . இயற்கையில் செயற்கை கலக்கப்படும் போது குழப்பம் ஏற்படவே செய்யும். கோழி முட்டை வியாபாரி வீட்டில் வளரும் கோழிகள் குஞ்சு பொரிப்ப தில்லை . இறைச்சி விற்கும் வியாபாரி வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளுக்குத்  துன்பம் நிகழ்ந்தால் அதற்கு நீதி கிடைப்பதில்லை .மக்கள் மக்களாகவும் ஆட்சியாளர்கள் ஆட்சியாளர்களாகவும் இருந்து கொண்டு அவரவர் கடமை களை செய்து வாழந்தால் மட்டுமே இந்த நிலையில் மாற்றம் ஏற்படும். முட்டுச் சந்து வரை வந்துவிட்டு வழிகேட்டமாதிரித்தான் . மறைவொழுக்க நடவடிக்கை களினால் உள்ளே ஒரு நிலை வெளியே ஒரு நிலை என்று வாழும் போக்கு ஏறக்குறைய அணைத்து மக்களையும் ஆட்கொண்டு விட்டது .இதை மாற்றுவது தனி மனிதர்களினால் இயலாது. கூட்டு முயற்சி மட்டுமே பயன்தரும். மனிதர்கள் ஒருவருக்கொருவர் விலகிக் கொண்டு வரும் சூழலில் இது கடினமாகி வருகின்றது .எல்லோரும் எப்போதும் ஒன்று போல சிந்திக்காத போது இது சாத்தியமான  இயல்பான வழியேதுமில்லை. ஒவ்வொருவருடைய நலனும் சமுதாயத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லி முடித்தார்.

No comments:

Post a Comment