Monday, December 12, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-

அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தால் எங்கெங்கு வருவாய் அதிகம் வருகின்றதோ அதையல்லாம் அதிகாரிகளளின் துணையுடன்  விவரங்களைத் தெரிந்துகொண்டு ,எதையாவது காரணங்களை சொல்லி அதைத் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்துவிடுவார்கள். பழங்காலத்தில் ஆட்சியாளர்கள் கோயில்களுக்கு பொருளும் நிலமும் வழங்கினார்கள் . இன்றைக்கு அவை திருட ப்பட்டு அல்லது கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன .பல கோயில்கள் சிதிலமடைந்து கேட்பாரற்று இருக்கின்றன . சொத்து அதிகமுள்ள கோயில்களில் காட்டும் அக்கறையில் 1 சதவீதம் கூட சிதிலமடைந்த கோயில்கள் மீது காட்டுவதில்லை . இதைப் புதுப்பிப்பதில் அக்கறை காட்டமாட்டார்கள். அதைப் புதுப்பிக்க பொதுமக்கள் பொதுமக்களிடம் வசூலித்து புதுப்பித்து அவர்களிடம் கொடுத்தால் புன்னகையுடன் வாங்கிக்கொள்வார்கள்..இதில் வேடிக்கை என்னவென்றால் புதிய கோயில்கள் கட்ட விரும்புகின்றார்கள். இதில் செலவுக்கணக்கை மிகைப்படுத்திக் காட்டி  கொள்ளையடிப்பதற்கான வழிகள் நிறைய இருக்கின்றன அரசியல்வாதிகள் துறை எதுவானா லும் அதிகாரிகளையும், அலுவலர்களையும் , ஆசிரியர்களையும் ,பொறிஞர் களையும் நியமிக்கும் பொறுப்பை  எடுத்துக்கொண்டு விடுவார்கள் . துறை சார்ந்த அறிவு இல்லாமையால் ,பெரும்பபாலும் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவதில்லை. பணப் பரிமாற்றமே தேர்ச்சி பெற்றவரைத் தீர்மானிக்கின்றது .தகுதி மிக்கவர் தேர்ந்தெடுக்க ப்படாமல் ,தகுதியில்லாதவர் தேர்ந்தெடுக்கப்படுவதால்  பணியும் சிறப்பாக நடப்பதில்லை.. பெரும்பாலும் இவர்கள் அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளுக்குத் துணைபுரிந்து ஆதாயம் தேடிக்கொள்பவர்களாக இருப்பார்கள்   

Sunday, December 11, 2022

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-11 

தேர்தலின் போது தீயவர்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள் ,நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று சொல்வார்கள் ,தீயவர்களுக்கு நல்லவர்களுக்கும் அவர்கள் சுட்டிக்காட்டும் வேறுபாடு வோட்டுக்குப் பணம் தரும் வேட்பாளர்கள் தீயவர்கள் அப்படிப் பணம் ஏதும் தராதவர்கள் நல்லவர்கள் என்பதாகும் .உண்மையில் பணம் தரும் வேட்பாளர் ஏற்கனவே அரசியலில் பணம் சம்பாதித்தவராக இருப்பார். அதனால் வெற்றிபெற்ற பிறகு செலவுசெய்த பணத்தைப் போல பல மடங்கு சம்பாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் பணத்தை செலவு  செய்வார்கள் . ஆனால் புதிதாக வருபவர்கள் சுயேட்சை வேட்பாளர் களாகவே இருப்பார்கள் ,பழைய, ஏற்கனவே பழக்கமுள்ள தொண்டர்கள் இருக்கும் போது புதியவர்களை ஒரு கட்சி வேட்பாளர்களாக இருக்க அனுமதிப்பதில்லை. இவர்கள் பணம் கொடுக்கக்கூடாது என்பதற்காகக் கொடுக்கவில்லையா ,இல்லை பணம் அவ்வளவு இல்லை என்பதற்காகக் கொடுக்கவில்லையா ? பெரும்பாலும் வெற்றி பெற்று வந்த வேட்பாளர்கள் எல்லோரும் எண்ணத்தாலும் செயலாலும் மாறிவிடுகிறார்கள். நம் நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகள் எல்லோரும் பதவியாலும் அதிகாரத்தாலும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற கொள்கையுடையவர்களாக வே இருக்கின்றார்கள்

அரசியல்வாதிகள் மறைவொழுக்கம் மிக்கவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு நிலையான கொள்கை கிடையாது. போலியாக இருப்பதால் அடிக்கடி நிறம் மாறும். பொய் சொல்லியே மறைவொழுக்க நடவடிக்கைகளை மறைப்பார்கள். மறைவொழுக்கத்தால் புறவெளியில் மட்டுமே ஆதாயம் தேடமுடிவதால் அவர்களுக்கென ஒரு கோஷ்டியை ஏற்படுத்திக்கொள்கின்றார்கள். ஆதாயத்தில் பங்கு கொடுத்து அவர்களையும் மறைவொழுக்க நடவடிக்கையில் ஈடுபடச் செய்கின்றார்கள் .இப்படியொரு கோஷ்டிக்குத் தலைவனாக இருப்பவர்களே பின்னால் ஆள்பவர்களாக வருகின்றார்கள். இந்த வாய்ப்பு கோஷ்டியிலுள்ளவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. தலைவர் தப்பித்தவறி மாட்டிக்கொண்டுவிட்டால் இவர்கள் குற்றச்சாட்டை மறுத்துப் போராடுவார்கள் .வீதியெங்கும் நோட்டிஸ் ஒட்டுவார்கள். மக்களிடையே கலவரத்தைத் தூண்டுவார்கள் .அவர்களுடைய நோக்கம் நீதியை நிலைநாட்டுவதில் இல்லை ,குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறுவதிலிருந்து தப்பித்து தொடர்ந்து மறைவொழுக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதேயாகும்  வழிமுறை தவறாக இருந்தாலும் ஆதாயம் கிடைக்கின்றது என்பதற்காக இன்றைக்கு ச் சமுதாய மக்கள் இப்போக்கை மனதளவில் விரும்புகின்றார்கள் .எல்லோரும் மறைவொழுக்கத்தில் ஈடுபட்டால் சமுதாயத்தில் ஒருவர்கூட உயிர் வாழமுடியாத சூழ்நிலையே உருவாகும் என்பதை க் கருத்திற்கொண்டு ஒவ்வொருவரும் சாகக்கூடாத சமுதாயத்தின் நலத்தை மேம்படுத்த முன்வரவேண்டும்

Saturday, December 10, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே—11 

தேர்தலின் போது தீயவர்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள் ,நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று சொல்வார்கள் ,தீயவர்களுக்கு நல்லவர்களுக்கும் அவர்கள் சுட்டிக்காட்டும் வேறுபாடு வோட்டுக்குப் பணம் தரும் வேட்பாளர்கள் தீயவர்கள் அப்படிப் பணம் ஏதும் தராதவர்கள் நல்லவர்கள் என்பதாகும் .உண்மையில் பணம் தரும் வேட்பாளர் ஏற்கனவே அரசியலில் பணம் சம்பாதித்தவராக இருப்பார். அதனால் வெற்றிபெற்ற பிறகு செலவுசெய்த பணத்தைப் போல பல மடங்கு சம்பாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் பணத்தை செலவு  செய்வார்கள் . ஆனால் புதிதாக வருபவர்கள் சுயேட்சை வேட்பாளர் களாகவே இருப்பார்கள் ,பழைய, ஏற்கனவே பழக்கமுள்ள தொண்டர்கள் இருக்கும் போது புதியவர்களை ஒரு கட்சி வேட்பாளர்களாக இருக்க அனுமதிப்பதில்லை. இவர்கள் பணம் கொடுக்கக்கூடாது என்பதற்காகக் கொடுக்கவில்லையா ,இல்லை பணம் அவ்வளவு இல்லை என்பதற்காகக் கொடுக்கவில்லையா ? பெரும்பாலும் வெற்றி பெற்று வந்த வேட்பாளர்கள் எல்லோரும் எண்ணத்தாலும் செயலாலும் மாறிவிடுகிறார்கள். நம் நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகள் எல்லோரும் பதவியாலும் அதிகாரத்தாலும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற கொள்கையுடையவர்களாக வே இருக்கின்றார்கள்

Friday, December 9, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-10 

           ஆட்சியாளர்கள் மக்கள் குற்றம் புரியாமல் இருக்க அரசாங்கத்தின் பொது அமைப்புக் களை ப் பயன்படுத்துகின்றார்கள் என்று சொல்வதை விட மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மக்களே ஏற்படுத்திக்கொண்ட அமைப்பை  மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து விடக் கூடாது என்பதற்காக நிலைத்திருக்குமாறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருக் கின்றார்கள். மக்களைக் குற்றம் புரிய அச்சப்படுத்தும் இந்த அமைப்புக்கள் ஆட்சியாளர்கள் தங்களுடைய  தவறான செயல்பாடுகளை மட்டுப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு அரசாங்கத்தின் சலுகைகைகளைக் கூடுதலாக அளித்தும், ,உயர்பதவியை வழங்கியும்,  மறைபொருளைக் கொடுத்தும்அவர்களே குற்றவாளியாகும் பொழுது அதிலிருந்து அவர்களை விடுவித்தும், அவர்களும ஊழல் புரிவதற்கான வாய்ப்புக்களை பிரகாசப்படுத்தியும் போன்ற இன்ன பிற செயல்களைச் செய்கின்றார்கள். குற்றம்புரிபவன் ஒரு சாதாரணக் குடிமகனாக இருக்கும் போது சரியான ஆதாரமில்லாமல் வெறும் வாய்மொழிக் குற்றச்சாட்டிற்கே  நிரூபிக்கப்பட்டு சட்டத்தால் தண்டிக்கப்படுவதற்கு முன்பாகவே சொல் லொண்ணா தாக்குதலுக்கு உள்ளாகிறான். சில சமயங்களில் உயிரிழப்பும் ,உடல் ஊணமும் ஏற்படுகின்றது.. குற்றங்களை ஒழிக்க ஏற்படுத்தப்பட்ட இந்த அம்மைப்புக்கள்  அதே குற்றத்தைப்  புரிந்து தண்டித்துவிட்டதாகக்   கூறுவதால் குற்றங்கள் தடுக்கப் படுவதில்லை. தவறான வழிமுறைகளால் குற்றங்கள் தடுக்கப்படும் போது அவை தொடந்து பெருகவே வாய்ப்பிருக்கின்றது. இதனால் அரசும் அரசாங்கமும்  மறைவொழுக்கமாகக்  குற்றச்செயல் களைச் செய்வதை வழக்கமாய்க் கொண்டுள்ளன .சாதாரணக் குடிமக்கள் செய்யும் குற்றங்களைத் தடுக்கும் எந்த பொது அமைப்பும் அரசாங்கம் செய்யும் குற்றங்களைத் தடுக்க ஒரு சிறு முயற்சிகூட எடுத்துக்கொள்வதேயில்லை. உண்மையில் பெரும்பாலான அரசியல்வாதிகள் நேர்மையன்னவர்கள் இல்லை. பதவியால் ஊழல் செய்வதற்காகவே பணம் செலவழிக்கிறார்கள் . ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் . மக்களுக்காக சேவை செய்ய யாரவது சண்டை போட்டுக்கொள்வார்களா. குற்றவாளிகளாலும் , குற்றம் புரிந்த ஆரசியல் வாதிகளாலும் தங்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கின்றது என்பதற்காக பெரும்பாலான பாதுகாவலர்கள்  கடமை தவறிவிடுகிறார்கள். .உண்மையில் இதை எந்தவொரு தனி மனிதராலும் ,அமைப்பாலும் நிரூபிக்கவே முடியாது. அரசாங்கம் நினைத்தால் மட்டுமே முடியும் . அரசாங்கத்தில் நேர்மையானவர்கள் சங்கமித்தல் மட்டுமே இது நிகழும் . இப்படிப்பட்ட நல்ல மாற்றங்கள் நிகழும் வாய்ப்புகள் இந்தியாவில் நாளுக்குநாள் அருகிக்கொண்டே வருவது இருக்கும் ஒரு சில நல்லோரர்களை அச்சமூட்டிவருகின்றது

 

Thursday, December 8, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-9 

சொந்த வீடு கட்ட விரும்பி முயன்றால் அதற்கான வரைபடம், பாதை ,திட்டச் செலவு போன்ற ஆவணங்கள் இருந்தால்தான் அனுமதிப்பார்கள் இது பல மாதங்களாகும் . ஓட்டுநர் உரிமம் வேண்டுமென்றால் பயிற்சி பெற்று தேர்வில் திருப்தியளிக்கவேண்டும் .ஒரு குறிப்பிட்ட பணியில் சேர விரும்பினால் அதற்கான தகுதியை விரும்பப்படுமளவிற்கு நிரூபித்துக் கா ட்டவேண்டும் .எல்லாப்பணிகளுக்கும், எல்லா மக்களுக்கும்  இருக்கும் இந்த வரையறைக்கு விதிவிலக்காக இருப்பவர்கள் இந்திய அரசியவாதிகள் மட்டும்  தான் .இவர்கள் ஆளுமைக்குரிய தகுதியை நேர்மையான முறையில் எந்த நிலையிலும்  நிரூபிப்பதில்லை. அரசியல், பொருளாதாரம் ,வர்த்தகம் சட்டம் ஒழுங்கு பற்றிய குறைந்தபட்ச அறிவும் ,கல்வித்தகுதியும் கொண்டிருப்பதில்லை. .பணத்தாலும் ,அதிகாரத்தாலும் , போலியான வாக்குறுதிகளாலும் தேர்தலில் வெற்றிபெற்று பதவியைக் கைப்பற்றி சுயநலத்தால் மறைவொழுக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டைத் தவறான வழியில் நடத்திச் செல்கின்றார்கள். செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். .இவர்களால் மக்களும் மறைவொழுக்க நாயகர்களாக மாறிவருவதால் இனி திருத்தவே முடியாத பாழான சமுயாதமே எஞ்சி வாழும் . மக்களின் மறைவொழுக்கம் அந்தச் சமுதாயத்தையும் விழுங்காமல் விடுவதில்லை. நூற்றுக்கணக்கான கோடிகளில் திட்டம் என்ற பெயரில் செலவிற்கு அனுமதிப்பார்கள். .இதற்கு வரைபடமோ , செலவுக்கணக்கிற்கான விவரங்களோ இருப்பதில்லை. இதெல்லாம் அவர்களுடையே விருபத்திற்கேற்றவாறு பின்னல் செய்யப்படுபவையாகும் .பெரும்பாலும் இது போன்ற திட்டங்களில் செலவு பலமடங்கு அதிகமாக இருக்கும். இந்தக்கூடுதல் செலவு ஊழலுக்கு உள்ளாகி யாருக்கும் தெரியாமல் மறைந்துவிடுகிறது. இந்த ஊழலை யாராலும் நிருபிக்கவே முடியாது. ஏனெனில் 10 கோடி செலவிற்கு 100 கோடி அரசாங்கத்தின் முன் அனுமதி உள்ளது. பொதுவாக பெரிய அளவில் நடக்கும் ஊழல்கள் யாவும் அரசாகத்திற்குத் தெரியாமல் நடக்கவே முடியாது. .அரசாங்கமே இதில் மறவொழுக்கமாக ஈடுபடுவதால் ,அவர்கள் எப்போதும் கண்டும் காணாமல் இருந்து விடுவார்கள் .எக்காலத்திலும் நிரூபிக்க முடியாமல் மக்களும் மனதிற்குள் கொதிப்பதோடு விட்டுவிடுவார்கள்

திட்டத்தை விருப்பமாகச்  சொல்லலாம். அதற்கான வல்லுநர்களே அதை முழுமையாக நிறைவேற்றவேண்டும் . ஆட்சியாளரே திட்டத்தை வரைந்து, அனைத்துச் துறை சார்ந்த செயல்களையும் தானே செய்வது தவறாகும் . ஆட்சியாளர் சகலகலா வல்லவரில்லை . உண்மையில் நம்முடைய அரசியல் சட்டங்களை மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு  திருத்த வேண்டும். ஏனெனில் இன்றைக்குச் சட்டங்கள் மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுபோன்ற ஒரு தோற்றத்தில் தீயவர்களுக்கே பாதுகாப்பளிப்பதாக இருக்கின்றது .சட்டம் ஆதாரம் இருந்தால்தான் தண்டிக்கும் .என்பதைத் தெரிந்து கொண்டு ஆதாரமில்லாமல் குற்றச் செயல்களை செய்யும் போக்கை வளர்த்து வருகின்றார்கள். 100 குற்றங்களில் 1 குற்றவாளி மட்டும் தண்டிக்கப்படுகின்றான் 99 குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றார்கள் என்றால் அந்தச் சட்டங்கள் எப்படி மக்களுக்கு நன்மையளிக்கும் .இந்தச் சமுதாயம் எப்படி நலமாக முன்னேறும் ? சட்டங்கள் நேர்மையானவர்களால்  மாற்றப்படவேண்டும்       

 

Wednesday, December 7, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-8 

அரசியல்வாதிகள் எதற்காக அதிகாரம் கொடுக்கப்பட்டதோ அதை அதற்காகவே பயன்படுத்தப்படுவதேயில்லை. மக்களை ஏமாற்றுவதற்கு அவர்களுடைய அதிகாரத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள், தவறுகள் செய்வதற்கு கொடுக்கப்படும் அனுமதியாகக் கருதுகின்றார்கள் செய்த தவறுகளை மறைப்பதற்கும் தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்கும்  அதிகாரத்தையே ஒரு கேடையமாகக் கொள்கின்றார்கள்  இதற்குக் காரணம் அவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய வலிமையான ஜனநாயக அமைப்பு ஜனநாயகத்தில் இல்லை..அப்படியொரு அமைப்பை நல்லோர் ஒருவர் முயன்றால் அதற்கு மக்கள் ஆதரவும் இருப்பதில்லை ,அரசியல்வாதிகளும் தங்கள் அதிகாரத்தால் அதன் வளர்ச்சியைத்  தடுத்து நிறுத்திவிடுகின்றார்கள்  தீயவர்களைத் கட்டுப்படுத்தி  தீமைகளைத் தடுக்கக் கொடுக்கப்பட்ட அதிகாரம் வேண்டாத தீயவர்கள் பாதிக்கப்படவும் வேண்டிய தீயவர்கள் பாதுகாப்பாய் இருக்கவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது இதனால் வேண்டாத நல்லவர்கள் தீயவர்களாக்கப்படுவதும் ,வேண்டிய தீயவர்கள் நல்லவர்களாக்கப்படுவதும் சட்டத்தையும் ஏமாற்றி வளர்ந்து சமுதாயத்தில்  எதிர்மறையான இழப்புக்களை   ஏற்படுத்து கின்றன   மறைவொழுக்கத்தால் தவறுகள் செய்வதற்கும், தீயோர்களின் கூட்டணியுடன் அவற்றை விரிவுபடுத்துவதற்கும் துணிவு கொள்கின்றார்கள் . கூட்டணி அவர்களுக்கு தைரியத்தையும் ,சமூகப்  பாதுகாப்பையும் தருகின்றது உழைப்பின்றிக் கிடைக்கும் பொருளைக் கொண்டு எல்லோரையும் எல்லாவற்றையும் விலைக்கு வாங்கிவிடுகின்றார்கள். கூட்டணியையும் சொந்தச் செலவின்றி தக்கவைத்துக் கொள்கின்றார்கள். பதவியால் தவறுகள் செய்வதற்கு ஒத்துழைப்பு கொடுப்பவர்களுக்கு பொருளும் உயர் பதவியும் கொடுத்து கைப்பாவையாக வைத்திருப்பார்கள் . எதிராகச் செயல்படுபவர்களை அதிகராத்தல் பணி இடமாற்றம் , உயர்பதவி மறுப்பு ,அரசின் சலுகைகள் குறைப்பு போன்ற வற்றால் அச்சப்படுத்துவார்கள்

Tuesday, December 6, 2022

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே-7 

   கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்று சொல்வார்கள். அதுபோல ஏமாற்றிப் பிழைப்பவர்கள் அவர்களாலேயே அழிந்து போவார்கள் என்று சொல்லலாம் கத்திச் சண்டையில் ஒருவர் தோற்பதும் அல்லது அழிவதும் உடனடியாக நடந்து விடுகின்றது . ஆனால் சமுதாயம் தழுவிய போராட்டத்தில் இது மெதுவாக நிகழ்கின்றது .இறுதியில் அழிவு ஒட்டுமொத்தமாக ஏற்படுகின்றது

     . பொதுவாக ஏமாற்றிப்பிழைப்பவர்கள் அவர்களுடைய பாதுகாப்பிற்காக கூட்டுமுயற்சியில் செய்வதைப் பழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அரசியல்வாதிகள் அதிகாரிகளுடனும்  அதிகாரிகள் அலுவலர்களுடனும் ,அலுவலர்கள்  மறைவொழுக்கத்திற்காக பிற அலுவலர் களுடன் நட்புடனும்  இணைந்து செயல்படுகிறார்கள். இந்த நட்புணர்வு மக்கள் நலத்திற்காகவோ ,தொழில் நேர்மைக்காகவோ ஏற்பட்டதில்லை ,மறைவொழுக்க நடவடிக்கைக்காக பின்பற்றப்பட்டு வருகின்றது பொதுவாக சுயலாபம் கருதி பணியாற்றுபவர்கள் கிடைக்கும் எதையும் முழுமையாக அனுபவிக்கவே விரும்புவார்கள் இதனால் .பங்கீடு செய்வதில் தவறு செய்வார்கள்.மறைவொழுக்க நடவடிக்கைகளுக்குள் மற்றுமொரு மறைவொழுக்கம் தூண்டப்படுகிறது .ஏமாற்றுபவர்களுக்கு எந்த நிலையிலும் முழுத் திருப்தி  ஏற்படுவதில்லை  அதனால் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றுபவர் களையே ஏமாற்ற விரும்பிச் செயல்படுகிறார்கள்   .இதில் ஏற்படும் அதிருப்தி வெளிப்பட்டுத் தெரியவரும்போது  நட்பை நொடிப்பொழுதில் பகைமையாக்கி விடுகின்றது  ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளும் நிலைகுத் தள்ளப்படுகின்றார்கள்  கூட்டணியாகச் செயல்பட்டவர்கள் கோஷ்டியாகச் சண்டையிடும் அழிவும் அதிகமாக இருக்கின்றது. 

       இந்தச் சமுதாயம் திருந்திவிடும் என்ற நம்பிக்கையுடன் இன்றைக்கு சமுதாயத்தில் வெகு சில அப்பாவி ஏமாறுபவர்களே இருக்கிறார்கள் .அதற்குக் காரணம் எல்லோரும் ஏற்கனவே ஒருவரையொருவர் ஏமாற்றும் ஏமாற்றுபவர்களாக எண்ணத்தாலும் செயலாலும் மாறிப்போயிருக்கின்றார்கள் .ஒரு சில ஏமாற்றுபவர்களைத் திருத்த முடியும் , தண்டிக்கவும் முடியும். ஆனால் எல்லோரும் ஏமாற்றுபவர்களாக மாறிவிட்டால் திருத்தவும் முடியாது தண்டிக்கவும் முடியாது . தண்டனை அளித்தால் அதிலிருந்து வெகு எளிதாகத் தப்பித்துக் கொள்வார்கள். மறைவொழுக்கத்தால் வளரும் ஒரு சமுதாயத்திற்கு வளமான எதிர் காலம் இருக்கவேமுடியாது . வளர்ச்சிக்கான திட்டங்களின் செயல்பாடுகளின்றி முன் னேறியதாகச் சொல்லிக்கொள்வதால்  முன்னேற்றத்தை முழுமையாக இழந்து நாட்டிற்கு வாரிசின்றி அழிந்து போகும். ஒரு நாடு அழிந்து போகுமானால் அதற்குக் காரணம் நாட்டு மக்கள் இல்லை ,நாட்டை ஆளும் அரசியல்வாதிகளே .  பொறுப்புணர்வுடன் கடமையாற்றத் தவறிய ஆட்சியாளர்களின் தகுதியின்மையே நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றது. மக்களும் ஏமாற்றுவதால் கிடைக்கும் ஆதாயத்தை மனதிற்குள் விரும்புவதால் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தாலும் மனத்தால் மறுப்பதில்லை. .மக்களின் இந்த பலவீனமே அரசியல்வாதிகள் தொடர்ந்து மறைவொழுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாத துணிவு தருகின்றது