ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே-
அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தால் எங்கெங்கு
வருவாய் அதிகம் வருகின்றதோ அதையல்லாம் அதிகாரிகளளின் துணையுடன் விவரங்களைத் தெரிந்துகொண்டு ,எதையாவது காரணங்களை
சொல்லி அதைத் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்துவிடுவார்கள். பழங்காலத்தில் ஆட்சியாளர்கள் கோயில்களுக்கு
பொருளும் நிலமும் வழங்கினார்கள் . இன்றைக்கு அவை திருட ப்பட்டு அல்லது கொள்ளையடிக்கப்பட்டு
வருகின்றன .பல கோயில்கள் சிதிலமடைந்து கேட்பாரற்று இருக்கின்றன . சொத்து அதிகமுள்ள
கோயில்களில் காட்டும் அக்கறையில் 1 சதவீதம் கூட சிதிலமடைந்த கோயில்கள் மீது காட்டுவதில்லை
. இதைப் புதுப்பிப்பதில் அக்கறை காட்டமாட்டார்கள். அதைப் புதுப்பிக்க பொதுமக்கள் பொதுமக்களிடம்
வசூலித்து புதுப்பித்து அவர்களிடம் கொடுத்தால் புன்னகையுடன் வாங்கிக்கொள்வார்கள்..இதில்
வேடிக்கை என்னவென்றால் புதிய கோயில்கள் கட்ட விரும்புகின்றார்கள். இதில் செலவுக்கணக்கை
மிகைப்படுத்திக் காட்டி கொள்ளையடிப்பதற்கான
வழிகள் நிறைய இருக்கின்றன அரசியல்வாதிகள் துறை எதுவானா லும் அதிகாரிகளையும், அலுவலர்களையும்
, ஆசிரியர்களையும் ,பொறிஞர் களையும் நியமிக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டு விடுவார்கள் . துறை சார்ந்த அறிவு இல்லாமையால் ,பெரும்பபாலும்
தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவதில்லை. பணப் பரிமாற்றமே தேர்ச்சி பெற்றவரைத் தீர்மானிக்கின்றது
.தகுதி மிக்கவர் தேர்ந்தெடுக்க ப்படாமல் ,தகுதியில்லாதவர் தேர்ந்தெடுக்கப்படுவதால் பணியும் சிறப்பாக நடப்பதில்லை.. பெரும்பாலும் இவர்கள்
அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளுக்குத் துணைபுரிந்து ஆதாயம் தேடிக்கொள்பவர்களாக இருப்பார்கள்
No comments:
Post a Comment