ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே-7
கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்று
சொல்வார்கள். அதுபோல ஏமாற்றிப் பிழைப்பவர்கள் அவர்களாலேயே அழிந்து போவார்கள் என்று
சொல்லலாம் கத்திச் சண்டையில் ஒருவர் தோற்பதும் அல்லது அழிவதும் உடனடியாக நடந்து விடுகின்றது
. ஆனால் சமுதாயம் தழுவிய போராட்டத்தில் இது மெதுவாக நிகழ்கின்றது .இறுதியில் அழிவு
ஒட்டுமொத்தமாக ஏற்படுகின்றது
. பொதுவாக ஏமாற்றிப்பிழைப்பவர்கள் அவர்களுடைய
பாதுகாப்பிற்காக கூட்டுமுயற்சியில் செய்வதைப் பழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அரசியல்வாதிகள்
அதிகாரிகளுடனும் அதிகாரிகள் அலுவலர்களுடனும்
,அலுவலர்கள் மறைவொழுக்கத்திற்காக பிற அலுவலர்
களுடன் நட்புடனும் இணைந்து செயல்படுகிறார்கள்.
இந்த நட்புணர்வு மக்கள் நலத்திற்காகவோ ,தொழில் நேர்மைக்காகவோ ஏற்பட்டதில்லை ,மறைவொழுக்க
நடவடிக்கைக்காக பின்பற்றப்பட்டு வருகின்றது பொதுவாக சுயலாபம் கருதி பணியாற்றுபவர்கள்
கிடைக்கும் எதையும் முழுமையாக அனுபவிக்கவே விரும்புவார்கள் இதனால் .பங்கீடு செய்வதில்
தவறு செய்வார்கள்.மறைவொழுக்க நடவடிக்கைகளுக்குள் மற்றுமொரு மறைவொழுக்கம் தூண்டப்படுகிறது
.ஏமாற்றுபவர்களுக்கு எந்த நிலையிலும் முழுத் திருப்தி ஏற்படுவதில்லை அதனால் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றுபவர் களையே ஏமாற்ற
விரும்பிச் செயல்படுகிறார்கள் .இதில் ஏற்படும்
அதிருப்தி வெளிப்பட்டுத்
தெரியவரும்போது நட்பை நொடிப்பொழுதில் பகைமையாக்கி விடுகின்றது
ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளும் நிலைகுத்
தள்ளப்படுகின்றார்கள் கூட்டணியாகச் செயல்பட்டவர்கள்
கோஷ்டியாகச் சண்டையிடும் அழிவும் அதிகமாக இருக்கின்றது.
இந்தச் சமுதாயம் திருந்திவிடும் என்ற நம்பிக்கையுடன்
இன்றைக்கு சமுதாயத்தில் வெகு சில அப்பாவி ஏமாறுபவர்களே இருக்கிறார்கள் .அதற்குக் காரணம்
எல்லோரும் ஏற்கனவே ஒருவரையொருவர் ஏமாற்றும் ஏமாற்றுபவர்களாக எண்ணத்தாலும் செயலாலும்
மாறிப்போயிருக்கின்றார்கள் .ஒரு சில ஏமாற்றுபவர்களைத் திருத்த முடியும் , தண்டிக்கவும்
முடியும். ஆனால் எல்லோரும் ஏமாற்றுபவர்களாக மாறிவிட்டால் திருத்தவும் முடியாது தண்டிக்கவும்
முடியாது . தண்டனை அளித்தால் அதிலிருந்து வெகு எளிதாகத் தப்பித்துக் கொள்வார்கள்.
மறைவொழுக்கத்தால் வளரும் ஒரு சமுதாயத்திற்கு
வளமான எதிர் காலம் இருக்கவேமுடியாது . வளர்ச்சிக்கான திட்டங்களின் செயல்பாடுகளின்றி
முன் னேறியதாகச் சொல்லிக்கொள்வதால் முன்னேற்றத்தை
முழுமையாக இழந்து நாட்டிற்கு வாரிசின்றி அழிந்து போகும். ஒரு நாடு அழிந்து போகுமானால் அதற்குக் காரணம்
நாட்டு மக்கள் இல்லை ,நாட்டை ஆளும் அரசியல்வாதிகளே . பொறுப்புணர்வுடன் கடமையாற்றத் தவறிய ஆட்சியாளர்களின்
தகுதியின்மையே நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றது. மக்களும் ஏமாற்றுவதால்
கிடைக்கும் ஆதாயத்தை மனதிற்குள் விரும்புவதால் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தாலும்
மனத்தால் மறுப்பதில்லை. .மக்களின் இந்த பலவீனமே அரசியல்வாதிகள் தொடர்ந்து மறைவொழுக்க
நடவடிக்கைகளை மேற்கொள்ளாத துணிவு தருகின்றது
No comments:
Post a Comment