Saturday, December 10, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே—11 

தேர்தலின் போது தீயவர்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள் ,நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று சொல்வார்கள் ,தீயவர்களுக்கு நல்லவர்களுக்கும் அவர்கள் சுட்டிக்காட்டும் வேறுபாடு வோட்டுக்குப் பணம் தரும் வேட்பாளர்கள் தீயவர்கள் அப்படிப் பணம் ஏதும் தராதவர்கள் நல்லவர்கள் என்பதாகும் .உண்மையில் பணம் தரும் வேட்பாளர் ஏற்கனவே அரசியலில் பணம் சம்பாதித்தவராக இருப்பார். அதனால் வெற்றிபெற்ற பிறகு செலவுசெய்த பணத்தைப் போல பல மடங்கு சம்பாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் பணத்தை செலவு  செய்வார்கள் . ஆனால் புதிதாக வருபவர்கள் சுயேட்சை வேட்பாளர் களாகவே இருப்பார்கள் ,பழைய, ஏற்கனவே பழக்கமுள்ள தொண்டர்கள் இருக்கும் போது புதியவர்களை ஒரு கட்சி வேட்பாளர்களாக இருக்க அனுமதிப்பதில்லை. இவர்கள் பணம் கொடுக்கக்கூடாது என்பதற்காகக் கொடுக்கவில்லையா ,இல்லை பணம் அவ்வளவு இல்லை என்பதற்காகக் கொடுக்கவில்லையா ? பெரும்பாலும் வெற்றி பெற்று வந்த வேட்பாளர்கள் எல்லோரும் எண்ணத்தாலும் செயலாலும் மாறிவிடுகிறார்கள். நம் நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகள் எல்லோரும் பதவியாலும் அதிகாரத்தாலும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற கொள்கையுடையவர்களாக வே இருக்கின்றார்கள்

No comments:

Post a Comment