ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே-11
தேர்தலின் போது தீயவர்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள்
,நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று சொல்வார்கள் ,தீயவர்களுக்கு நல்லவர்களுக்கும்
அவர்கள் சுட்டிக்காட்டும் வேறுபாடு வோட்டுக்குப் பணம் தரும் வேட்பாளர்கள் தீயவர்கள்
அப்படிப் பணம் ஏதும் தராதவர்கள் நல்லவர்கள் என்பதாகும் .உண்மையில் பணம் தரும் வேட்பாளர்
ஏற்கனவே அரசியலில் பணம் சம்பாதித்தவராக இருப்பார். அதனால் வெற்றிபெற்ற பிறகு செலவுசெய்த
பணத்தைப் போல பல மடங்கு சம்பாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் பணத்தை செலவு செய்வார்கள் . ஆனால் புதிதாக வருபவர்கள் சுயேட்சை
வேட்பாளர் களாகவே இருப்பார்கள் ,பழைய, ஏற்கனவே பழக்கமுள்ள தொண்டர்கள் இருக்கும் போது
புதியவர்களை ஒரு கட்சி வேட்பாளர்களாக இருக்க அனுமதிப்பதில்லை. இவர்கள் பணம் கொடுக்கக்கூடாது
என்பதற்காகக் கொடுக்கவில்லையா ,இல்லை பணம் அவ்வளவு இல்லை என்பதற்காகக் கொடுக்கவில்லையா
? பெரும்பாலும் வெற்றி பெற்று வந்த வேட்பாளர்கள் எல்லோரும் எண்ணத்தாலும் செயலாலும்
மாறிவிடுகிறார்கள். நம் நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகள் எல்லோரும் பதவியாலும் அதிகாரத்தாலும்
பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற கொள்கையுடையவர்களாக வே இருக்கின்றார்கள்
அரசியல்வாதிகள் மறைவொழுக்கம் மிக்கவர்களாக
இருக்கின்றார்கள். அவர்களுக்கு நிலையான கொள்கை கிடையாது. போலியாக இருப்பதால் அடிக்கடி
நிறம் மாறும். பொய் சொல்லியே மறைவொழுக்க நடவடிக்கைகளை மறைப்பார்கள். மறைவொழுக்கத்தால்
புறவெளியில் மட்டுமே ஆதாயம் தேடமுடிவதால் அவர்களுக்கென ஒரு கோஷ்டியை ஏற்படுத்திக்கொள்கின்றார்கள்.
ஆதாயத்தில் பங்கு கொடுத்து அவர்களையும் மறைவொழுக்க நடவடிக்கையில் ஈடுபடச் செய்கின்றார்கள்
.இப்படியொரு கோஷ்டிக்குத் தலைவனாக இருப்பவர்களே பின்னால் ஆள்பவர்களாக வருகின்றார்கள்.
இந்த வாய்ப்பு கோஷ்டியிலுள்ளவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. தலைவர் தப்பித்தவறி மாட்டிக்கொண்டுவிட்டால்
இவர்கள் குற்றச்சாட்டை மறுத்துப் போராடுவார்கள் .வீதியெங்கும் நோட்டிஸ் ஒட்டுவார்கள்.
மக்களிடையே கலவரத்தைத் தூண்டுவார்கள் .அவர்களுடைய நோக்கம் நீதியை நிலைநாட்டுவதில் இல்லை
,குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறுவதிலிருந்து தப்பித்து தொடர்ந்து மறைவொழுக்க
நடவடிக்கைகளில் ஈடுபடுவதேயாகும் வழிமுறை தவறாக
இருந்தாலும் ஆதாயம் கிடைக்கின்றது என்பதற்காக இன்றைக்கு ச் சமுதாய மக்கள் இப்போக்கை
மனதளவில் விரும்புகின்றார்கள் .எல்லோரும் மறைவொழுக்கத்தில் ஈடுபட்டால் சமுதாயத்தில்
ஒருவர்கூட உயிர் வாழமுடியாத சூழ்நிலையே உருவாகும் என்பதை க் கருத்திற்கொண்டு ஒவ்வொருவரும்
சாகக்கூடாத சமுதாயத்தின் நலத்தை மேம்படுத்த முன்வரவேண்டும்
No comments:
Post a Comment