ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே-9
சொந்த வீடு கட்ட விரும்பி முயன்றால் அதற்கான
வரைபடம், பாதை ,திட்டச் செலவு போன்ற ஆவணங்கள் இருந்தால்தான் அனுமதிப்பார்கள் இது பல
மாதங்களாகும் . ஓட்டுநர் உரிமம் வேண்டுமென்றால் பயிற்சி பெற்று தேர்வில் திருப்தியளிக்கவேண்டும்
.ஒரு குறிப்பிட்ட பணியில் சேர விரும்பினால் அதற்கான தகுதியை விரும்பப்படுமளவிற்கு நிரூபித்துக்
கா ட்டவேண்டும் .எல்லாப்பணிகளுக்கும், எல்லா மக்களுக்கும் இருக்கும் இந்த வரையறைக்கு விதிவிலக்காக இருப்பவர்கள்
இந்திய அரசியவாதிகள் மட்டும் தான் .இவர்கள்
ஆளுமைக்குரிய தகுதியை நேர்மையான முறையில் எந்த நிலையிலும் நிரூபிப்பதில்லை. அரசியல், பொருளாதாரம் ,வர்த்தகம்
சட்டம் ஒழுங்கு பற்றிய குறைந்தபட்ச அறிவும் ,கல்வித்தகுதியும் கொண்டிருப்பதில்லை.
.பணத்தாலும் ,அதிகாரத்தாலும் , போலியான வாக்குறுதிகளாலும் தேர்தலில் வெற்றிபெற்று பதவியைக்
கைப்பற்றி சுயநலத்தால் மறைவொழுக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டைத் தவறான வழியில்
நடத்திச் செல்கின்றார்கள். செல்வதையே
வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். .இவர்களால் மக்களும் மறைவொழுக்க நாயகர்களாக மாறிவருவதால்
இனி திருத்தவே முடியாத பாழான சமுயாதமே எஞ்சி வாழும் . மக்களின் மறைவொழுக்கம் அந்தச்
சமுதாயத்தையும் விழுங்காமல் விடுவதில்லை. நூற்றுக்கணக்கான கோடிகளில் திட்டம் என்ற பெயரில் செலவிற்கு அனுமதிப்பார்கள்.
.இதற்கு வரைபடமோ , செலவுக்கணக்கிற்கான விவரங்களோ இருப்பதில்லை. இதெல்லாம் அவர்களுடையே
விருபத்திற்கேற்றவாறு பின்னல் செய்யப்படுபவையாகும் .பெரும்பாலும் இது போன்ற திட்டங்களில்
செலவு பலமடங்கு அதிகமாக இருக்கும். இந்தக்கூடுதல் செலவு ஊழலுக்கு உள்ளாகி யாருக்கும்
தெரியாமல் மறைந்துவிடுகிறது. இந்த
ஊழலை யாராலும் நிருபிக்கவே முடியாது. ஏனெனில் 10 கோடி செலவிற்கு 100 கோடி அரசாங்கத்தின்
முன் அனுமதி உள்ளது. பொதுவாக பெரிய அளவில் நடக்கும் ஊழல்கள் யாவும் அரசாகத்திற்குத்
தெரியாமல் நடக்கவே முடியாது. .அரசாங்கமே இதில் மறவொழுக்கமாக ஈடுபடுவதால் ,அவர்கள் எப்போதும்
கண்டும் காணாமல் இருந்து விடுவார்கள் .எக்காலத்திலும் நிரூபிக்க முடியாமல் மக்களும்
மனதிற்குள் கொதிப்பதோடு விட்டுவிடுவார்கள்
திட்டத்தை விருப்பமாகச் சொல்லலாம். அதற்கான வல்லுநர்களே அதை முழுமையாக நிறைவேற்றவேண்டும்
. ஆட்சியாளரே திட்டத்தை வரைந்து, அனைத்துச் துறை சார்ந்த செயல்களையும் தானே செய்வது
தவறாகும் . ஆட்சியாளர் சகலகலா வல்லவரில்லை . உண்மையில் நம்முடைய அரசியல் சட்டங்களை
மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு திருத்த வேண்டும்.
ஏனெனில் இன்றைக்குச் சட்டங்கள் மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுபோன்ற ஒரு தோற்றத்தில்
தீயவர்களுக்கே பாதுகாப்பளிப்பதாக இருக்கின்றது .சட்டம் ஆதாரம் இருந்தால்தான் தண்டிக்கும்
.என்பதைத் தெரிந்து கொண்டு ஆதாரமில்லாமல் குற்றச் செயல்களை செய்யும் போக்கை வளர்த்து
வருகின்றார்கள். 100 குற்றங்களில் 1 குற்றவாளி மட்டும் தண்டிக்கப்படுகின்றான் 99 குற்றவாளிகள்
தப்பித்து விடுகின்றார்கள் என்றால் அந்தச் சட்டங்கள் எப்படி மக்களுக்கு நன்மையளிக்கும்
.இந்தச் சமுதாயம் எப்படி நலமாக முன்னேறும் ? சட்டங்கள் நேர்மையானவர்களால் மாற்றப்படவேண்டும்
No comments:
Post a Comment