Sunday, December 25, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

தொழில் துறையில் முன்னணி நாடாக்கிக் காட்டுகின்றேன் என்றும் மாநிலமாக்கிக் காட்டுகின்றேன் என்றும்  பல ஆட்சியாளர்கள் வெளிநாட்டி லிருந்து முதலீட்டாளர்களை வரவழைத்து சில நாட்கள் அரசாங்கச் செலவில் கருத்தரங்கம் நடந்துவார்கள் .இதன் மூலம் நாட்டிற்குப்  பல இழப்புக்களே ஏற்படுகின்றது . முதலில் தொழில் தொடங்கவரும் வெளிநாட்டினருக்கு அளவில்லாத சலுகைகள் கொடுப்பதின் மூலம் நம் வளர்ச்சியில்  ஒரு பகுதியை முன் கூட்டியே அடகுவைத்து விடுகின்றோம் .நம்முடைய கனிம வளத்தையும் மனித வளத்தையும் பயன்படுத்தி ஆதாயத்தில் பெரும்பகுதியை அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள் .ஆட்சியாளர்க்குடன் கூட்டுச் சேர்ந்து எழுதப்படாத ஒப்பந்தங்களை மேற்கொள்கிறார்கள் .ஆட்சியாளர்களும் அவர்களுடைய கணக்குக் காட்டமுடியாத பணத்தை முதலீடு செய்ய எது சரியான தொழில் என்பதை இந்த ஆலோசனைக்கு கூட்டம் மூலம் முடிவு செய்கின்றார்கள் .வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அறிமுகத்தையும் நட்பையும் ஏற்படுத்திக் கொள்ளவும்  , எதிர்காலத்தில் கருப்புப் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யவும் இதைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். பலமுறை வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தி சில தொழில்கள் தொடங்கப்பட்டாலும் அதனால் நாடு சரியான முறையில் வளர்ச்சி பெறவில்லை. மாறாக ஆட்சியாளர்கள் மட்டுமே முன்னேறியிருக்கின்றார்கள் ..ஒரே உழைப்பிற்கு வெளிநாட்டினர் அதிக ஊதியமும் இந்தியர்கள் குறைந்த ஊதியமும் பெறுவதும், இந்தியாவில் பயன்படுத்திக் கொள்ளப்படாத கனிமவளத்தை குறைந்த செலவில் பெற்று பயன்படுத்திக்கொள்ளவும், உற்பத்தியில் பெரும்பகுதியை மக்கள் தொகை மிக்க இந்தியாவில் எளிதில் சந்தைப்படுத்தவும் , இந்தியாவில் விற்பனை செய்யமுடியாத விலையுயர்ந்த பொருட்களை குறைந்த செலவு மற்றும் வரிகளுடன் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இங்கு தொழில் தொடங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுகூலமாக இருக்கின்றது இதனால் இந்தியாவில் தொலாளிகள் கிடைக்கின்றார்கள் ஆனால் முதலீட்டாளர்கள் ,தொழில் முனைவோர்கள் கிடைப்பதில்லை .இந்தியர்களில் கல்வி ,உழைப்பு ,அனைத்தும் அவர்களுடைய சொந்த நாட்டிருக்கே பயன்தரவேண்டும். இந்தியர் களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்கள் தொழில் கல்வி கற்றுத் தேர்ச்சி பெறுமாறு செய்து  இந்தியாவில் தொழில் தொடங்க முயற்சி மேற் கொள்ள வேண்டும். இதனால் இந்தியாவில் நிரந்தரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். இது கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி வளர்ச்சியை நிலைப்படுத்தும். இந்தியக் குடிமக்களின் மதிப்பும் .இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்த்தும் .இந்தக்கனவு நிஜமாக வேண்டுமானால் ,இந்தியாவிற்கு அப்துல் கலாம் போன்ற கொளகைப்பிடிப்புடன் கூடிய தகுதியான தலைவர்கள், தலைவர்களுக்குச் சரியாக வழிகாட்டலும் ஒத்துழைப்பும் தரக்கூடிய துணைவர்களும்  வேண்டும்           

Saturday, December 24, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

இந்தியாவில் கனிம வளம் நிறைய இருக்கின்றது.  மக்கள் தொகை மிகுந்து இருப்பதும் , பழங்காலத்திலிருந்தே நாட்டை அபகரிக்க  எதிரிகள் ஊடுறுவிப் போராடியதும் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றது .நாட்டின் வளங்களைப் பொதுவுடைமையாக்காமல் தனிவுடைமையாக்குக்கும் போக்கால் அவற்றின் பயன்பாட்டைகாலங்காலமாய் இழந்துவருகின்றோம்.கனிம வளங்கள் கிடைக் கும் இடங்களை முன்னறிந்து அவற்றைப்  பயன்பாட்டிற்கு கொண்டு வந்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த  வேண்டும் .அவை நாட்டின் சொத்து . ஆட்சியாளர்கள் தங்களின் சொத்துப்போல உரிமை கொண்டு அனுபவிக்க நினைக்கிறார்கள் .கனிம வளம் திருட்டுப் போக வாய்ப்பில்லை. ஏனெனில் இவையாவும் திறந்த வெளியில்  இருப்பதுடன் ,தனி ஒருவரால் நீண்ட காலம் மறவொழுக்கச் செயலாகச் செய்யமுடியாது. அரசாகத்திற்குத் தெரியாமல் யாரவது ஆற்று மணலை அள்ளிக் கொண்டே இருக்கமுடியுமா ? காட்டு மரங்களை வெட்டி கட த்திக்கொண்டே போக முடியுமா ? சுரங்கம் வெட்டி தாதுப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியுமா ? ஆட்சியாளர்களின் துணை இல்லாமல் ,தனியொருவரால் இத்தகைய தேசத் துரோகச் செயல்களைச் செய்யவே முடியாது. போதிய பாதுகாப்பு அமைப்புக்கள் இருந்தும் தனியொருவர் தொடர்ந்து குற்றச் செயல்களைச் செய்து வருவதை கட்டுப்படுத்த முடியாவிட்டால் அது அரசாங்கத்தின் அறியாமையை இல்லை, பலவீனம் .

கனிம வளங்களை நாட்டுக்காகப் பயன்படுத்தும் போது ,எல்லோருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கின்றது. எல்லோரும் சம்பாதிப்பதால் வறுமையால் குற்றங்கள் நிகழ்வதில்லை .பணப்புழக்கத்தால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கின்றது . அவர்கள் உயிர்வாழ நல்ல உணவுப் பொருட்களை வாங்குவார்கள். அதாவது நாட்டில் இயல்பாக விவசாய உற்பத்தி அதிகரிக்கின்றது. ஆட்சியாளர்கள் நாட்டின் வளங்களை அபகரித்துக் கொண்டால் பணம் பெட்டகங்களிலும் ,வங்கிகளும் முடங்கிப்போகின்றன .மக்களின் வருமானம் குறைந்து போகின்றது .விவசாயத்தால் பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும் வாங்கப்படுவதில்லை .பொருள் வீணாக வீணாக விவசாயிகளுக்கு விவசாயத்தில் ஈடுபாடு குறைந்து போகின்றது . இது நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்துவிடும் . நாட்டிலுள்ள பொருளாதார வல்லுநர்கள் இது பற்றிய எச்சரிக்கையை தன்னலமிக்க ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்

Wednesday, December 21, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஒரு குறிப்பிட்ட பணியில் சேர்வதற்கு இன்னென்ன தகுதிகளை ப் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதைப் போல அமைச்சராவதற்கும் அரசியலில் பங்கேற்பதற்கும் தேவையான தகுதிகள் இல்லாதிருப்பது ம் ,ஒரு தொழில் தொடங்க முதலீடும் நெறிமுறைகளும் இருப்பதைப்போல ஒரு கட்சி தொடங்க ஒரு விதிமுறை இல்லாதிருப்பதும் இந்தியாவின் மிகப்பெரிய பலவீனம்.எந்த முதலீடும் இல்லாமல் ,குறைந்தபட்சக்  கல்வித் தகுதியும் இல்லாமல் ,நாட்டின் முன்னேற்றத்தில் போலித்தனமில்லாத அக்கறை மற்றும்  ஈடுபாட்டுடன்  கூடிய நோக்கமும் கொள்கையும் இல்லாமல் ஒருவர் படிப்பறிவு  அதிகமில்லாத மக்கள் மிகுந்த நாட்டை ஆள்வது ஆபத்தானது..

அமைச்சராவதற்கும் ,அரசியலில் பங்கேற்பதற்கும் உரிய தகுதிகள் சட்டத்தால் வரையறை செய்யப்படவேண்டும் .ஒரு தகுதியும் இல்லாமல் உயர்ந்த பொறுப்புக்களை வகிப்பதால் ,நாடு முன்னேற்றத்தில் பின்தங்கி வளமிழந்து வருகின்றது .இதற்கான அரசியல் சட்டத்திருத்தங்களை அரசியல்வாதிகளே கொண்டுவரவேண்டியிருப்பதால்  பெரும்பாலும் அவர்களுக்குப் பாதகமான சட்டத் திருத்தங்களை ஏற்படுத்த விரும்புவதில்லை. அவர்கள் ஆட்சியாளர்களாக இல்லாமல் எதிர்கட்சியினராக இருக்கும் போது ஆட்சியாளர்களைக் களங்கப் படுத்ததும் நோக்கத்திற்காக  வாய்ப்பேச்சுக்கு மட்டும் எதிர்ப்பது போல பேசுவார்கள் மற்றபடி ஒருநாளும் நடைமுறைக்கு வருவதில்லை 

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

உலகில் இந்தியா பல மதங்கள்,பல இனங்களைச் சேர்ந்தவர்களும்  ,பல மொழிகள் பேசுபவர்களும் ஒற்றுமையாக வாழும் ஒரே நாடு  அதனால் அரசியல்வாதிகளுக்கு அரசியலோடு  மதம் ,இனம் மொழி பற்றிய தெளிவான அறிவு அவசியம். மக்களின் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏதும் ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உண்டு. அதனால் அரசியல் வாதிகளுக்கு பல மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் .அப்பொழுது தான் நாட்டின் பல பகுதிகளில் .வாழும் மக்களின் தேவைகளையும் மனநிலை யையும் புரிந்துகொண்டு சேவையாற்றமுடியும். அடசியல்வாதிகளுக்கு நாட்டின் இறையாண்மை பற்றிய அறிவு அவசியம்.  நாட்டு மக்களின் ஒற்றுமையைக் கருத்திற் கொண்டு பணியாற்ற இது முக்கியம்  .ஒரு அரசியல்வாதிக்கு ஒரே யொரு மொழி மட்டுமே தெரிந்திருக்குமானால் அவர் ஓராண்டு காலத்திற் குள் மற்றொரு    மொழியிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் இல்லை யென்றால் அவர் பதவியை இழக்க நேரிடும் என்ற சட்டம் இயற்றப்படவேண்டும்

 

          ஒரே  அரசியல்வாதி ஒரேசமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளை வகிக்கும் வாய்ப்பை அளிக்கக்கூடாது .மனிதவளம்மிக்க நாட்டில் ஆட்களுக்குப் பற்றாக் குறை இல்லை. ஜனநாயக  நாட்டில் யார் வேண்டுமானாலும் மக்கள் தலைவனாகவே ஆகலாம் என்று சொல்லப்பட்டாலும் அரசியலில் வருவாய்த் துறைகளை ஒரு சிலர் மட்டுமே தங்கள் ஆளுமைக்குள் வைத்துக்கொள் கின்றார்கள் . இந்த மனப்போக்கு அவர்கள் ஊழலில் ஈடுபடுவதற்கு அனுகூல மிக்கதாக இருக்கின்றது. மக்கள் தவறு செய்யாமலிருக்க அரசாங்க அமைப்புக்கள் இருப்பதைப்பைபோல அரசியலவாதிகள் தவறு செய்யாமலிருக்க மக்கள் அமைப்புக்கள் இருக்கவேண்டும். அரசாங்க அமைப்புக்களை நிர்வகிக்கும் அரசியல்வாதிகளையே அவை கண்காணிப்பதுமில்லை தண்டிப்பதுமில்லை .

Sunday, December 18, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 பொருளாதாரத்தால் மேன்மையடைந்த பல நாடுகளின் வளர்ச்சி நிலைகளைக் கவனிக்கும் போது இதுநாள் வரை நம் சிந்தனையைத் தொடாத சில உண்மைகள் தெரியவருகின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கவனிக்கத் தகுதியான ஆட்களும் ,வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான பொருளும் , அப்பொருளைத் தொடர்ந்து கொடுத்துவர சம்பாதிக்கும் மக்களும் வேண்டும் தகுதியான ஆள் என்பது சுதந்திரமான எண்ணத்துடன் மக்களால் தேர்தெடுக்கப்படும் வேட்பாளர்  அவர் துறை சார்ந்த அறிவும் , பொருளாதாரம் பற்றிய சிந்தனைகளும் ,மக்கள் நலத்தில் உறுதியான விருப்பமும் கொண்டிருக்கவேண்டும் . மக்களின் எண்ணங்களைத் திரித்தும், மயக்கியும், கட்டாயப்படுத்தியும் மக்களின் அறியாமையால் தேர்ந்தெடுக்கப்படும் நபராக இருக்கக் கூடாது. இந்தியாவில் தகுதியான வேட்பாளர்கள் அப்பகுதி மக்களால் முடிவு செய்யப்படுவதை விட கட்சித் தலைவர்களால் தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றது .இவர்களும் சுயநலத்தின் பொருட்டு சுய சிந்தனைகளின்றி செயல்படுகின்றார்கள் ஆட்சியாளர்கள் அதிகாரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்,ஒரு முறைகூடத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது .நிர்வாகத்தில் தகுதியான அதிகாரிகளையும் ,அலுவலர்களையும் கொண்டு செய்யவேண்டிய பணிகளைச் செய்யவேண்டும் .சுய விளம்பரம் தேடிக்கொள்ள அரசின் நிதியை வீண் செலவு செய்யக்கூடாது. தன்னால் அரசுக்கு ஏற்படும் செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இந்திய ஆட்சியாளர்கள் பெரும்பாலானோர் சராசரி இந்தியனை விட நம்பமுடியாத அளவு பெரும் செல்வந்தர்களாக இருக்கின்றார்கள் ..தாங்களும் அப்படி உழைப்பின்றிப் பொருள் சேர்க்கவேண்டும் என்ற பிழையான எண்ணத்தில் பெரும்பாலான  மக்கள் அரசியல்வாதியாகி ஆட்சியில் பங்கேற்கப் போட்டிபோட்டுக்கொன்டு  சண்டை போட்டுக்கொள்கின்றார்கள். ஒரு அரசியல்வாதி ஆட்சியில் இடம்பெற்றவுடனேயே திடீர் பணக்காரராகிவிடும் நிலை இந்தியாவில் மட்டுமே. இவர்கள் கருத்துச் சண்டையோடு பகைமை உணர்வுடன் பாதகச் செயல்களையும் மறைவொழுக்கமாகச் செய்கின்றார்கள்

 

Friday, December 16, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 ஆட்சியாளர்கள் பள்ளிக்கூடம், கல்லூரி ,பல்கலைக் கழக ஆசிரியர்களையும் ,துணைவேந்தர்களையும் நியமிக்கின்றார்கள். நீதிபதிகளைக் கூட இவர்களே நியமிக்கின்றார்கள்  .அரசு அலுவலகங்களுக்குத் தேவையான பணியாளர்களை நியமிக்கின்றார்கள் இவர்கள் இருக்கும்  பதவிக்கு ஆதரவு அளித்துவருமாறு தூண்ட.தேர்வு முறையில்  வட்டாரப் பிரதிநிதிகளுக்கும்  அதிகாரம் வழங்கி அவர்களும் பிழைப்பதற்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கின்றார்கள். வெறும் வாய்மொழியிலான ஒப்பந்தம் மூலம் செயல்கள் நடைபெறுவதால் தவறுகள், சட்டத்தின் கண்களுக்குத் தெரிவதில்லை..ஆட்சியாளர்களின் முதன்மைப் பொறுப்பு ,மக்களுக்காகச் சேவை செய்வதுதான். நாடு வளம்பெற  எங்கும் யாராலும் தீய செயல்கள் நடைபெறாமல் கண்காணித்து அரசாங்க அமைப்பின் மூலம் கட்டுப்படுத்தவேண்டும் .மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவேண்டும் .ஆனால் அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும்  மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புக்களை எல்லாம் அவர்களுடைய சுய நலத்திற்காகவும் ,பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.

அரசியல்வாதிகளின் அதிகாரம் அளவுக்கு மீறியவாறு இருப்பதை அனுமதிப்ப தால் ,இன்றைக்கு அதன் வளர்ச்சியை சட்டத்தாலோ அல்லது மக்களின் எதிர்ப்பாலோ தடுத்துக் கொள்ளமுடியாத நிலையே உருவாகி வருகின்றது . .அவர்கள் ஊழலால் கிடைக்கும் பெரும் பொருளால் எல்லோரையும் விலைக்கு வாங்கும் தகுதிமிக்கவர்களாக இருக்கின்றார்கள் மக்கள் மக்களை ஏமாற்றாமல் இருக்க ஆட்சிமுறையில் பாதுகாப்பு அமைப்புகள் இருப்பதைப் போல , ஆட்சியாளர்களும் மக்களை ஏமாற்றாமல் இருக்க அடசியலில் சட்டத் திருத்தங் கள் அவசியம். இதை மக்களே எடுத்துச் சொல்வதைவிட நீதிபதிகளே சுட்டிக்காட்டவேண்டும். .மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  மக்கள் பிரதிநிதி முதலமைச்சரையும் , ப்ரெசிடெண்ட்டையும் தேர்ந்தெடுக்க அவர்கள் மற்ற அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் கட்சியே மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதால் அடிப்படையே தவறாகி விடுகின்றது .ஏனெனில் அங்கே கட்சியின் விருப்பமே மக்களின் விருப்பமாகத் திணிக்கப்படுகிறது. மக்கள் சபை இருப்பதைப்போல ஒவ்வொரு பகுதியிலும் நன்மக்களால் ஆன ஒரு குழு அமைக்கப்படவேண்டும். இக்குழுவில் அப்பகுதியைச் சேர்ந்தநீதிபதிகள் ஓய்வு பெற்ற  நல்லாசிரியர்கள், வழக்கறிஞர்கள் ,சமூகஆர்வலர்கள் நியமிக்கப் படவேண்டும் .இந்தக்குழுவின் ஒருமித்த பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே அரசுப்பணியாளர்களை நியமிக்கவேண்டும். பரிந்துரைக் கும் ,மறுப்பிற்கும் முறையான காரணங்களையும் விளக்கங்களை யும் இக்குழு சமர்ப்பிக்கும்

 

Thursday, December 15, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே 

 அரசாங்கப் பணிக்காகச் செய்யப்படும் தேர்வு முறை முழு நம்பிக்கையளிப்பதாக இல்லை..ஆட்சியளர்கள் பொருள் வாங்கிக்கொண்டு தகுதியற்றவர்களை நியமித்து விடுகின்றார்கள் உண்மையில் அதற்கான கல்வித் தகுதி அவர்களிடம் இல்லாததால் தேர்வு செய்யும் முறையில் ஆட்சியாளர்களுக்கு ஒரு வேலையும் இல்லை. இவர்களால் திறமையை வளர்த்துக்கொண்டு போட்டிபோடுபவர்கள் பல சமயங்களில் புறக்கணிக் கப்பட்டுவிடுகின்றார்கள் .இதனால் திறமையானவர்களின் பணியை இழப்பதுடன் ,திறமையற்றவர்களின் பணியால் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இனவாரியான ஒதுக்கீடு தவறான அணுகுமுறையாகும். அரசாங்கம் திறமையற்றவர்களின் ஓய்விடம் இல்லை. அது திறைமையானவர்களால் நாட்டை வளப்படுத்தும் முயற்சியை அழித்துவிடுகிறது. பல திறமையானவர்கள் சொந்த நாட்டிற்காக வேலை செய்வதைவிட , மற்ற நாடுகளில்  தேர்வு செய்யப்பட்டு பணியாற்றும் போக்கு இன்றைக்கு வளர்ந்து வருகின்றது .இது நாட்டிற்கு ஏற்படும் பெரிய இழப்பாகும் வேண்டுமானால் பிற்பட்ட வகுப்பினருக்கு தகுதியை வளர்த்துக்கொள்ள போதிய நிதி உதவி அளிக்கலாம் .ஆனால் தேர்வு முறையில் சலுகை அளிக்கக் கூடாது எவ்வளவு பேர் தேவை , அவர்களின் உண்மையான  தகுதியை மதிப்பிட்டு எப்படித் தேர்வு செய்வது என்பதெல்லாம் துறைசார்ந்த உயர் அதிகாரிகளின் கடமை...அதிகாரிகள் தேர்வு முறையில் தவறு செய்வார்கள் என்று ஆட்சியாளர்கள் அனைத்து தேர்வு முறையையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்டார்கள். மேலும் அவர்களுடைய முடிவுக்கு அதிகாரிகளும் இணங்குமாறு  செய்து கொள்கின்றார்கள்.