Saturday, December 24, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

இந்தியாவில் கனிம வளம் நிறைய இருக்கின்றது.  மக்கள் தொகை மிகுந்து இருப்பதும் , பழங்காலத்திலிருந்தே நாட்டை அபகரிக்க  எதிரிகள் ஊடுறுவிப் போராடியதும் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றது .நாட்டின் வளங்களைப் பொதுவுடைமையாக்காமல் தனிவுடைமையாக்குக்கும் போக்கால் அவற்றின் பயன்பாட்டைகாலங்காலமாய் இழந்துவருகின்றோம்.கனிம வளங்கள் கிடைக் கும் இடங்களை முன்னறிந்து அவற்றைப்  பயன்பாட்டிற்கு கொண்டு வந்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த  வேண்டும் .அவை நாட்டின் சொத்து . ஆட்சியாளர்கள் தங்களின் சொத்துப்போல உரிமை கொண்டு அனுபவிக்க நினைக்கிறார்கள் .கனிம வளம் திருட்டுப் போக வாய்ப்பில்லை. ஏனெனில் இவையாவும் திறந்த வெளியில்  இருப்பதுடன் ,தனி ஒருவரால் நீண்ட காலம் மறவொழுக்கச் செயலாகச் செய்யமுடியாது. அரசாகத்திற்குத் தெரியாமல் யாரவது ஆற்று மணலை அள்ளிக் கொண்டே இருக்கமுடியுமா ? காட்டு மரங்களை வெட்டி கட த்திக்கொண்டே போக முடியுமா ? சுரங்கம் வெட்டி தாதுப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியுமா ? ஆட்சியாளர்களின் துணை இல்லாமல் ,தனியொருவரால் இத்தகைய தேசத் துரோகச் செயல்களைச் செய்யவே முடியாது. போதிய பாதுகாப்பு அமைப்புக்கள் இருந்தும் தனியொருவர் தொடர்ந்து குற்றச் செயல்களைச் செய்து வருவதை கட்டுப்படுத்த முடியாவிட்டால் அது அரசாங்கத்தின் அறியாமையை இல்லை, பலவீனம் .

கனிம வளங்களை நாட்டுக்காகப் பயன்படுத்தும் போது ,எல்லோருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கின்றது. எல்லோரும் சம்பாதிப்பதால் வறுமையால் குற்றங்கள் நிகழ்வதில்லை .பணப்புழக்கத்தால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கின்றது . அவர்கள் உயிர்வாழ நல்ல உணவுப் பொருட்களை வாங்குவார்கள். அதாவது நாட்டில் இயல்பாக விவசாய உற்பத்தி அதிகரிக்கின்றது. ஆட்சியாளர்கள் நாட்டின் வளங்களை அபகரித்துக் கொண்டால் பணம் பெட்டகங்களிலும் ,வங்கிகளும் முடங்கிப்போகின்றன .மக்களின் வருமானம் குறைந்து போகின்றது .விவசாயத்தால் பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும் வாங்கப்படுவதில்லை .பொருள் வீணாக வீணாக விவசாயிகளுக்கு விவசாயத்தில் ஈடுபாடு குறைந்து போகின்றது . இது நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்துவிடும் . நாட்டிலுள்ள பொருளாதார வல்லுநர்கள் இது பற்றிய எச்சரிக்கையை தன்னலமிக்க ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்

No comments:

Post a Comment