Sunday, December 18, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 பொருளாதாரத்தால் மேன்மையடைந்த பல நாடுகளின் வளர்ச்சி நிலைகளைக் கவனிக்கும் போது இதுநாள் வரை நம் சிந்தனையைத் தொடாத சில உண்மைகள் தெரியவருகின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கவனிக்கத் தகுதியான ஆட்களும் ,வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான பொருளும் , அப்பொருளைத் தொடர்ந்து கொடுத்துவர சம்பாதிக்கும் மக்களும் வேண்டும் தகுதியான ஆள் என்பது சுதந்திரமான எண்ணத்துடன் மக்களால் தேர்தெடுக்கப்படும் வேட்பாளர்  அவர் துறை சார்ந்த அறிவும் , பொருளாதாரம் பற்றிய சிந்தனைகளும் ,மக்கள் நலத்தில் உறுதியான விருப்பமும் கொண்டிருக்கவேண்டும் . மக்களின் எண்ணங்களைத் திரித்தும், மயக்கியும், கட்டாயப்படுத்தியும் மக்களின் அறியாமையால் தேர்ந்தெடுக்கப்படும் நபராக இருக்கக் கூடாது. இந்தியாவில் தகுதியான வேட்பாளர்கள் அப்பகுதி மக்களால் முடிவு செய்யப்படுவதை விட கட்சித் தலைவர்களால் தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றது .இவர்களும் சுயநலத்தின் பொருட்டு சுய சிந்தனைகளின்றி செயல்படுகின்றார்கள் ஆட்சியாளர்கள் அதிகாரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்,ஒரு முறைகூடத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது .நிர்வாகத்தில் தகுதியான அதிகாரிகளையும் ,அலுவலர்களையும் கொண்டு செய்யவேண்டிய பணிகளைச் செய்யவேண்டும் .சுய விளம்பரம் தேடிக்கொள்ள அரசின் நிதியை வீண் செலவு செய்யக்கூடாது. தன்னால் அரசுக்கு ஏற்படும் செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இந்திய ஆட்சியாளர்கள் பெரும்பாலானோர் சராசரி இந்தியனை விட நம்பமுடியாத அளவு பெரும் செல்வந்தர்களாக இருக்கின்றார்கள் ..தாங்களும் அப்படி உழைப்பின்றிப் பொருள் சேர்க்கவேண்டும் என்ற பிழையான எண்ணத்தில் பெரும்பாலான  மக்கள் அரசியல்வாதியாகி ஆட்சியில் பங்கேற்கப் போட்டிபோட்டுக்கொன்டு  சண்டை போட்டுக்கொள்கின்றார்கள். ஒரு அரசியல்வாதி ஆட்சியில் இடம்பெற்றவுடனேயே திடீர் பணக்காரராகிவிடும் நிலை இந்தியாவில் மட்டுமே. இவர்கள் கருத்துச் சண்டையோடு பகைமை உணர்வுடன் பாதகச் செயல்களையும் மறைவொழுக்கமாகச் செய்கின்றார்கள்

 

No comments:

Post a Comment