ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே
அரசாங்கப் பணிக்காகச் செய்யப்படும்
தேர்வு முறை முழு நம்பிக்கையளிப்பதாக இல்லை..ஆட்சியளர்கள் பொருள் வாங்கிக்கொண்டு தகுதியற்றவர்களை
நியமித்து விடுகின்றார்கள் உண்மையில் அதற்கான கல்வித் தகுதி அவர்களிடம் இல்லாததால்
தேர்வு செய்யும் முறையில் ஆட்சியாளர்களுக்கு ஒரு வேலையும் இல்லை. இவர்களால் திறமையை
வளர்த்துக்கொண்டு போட்டிபோடுபவர்கள் பல சமயங்களில் புறக்கணிக் கப்பட்டுவிடுகின்றார்கள்
.இதனால் திறமையானவர்களின் பணியை இழப்பதுடன் ,திறமையற்றவர்களின் பணியால் பிரச்சனைகளும்
ஏற்படுகின்றன. இனவாரியான ஒதுக்கீடு தவறான அணுகுமுறையாகும். அரசாங்கம் திறமையற்றவர்களின்
ஓய்விடம் இல்லை. அது திறைமையானவர்களால் நாட்டை வளப்படுத்தும் முயற்சியை அழித்துவிடுகிறது.
பல திறமையானவர்கள் சொந்த நாட்டிற்காக வேலை செய்வதைவிட , மற்ற நாடுகளில் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றும் போக்கு இன்றைக்கு
வளர்ந்து வருகின்றது .இது நாட்டிற்கு ஏற்படும் பெரிய இழப்பாகும் வேண்டுமானால் பிற்பட்ட
வகுப்பினருக்கு தகுதியை வளர்த்துக்கொள்ள போதிய நிதி உதவி அளிக்கலாம் .ஆனால் தேர்வு
முறையில் சலுகை அளிக்கக் கூடாது எவ்வளவு பேர் தேவை , அவர்களின் உண்மையான தகுதியை மதிப்பிட்டு எப்படித் தேர்வு செய்வது என்பதெல்லாம்
துறைசார்ந்த உயர் அதிகாரிகளின் கடமை...அதிகாரிகள் தேர்வு முறையில் தவறு செய்வார்கள்
என்று ஆட்சியாளர்கள் அனைத்து தேர்வு முறையையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்டார்கள்.
மேலும் அவர்களுடைய முடிவுக்கு அதிகாரிகளும் இணங்குமாறு செய்து கொள்கின்றார்கள்.
No comments:
Post a Comment