Wednesday, December 21, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 

ஒரு குறிப்பிட்ட பணியில் சேர்வதற்கு இன்னென்ன தகுதிகளை ப் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதைப் போல அமைச்சராவதற்கும் அரசியலில் பங்கேற்பதற்கும் தேவையான தகுதிகள் இல்லாதிருப்பது ம் ,ஒரு தொழில் தொடங்க முதலீடும் நெறிமுறைகளும் இருப்பதைப்போல ஒரு கட்சி தொடங்க ஒரு விதிமுறை இல்லாதிருப்பதும் இந்தியாவின் மிகப்பெரிய பலவீனம்.எந்த முதலீடும் இல்லாமல் ,குறைந்தபட்சக்  கல்வித் தகுதியும் இல்லாமல் ,நாட்டின் முன்னேற்றத்தில் போலித்தனமில்லாத அக்கறை மற்றும்  ஈடுபாட்டுடன்  கூடிய நோக்கமும் கொள்கையும் இல்லாமல் ஒருவர் படிப்பறிவு  அதிகமில்லாத மக்கள் மிகுந்த நாட்டை ஆள்வது ஆபத்தானது..

அமைச்சராவதற்கும் ,அரசியலில் பங்கேற்பதற்கும் உரிய தகுதிகள் சட்டத்தால் வரையறை செய்யப்படவேண்டும் .ஒரு தகுதியும் இல்லாமல் உயர்ந்த பொறுப்புக்களை வகிப்பதால் ,நாடு முன்னேற்றத்தில் பின்தங்கி வளமிழந்து வருகின்றது .இதற்கான அரசியல் சட்டத்திருத்தங்களை அரசியல்வாதிகளே கொண்டுவரவேண்டியிருப்பதால்  பெரும்பாலும் அவர்களுக்குப் பாதகமான சட்டத் திருத்தங்களை ஏற்படுத்த விரும்புவதில்லை. அவர்கள் ஆட்சியாளர்களாக இல்லாமல் எதிர்கட்சியினராக இருக்கும் போது ஆட்சியாளர்களைக் களங்கப் படுத்ததும் நோக்கத்திற்காக  வாய்ப்பேச்சுக்கு மட்டும் எதிர்ப்பது போல பேசுவார்கள் மற்றபடி ஒருநாளும் நடைமுறைக்கு வருவதில்லை 

No comments:

Post a Comment