Friday, December 16, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே

 ஆட்சியாளர்கள் பள்ளிக்கூடம், கல்லூரி ,பல்கலைக் கழக ஆசிரியர்களையும் ,துணைவேந்தர்களையும் நியமிக்கின்றார்கள். நீதிபதிகளைக் கூட இவர்களே நியமிக்கின்றார்கள்  .அரசு அலுவலகங்களுக்குத் தேவையான பணியாளர்களை நியமிக்கின்றார்கள் இவர்கள் இருக்கும்  பதவிக்கு ஆதரவு அளித்துவருமாறு தூண்ட.தேர்வு முறையில்  வட்டாரப் பிரதிநிதிகளுக்கும்  அதிகாரம் வழங்கி அவர்களும் பிழைப்பதற்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கின்றார்கள். வெறும் வாய்மொழியிலான ஒப்பந்தம் மூலம் செயல்கள் நடைபெறுவதால் தவறுகள், சட்டத்தின் கண்களுக்குத் தெரிவதில்லை..ஆட்சியாளர்களின் முதன்மைப் பொறுப்பு ,மக்களுக்காகச் சேவை செய்வதுதான். நாடு வளம்பெற  எங்கும் யாராலும் தீய செயல்கள் நடைபெறாமல் கண்காணித்து அரசாங்க அமைப்பின் மூலம் கட்டுப்படுத்தவேண்டும் .மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவேண்டும் .ஆனால் அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும்  மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புக்களை எல்லாம் அவர்களுடைய சுய நலத்திற்காகவும் ,பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.

அரசியல்வாதிகளின் அதிகாரம் அளவுக்கு மீறியவாறு இருப்பதை அனுமதிப்ப தால் ,இன்றைக்கு அதன் வளர்ச்சியை சட்டத்தாலோ அல்லது மக்களின் எதிர்ப்பாலோ தடுத்துக் கொள்ளமுடியாத நிலையே உருவாகி வருகின்றது . .அவர்கள் ஊழலால் கிடைக்கும் பெரும் பொருளால் எல்லோரையும் விலைக்கு வாங்கும் தகுதிமிக்கவர்களாக இருக்கின்றார்கள் மக்கள் மக்களை ஏமாற்றாமல் இருக்க ஆட்சிமுறையில் பாதுகாப்பு அமைப்புகள் இருப்பதைப் போல , ஆட்சியாளர்களும் மக்களை ஏமாற்றாமல் இருக்க அடசியலில் சட்டத் திருத்தங் கள் அவசியம். இதை மக்களே எடுத்துச் சொல்வதைவிட நீதிபதிகளே சுட்டிக்காட்டவேண்டும். .மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  மக்கள் பிரதிநிதி முதலமைச்சரையும் , ப்ரெசிடெண்ட்டையும் தேர்ந்தெடுக்க அவர்கள் மற்ற அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் கட்சியே மக்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதால் அடிப்படையே தவறாகி விடுகின்றது .ஏனெனில் அங்கே கட்சியின் விருப்பமே மக்களின் விருப்பமாகத் திணிக்கப்படுகிறது. மக்கள் சபை இருப்பதைப்போல ஒவ்வொரு பகுதியிலும் நன்மக்களால் ஆன ஒரு குழு அமைக்கப்படவேண்டும். இக்குழுவில் அப்பகுதியைச் சேர்ந்தநீதிபதிகள் ஓய்வு பெற்ற  நல்லாசிரியர்கள், வழக்கறிஞர்கள் ,சமூகஆர்வலர்கள் நியமிக்கப் படவேண்டும் .இந்தக்குழுவின் ஒருமித்த பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே அரசுப்பணியாளர்களை நியமிக்கவேண்டும். பரிந்துரைக் கும் ,மறுப்பிற்கும் முறையான காரணங்களையும் விளக்கங்களை யும் இக்குழு சமர்ப்பிக்கும்

 

No comments:

Post a Comment