கார்ட்டூன்
டிவீயில் ஜெயலலிதா,எம்ஜியார் நடித்த ஒரு பழைய திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.குடும்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது பெரியவர் சொன்னார் "இது முன்னாள் சிஎம் மும் இந்நாள் சிஎம் மும் நடித்த படம்"என்று.அருகில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் அப்படியா என்று கேட்டுக் கொண்டார்கள் .அடுத்து என்.டி .ஆர் நடித்த படம் சின்னத் திரையில் ஓடியது. அப்போதும் அந்தப் பெரியவர் சொன்னார் " என்.டி .ஆரும் சிஎம் ஆக இருந்தவர்தான் " படம் முடிந்தவுடன் அருகில் இருந்த பேரப் பையன் 'ஐயா ,நானும் சி எம் ஆக வர வேண்டும், என்னை உடனடியாகச் சினிமாவில் நடிக்கச் சேர்த்து விடுங்கள்" என்றான். சினிமா அரசியலுக்கு ஒரு நுழைவு வாயிலாக மாறியது இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் மோசமான அரசியலையே எடுத்துக் காட்டுகிறது.
No comments:
Post a Comment