Wednesday, December 26, 2012

Vinveliyil Ulaa


விண்வெளியில் உலா -அர்சா மைனர்

அர்சா மேஜர் போன்று ஆனால் சிறிய அளவில் வடிவம் கொண்டுள்ள அர்சா மைனரும் 7 விண்மீன்களால் ஒரு சிறிய அகப்பை போன்று காட்சி தருகிறது .இது சுமார் 25 விண்மீன்கள் அடங்கிய ஒரு சிறிய வட்டாரமாகும் .அர்சா மைனர் வட்டாரம் பேரண்டத்தின் வட துருவத்தை ஒட்டி அமைந்துள்ளது .ஓரளவு மிதமான பிரகாசமுடைய துருவ விண்மீன் எனப்படும் போலாரிஸ் தற்செயலாக பேரண்டத்தின் வட துருவத்திற்கு 1 டிகிரி விலகியுள்ளது.பேரண்டத்தின் வட துருவம் என்பது பூமியின் வட துருவத்தின் நீட்சி எல்லையாகும்.வட தென் துருவங்களின் வழியாக ச்செல்லும் ஓர் அச்சு பற்றி பூமி சுழலும் போது .இந்த விண்மீன் அச்சை ஒட்டி யிருப்பதால் பிற விண்மீன்களைப் போல பூமியைச் சுற்றி வருவது போலத் தோற்றம் தருவதில்லை.மாறாக நிலையாக வானத்தில் இருப்பது போலக் காட்சி தருகிறது .அதனால் இவ் விண்மீனைத் துருவ விண்மீன் என்றனர் இது போல தென் துருவத் திசையில் எந்த விண்மீனும் இல்லை.ஆனால் 3000ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய மெக்லானிக் மேகம் தென் துருவத்திற்கு மிக அருகாமையில் இருந்ததாகக் கூறுவார்கள் .

பழங்காலத்தில் கடல் பயணம் மேற்கொள்வோர் இரவில் போலாரிஸ் விண்மீனை வடக்குத் திசை காட்டும் ஒரு வழிகாட்டியாகக் கொண்டுள்ளனர் அரேபியர்கள் போலாரிஸ் விண்மீனை அல் கிப்லா என்று அழைத்தனர்.இது புனிதமான மெக்காவின் திசையை அறிவதற்கு அவர்களால் பயன் படுத்திக் கொள்ளப்பட்டது விண்மீனின் இப் பயன்பாடே வானவியலின் வளர்ச்சிக்குப் பெரிதும் தூண்டுகோளாக அமைந்தது அது மிகையில்லை .போலாரிசின் ஒளிப் பொலி வெண் 1.99 இந்த அளவு ஒளிப் பொலி வெண் கொண்ட விண்மீன் ஏதும் துருவத்தில் இல்லை.போலாரிஸ் தவிர்த்து அதிகப் பிரகாசம் கொண்ட துருவத்திற்கு அருகாமையில் இருக்கும் விண்மீனின் ஒளிப் பொலி வெண் 6-4 என்ற நெடுக்கையில் உள்ளன .இவற்றை பைனாக்குலர் மூலம் மட்டுமே காண முடியும் .போலாரிசின் இச் இச் சிறப்பு தற்செயலானதே .நிரந்தரமானதில்லை என்றால் பெரும் வியப்பு மேலிடலாம் .பூமி தற் சுழற்ச்சி இயக்கத்தோடு சுழலா ட்டமும் போடுகிறது .சுழ லாட்டம் என்பது தற் சுழற்ச்சியோடு சாய்வாக ஒரு வட்டப்பாதையில் இயங்குவதாகும்..இதற்குச் சரியான எடுத்துக் காட்டாக பம்பரத்தைக் காட்டலாம் .பூமியின் சுழ லாட்டத்தினால் சுழலச்சின் திசை மெதுவாக ஆனால் ஒரு சீரான வீதத்தில் மாற்றம் பெறுகிறது. அதனால் பேரண்டத்தின் துருவங்கள் ,வட்டார விண்மீன்களிடையே இடப்பெயர்ச்சி பெறுகின்றன .மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் துருவத்திற்கு நெருக்கமாக இருந்த விண்மீன் கோச்சாப் (Kochab ) என்ற பீட்டா அர்சா மைனோரிஸாகும். இதன் ஒளிப்பொலிவெண் 2.04 அதாவது போலரிசை விடப் பல மடங்கு மங்கலானது.அரேபிய மொழியில் கோச்சாப் அல் சிமாலி என்றால் வடக்கு நட்சத்திரம் என்று பொருள். பழங்காலத்தில் அரேபியர்கள் இதையே துருவ விண்மீனாகக் கொண்டார்கள் என்பதையே இது குறிப்பிடுகின்றது.

அர்சா மைனரில் உள்ள முதன்மையான விண்மீன்கள் ஒரு சிறிய அகப்பை வடிவத்தை ஏற்படுத்துகின்றன.இவற்றுள் அகப்பையின் கோப்பையில் அமைந்துள்ள 126 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள பீட்டா (கோச்சாப்), 480 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள காமா (பரகத்-Pherkat) அர்சா மைனோரிஸ் என்ற விண்மீன்களை துருவத்தின் பாதுகாவலன் (Guardian of the Pole) என அழைக்கின்றார்கள் .அர்சா மைனர் குழந்தை ஜீயசை வளர்த்த அழகு மங்கையின் நினைவாக அழைக்கப்படுகின்றது .இவள் ஏன் சிறிய கரடியாகச் சபிக்கப்பட்டாள் என்பதற்கான விவரம் ஏதும் தெரியவில்லை.  

No comments:

Post a Comment