விண்வெளியில் உலா
இந்த வட்டாரத்தின் மற்றொரு சிறப்பாக இப் பகுதியில் பல நெபுலாக்கள் இருப்பது அறியப்பட்டுள்ளன.மெசியரின் அட்டவணையில் இவை M 81,M 82,M 97, M .101,M .108 மற்றும் M .109 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளன .M .97 (NGC 3587) தவிர்த்த பிறயாவும் வெகு தொலைவிலுள்ள கிட்டத்தட்ட ஒரேமாதிரியான அண்டங்களாகும் .M .97 பெரிய கோள வடிவில் அமைந்த ஒளிரும் வளிமத்தாலான நெபுலாவாகும் .புறத் தோற்றத்தில் இது ஒரு கோளக நெபுலா எனலாம்.உணர்வு நுட்பமிக்க தொலை நோக்கி இதை ஆந்தை வடிவ நெபுலாவாகக் காட்டியுள்ளது .இது 1781 ல் பியரி மெக்கயின் என்பாரால் மூன்றாவதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நெபுலாவாகும்.இதற்கு ஆந்தை வடிவ நெபுலா என்று அதை ஆராய்ந்த ரோஸ் என்பார் 1848 ல் பெயரிட்டார் .1300 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள இதன் நிறை 0.15 சூரிய நிறை என்றும் ,தோற்ற ஒளிப்பொலிவெண் 9.8 என்றும்,வயது 6000 ஆண்டுகள் என்றும் மதிப்பிட்டுள்ளனர்.இதன் மையத்தில் வழக்கம் போல ஒரு வெப்பமிக்க வெண்மீன் உள்ளது.ஒரு வகையான நிலையாமையால் மைய விண்மீன் ஒரு காலத்தில் வெடித்து வளிமத்தை வெளியே தொடர்ந்து உமிழ அதுவே நெபுலாவாக அதைச் சுற்றி உருவானது என்று நினைப்பதற்குச் சரியான காரணமிருக்கிறது.இந்த நெபுலா ஒரு சீரான வேகத்தில் விரிவடைந்து கொண்டே யிருக்கிறது என்பதைக் கொண்டு இதை ஒருவாறு தீர்மானிக்க முடிகிறது .
M .101 ஒரு சுருள் புய அண்டமாகும் .இதன் தளம் நமது கண்ணோட்டத்திற்கு செங்குத்தாக இருப்பதால் இதை முழுமையாகக் காணமுடிகிறது. மிசாருக்கு ஓரளவு மிக அருகில் கரடியில் வாலுக்கு சற்று மேலாக 8.2 என்ற ஒளிப்பொலிவெண்ணுடன் இது அமைந்துள்ளது பார்வைக்கு இது ஈட்டா (η) மற்றும் சீட்டா (ζ) அர்சா மேஜோரிசுடன் சமபக்க முக்கோணத்தை ஏற்படுத்துகின்றது இதில் உள்ள பல விண்மீன்களுக்கு உயிரினம் வாழும் கோள்கள் இருக்கலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் இது குறைந்தது 8 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருப்பதாக அறிந்துள்ளனர்
M .81 மற்றும் M .82 இரண்டும் கரடியின் கூம்பு வாயருகே ,தோற்றத்தில் அருகருகே அமைந்துள்ள இரு அண்டங்களாகும்.இவையிரண்டும் ஏறக்குறைய 10 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. M .81 ஒரு சுருள் புய அண்டமாகும்.நமது பால் வெளி மணடலத்தை விட சிறியது. 4 ல் ஒரு பங்கு விட்டமுள்ளது. இது பாரவைக்குச் சற்றே சாய்ந்திருந்தாலும் சுருள் புய அமைப்பைத் தெளிவாகக் காணமுடிகிறது .M .82 ஓரளவு சிறியது,மங்கலானது,பூமியிலிருந்து கொண்டு இதன் பக்க விளிம்பையும் ,திட்டுத் திட்டாக நெபுலா போன்ற திரட்சியையும் பார்க்க முடிகிறது. M .81 ம் M .82 ம் நம்மை விட்டு முறையே 187 கிமீ/வி ,74 கிமீ/வி என்ற வேகத்தில் விலகிச் செல்கின்றன M .81, M .82 வை விட 10 மடங்கு நிறை மிக்கது .அகச் சிவப்பு அலை நீளத்தில் M .82 மிகவும் பிரகாசமான அண்டமாகக் காட்சியளிக்கிறது இதில் 100 க்கும் ஏற்பட்ட இளமையான கோளகக் கொத்து விண்மீன் கூட்டங்கள் இருப்பதை ஹபுள் தொலை நோக்கி கண்டுபிடித்துள்ளது. 11 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள M .81 யை போடே (Bode )நெபுலா என்றும் அழைப்பர். M .81 ம் M .82 ம் சில நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மோதிக் கொண்டதால் அவற்றின் சுருள் புய அமைப்புகள் சீர்குலைந்து காணப்படுகின்றன. இப்பொழுது இவ்விரு அண்டங்களும் இன்னும் நெருங்கி வந்து விட்டன அவைகளின் மையங்களுக்கு இடைப்பட்ட தொலைவு சுமார் 150,000 ஒளி ஆண்டுகளாக உள்ளது .
அர்சா மேஜர் வட்டாரத்தில் மூன்று கொத்து அண்டங்களின் கூட்டங்கள் காணப்படுகின்றன. மிக வயதான ஒன்றில் குறைந்தது 100 அண்டங்களாவது இருக்கலாம் என அறிந்துள்ளனர். இதன் மையப்பகுதி 0.6 மில்லியன் ஒளி ஆண்டுகள் விட்டங் கொண்டுள்ளது எனினும் விண்ணில் ஓரளவு முழு நிலவின் பரப்பைவிடச் சற்றே கூடுதலான பரப்பை அடைத்துள்ளது.இந்த அண்டங்கள் யாவும் 15000 கிமீ/வி என்ற வேகத்தில் நம்மை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கின்றன.இதை அவற்றின் செம்பெயர்ச்சி(Red shift) மூலம் அளவிட்டறிந்துள்ளனர்
அர்சா வட்டாரத்தில் நமது சூரியனைப் போல கோள்கள் கொண்ட ஒரு விண்மீன் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் இதை 47 அர்சா மேஜோரிஸ் என அழைக்கின்றனர்.இதிலுள்ள ஒரு கோள் நமது வியாழன் (ஜுபிடர்) கோளின் நிறையைப் போல 2.3 மடங்கு கொண்டதாகவும் விண்மீனை 295 மில்லியன் கிலோமீட்டர் வட்டப் பாதையில் சுற்றி வருவதாகவும் ஜியோபிரே மார்சி (Geoffrey Marcy )மற்றும் பால் புல்ட்லெர் (Paul Bultler )என்ற அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் .
Named
Stars
- DUBHE (Alpha UMa)
- MERAK (Beta UMa)
- PHAD (Gamma UMa)
- MEGREZ (Delta UMa)
- ALIOTH (Epsilon UMa)
- MIZAR (Zeta UMa)
- ALKAID (Eta UMa)
- Talitha (Iota UMa)
- Tania Borealis (Lambda UMa)
- Tania Australis (Mu UMa)
- Alula Borealis (Nu UMa)
- Alula Australis (Xi UMa)
- Muscida (Omicron UMa)
- Muscida (Pi 1 UMa)
- Muscida (Pi 2 UMa)
- ALCOR (80 UMa)
Messier
Objects
No comments:
Post a Comment