Saturday, December 15, 2012

KAVITHAI


சோதனை மேல் சோதனை

பாலகனாய் பள்ளிக்குப் படிக்கப் போனேன்

காளையாய்க் கல்லூரியில் கற்று வந்தேன்

கற்றது அன்றும் என்றும் கையளவு

கல்லாதது இன்றும் என்றும் கடலளவு

கையளவு கூடவுமில்லை கலடளவு குறையவுமில்லை

 

வழியில் பயிலாது பலவற்றைத் தவறவிட்டேன்

வாழும் போது அதையுணர்ந்து வருத்தப்பட்டேன்

  

சிறு வயதில் சின்னச்சின்னச் சோதனைகள்

சிலநாட்கள் மட்டுமே

வாழப்புகுந்த பின் அளவில்லாத சோதனைகள்

எல்லா நாளுமே ?

 ஆசிரியர் வருவார் கேள்விகள் கேட்பார்

அதெல்லாம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே

பாடங்கள் நடக்கும் தேர்வுகள் நிகழும்

அதெல்லாம் ஒரு சில மணிகள் மட்டுமே

அங்கே காலரைமுழு ஆண்டுத் தேர்வுகள் வரும்

அதெல்லாம் ஒரு சில நாட்கள் மட்டுமே

 எப்படி வாழ வேண்டுமென எண்ணிக்

கற்பனையில் நாளெல்லாம் களித்த காலத்தில்

ஆண்டொன்றுக்கு ஒரு சில சோதனைகளே

அதிகம் போனால் ஒரு பத்திருக்கும்

இப்படித்தான் வாழ முடியும் என்றெண்ணி

வாழ்கையை அனுபவிக்கும் காலத்தில்

இதென்ன கொடுமையிலும் கொடுமை

ஒவ்வொருநாளும் சோதனைகளாய்

ஒவ்வொரு நிமிடமும் சோதனைகளாய்

சோதனை மேல் சோதனையெனச்

சொல்வதெல்லாம் இதைத்தானோ ?

 சோதனை தரும் வேதனையில் அதுகூடத் தெரியவில்லை

No comments:

Post a Comment