Micro aspects of developing inherent potentials
ஒரு சிலர் எதைச் செய்தாலும் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்.இது அவர்களுக்கு வாழ்கையில் ஒரு உற்சாகத்தை தரும்.மேலும் மேலும் செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.வேறு சிலர் அப்படியில்லை,தொட்டதெல்லாம் தோல்வியில் முடியும். துவண்டு போய் எப்படியாவது வெற்றி பெற எண்ணி தவறான வழிகளைப் பின்பற்ற முயல்வார்கள்.பெரும்பான்மையினருக்கு கொஞ்சம் வெற்றி கொஞ்சம் தோல்வி என்று மாறிமாறி கிடைப்பதாக இருக்கும்.வெற்றிக்கும் தோல்விக்கும் வெளியில் காரணம் தேடிப்த் பார்ப்பது கால விரயமேயாகும். விரும்பிய ஒன்றைச் செய்து அதை வென்றெடுக்க வேண்டுமானால் முதலில் நீ உன்னையே வெல்ல வேண்டும் அகத்தை வெல்லாமல் புறத்தே எதையும் வெல்ல முடியாது என்று சான்றோர்கள் கூறுவார்கள்
செயலில் வெற்றியும் தோல்வியும் என்பது அச் செயலைச் செய்யும் மனிதர்களின் மனதைப் பொறுத்தது.ஒரு மனிதன் மனத்தால் ஆளப்படலாம் அல்லது மனதை ஆளலாம்.மனதை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் எதையும் வென்றெக்கும் திறமையில் ஒரு பாதியைப் பெற்றுவிட முடியும். பெரும்பாலானவர்கள் அவர்களுடைய மனத்தால் ஆளப்படுவதால் வெற்றி வேண்டியபோது கிடைப்பதில்லை.
மனதால் ஆளப்படும் போது மனம் எளிதாகச் சலனப்பட்டு ஒரு உறுதியில்லாச் சமநிலையில் இருப்பதால் பல விதமான எண்ணங்கள் குறுக்கீட்டு ஒரு குறிப்பிட்ட எண்ணத்தை மட்டுமே வெற்றியை நோக்கிச் செலுத்த முடிவதில்லை. மனதை ஒருமுகப் படுத்த முடியாததால் ஏற்படும் நிலையே அரைகுறையான வெற்றியும் தோல்வியும்
No comments:
Post a Comment