சட்டத் துறையும் நீதித்துறையும் எதற்காக நிறுவப்பட்டனவோ அதற்காக மட்டுமே செயல்புரிந்துவந்தால் அதிகாரிகளும் அரசியவாதி களும் நேர்மை தவறாது பணிபுரிவார்கள் . ஆட்சியாளர்கள் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அதற்காக பிழையின்றி கடமையாற்றினால் காவலரும் நீதிபதிகளும் மக்களுக்கு முழு நம்பிக்கை தரக்கூடிய வகையில் சட்டத்தையும் ஒழுங்கையும் நாட்டில் பாதுகாத்திடுவார்கள் . இவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் மக்களிடம் இருக்கவேண்டும் . ஏனெனில் மக்களுக்காகத்தான் இவர்கள் நியமிக்கப்பட்டு மக்கள் இவர்களுடைய சம்பளத்திற்காக வரி செலுத்திவருகின்றார்கள் .
Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Sunday, March 16, 2025
Saturday, March 15, 2025
பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டு தவறானவர்களைத் தேர்ந்தெடுத்து நாட்டுக் குத் தவறு செய்கின்றார்கள் .என்று சொல்கின்றார்கள். இதை யார் சொல்கின்றார்கள் என்றால் ஆட்சியில் இடம்பிடிக்க நினைக்கும் அரசியல்வாதிகள் , வாய்ப்பில்லாத அரசியல்வாதிகள், இருக்கும் ஆட்சியை க் குறைகூறி பகைமையை வளர்த்துகொள்ளாமால் மக்களை மட்டுமே குறை கூறுகின்றார்கள். சிந்தித்துப் பார்த்தல் இது சரியான, அரசியல் ரீதியிலான தீர்வில்லை என்பது தெரியவரும். மக்கள் அவர்கள் குறிப்பிடும் தவறானவர்களைத் தேர்தெடுக்காவிட்டால் சமுதாயத்தில் ஊழல் ,மற்றும் பிற தவறுகள் தடுக்கப்பட்டுவிடுமா ? இல்லை புதிதாக வரப்போகும் ஒருவர் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவாரா ? சந்தேகம் தான் .மக்கள் தவறானவர்களைத் தேர்ந்தெடுக்காவிட்டால் அவர்கள் செய்யும் தவறுகள் தடுக்கப்பட்டுவிடுவதில்லை.ஒருவரை பதவி பெறமுடியாமல் தடுப்பது அவர் ஏற்கனவே செய்த தவறுகளுக்கான தண்டனையாகாது . அதனால் பதவியில்லாத போதும் செய்த தவறுகளை வேறு வழிமுறைகள்மூலம் செய்வதை பழகிக் கொள்கின்றார்கள் .நேர்மையானவர்கள் அரசியலில் வரவேண்டும் என்றால் சமுதாயத்தில் நேர்மையானவர்கள் பெரும்பான்மையினராக இருக்கவேண்டும். அதற்கு தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அதற்குரிய தண்டனையைப் பெறவேண்டும் . அப்போதுதான் தீயவர்கள் இனப்பெருக்கம் ஒரு கட்டுக்குள் வரும்
Tuesday, March 11, 2025
மக்களின் திறமை மட்டுமே நாட்டிற்கு வளர்ச்சியைத் தரும் .இந்தத் திறமையை வளர்த்துக்கொள்ள உரிமையுள்ள கல்வியறிவு தேவை . அதைத் தாய்மொழிக் கல்வி மூலம் எளிதாகப் பெறமுடியும். பள்ளியில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாகவே தாய்மொழியை பெற்றோர்கள் மூலம் கற்றுக்கொண்டு விடுவதால் இது இயலுவதாகின்றது . ஒரு வேலை செய்ய அதற்கான திறமை அவசியம். போட்டியான உலகில் இந்தத் திறமை மேலும் மேலும் புதுமைப்படுத்தப்படவேண்டியது தவிர்க்கயிலாததாக இருக்கின்றது . திறமையின் வளர்ச்சியை ஒரு மொழியறிவால் மட்டும் பெறமுடிவதில்லை. பிற மொழிகளில் சொல்லப்பட்ட பயன்மிகு கருத்துக்களையும் தெரிந்துகொண்டால் அது திறமையை மேம்படுத்த உதவுகின்றது . ஆங்கிலம் உலகப் பொதுவான மொழி . அது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் பெரிதும் வளர்ச்சியடைந்திருக்கின்றது . அதைப் புறக்கணித்து விட்டு எந்த மொழியும் தனிமனிதர்களின் திறமையை வளர்த்து தானாக வேலைவாய்ப்பை தரக்கூடிய வாய்ப்பைப் பெற்றுவிடமுடியாது . அது அம் மொழி கற்ற அறிஞர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் செய்த சாதனைகளால் மொழியில் ஏற்படுத்திய வளர்ச்சி . மொழியின் வளர்ச்சி என்பது அதன் சொல்லுந் திறத்தை அதிகமாக்குவதுதான்.
தமிழ் மொழியின் சொல்லுந்திறத்தை மேம்படுத்த புதிய கலைச்சொல்லாக்கம் , மற்றும் பரவலாக்கம் மூலம் மேற்கொள்ளவேண்டும் . அயல் மொழிகளில் உள்ள அறிவியல் மற்றும் தொழிநுட்பா நூல்களை மொழிபெயர்த்து தமிழ்க்கு அறிமுகம் செய்யவேண்டும் . இரு மொழி வல்லுநர்கள் மூலமே இது இயலும் . தமிழ் மொழி மட்டுமே தெரிந்தவர்கள் தமிழகத்தில் மட்டுமே வேலை செய்யமுடியும். திறமையை வளப்படுத்திக் கொள்ள சுய வாய்ப்புக்கு கிடைப்பதில்லை . வேலைவாய்ப்பு கிடைக்காத போது இடப்பெயர்த்து செல்லவேண்டிய அவசியம் ஏற்படும் . அப்போது புதிய இடத்தின் மொழியைத் தெரிந்திருக்கவேண்டும் , பொதுவாக ஆங்கிலம் தெரிந்தவர்கள் உலகில் எங்கு வேண்டுமானாலும் வேலை தேடிப் பெறலாம் (ஆங்கிலம் தெரியாத வட மாநிலங்களைத் தவிர்த்து).
தமிழும் ஆங்கிலமும் தெரிந்திருந்தால் திறமையைத் தன் சுயமுயற்சியால் வளர்த்துக்கொள்ளவும் , உலகில் எங்கும் வேலைவாய்ப்பைத் தேடவும் முடியும். தமிழும் ஆங்கிலமும் படிப்பின் பூரணத்துவத்தை அளித்துவிடுகின்றது.முன்றாவது மொழி தேவையற்றது . முன்றாவது தாய்நாட்டு மொழியால் ஆங்கில மொழிபோல சுய திறமையை வளர்த்துக்கொள்ள முடிவதில்லை . ஹிந்தி பிற மாநிலங்களில் வேலை நிமித்தமாகச் செல்வோருக்கு மட்டுமே தேவை . மேலும் இரு மொழிக்கொள்கை அணைத்து மாநில ங்களிலும் சமமாகப் பின்பற்றப்படுமானால் ஆங்கிலத்தின் மூலமே இந்தியவெங்கும் மொழிச் சிக்கல் இன்றி பணியாற்ற முடியும்
தமிழ் மொழிக் கல்வி என்பது மொழி அறிவு மட்டுமின்று பிற பாடங்களையும் தமிழில் கற்பதாகும். தமிழ்மொழியை நாங்கள் தான் வளர்க்கின்றோம் என்ற தோற்றத்தை உருவாக்க தமிழ்வழி கல்வி கற்பவர்களுக்கு ஊக்கத்தொகையும் வேறு சில சலுகைகளும் வழங்குகின்றார்கள். இது வேலைதேடும் போது கைகொடுப்பதில்லை.சரியான வேலையில் தேர்வு செய்யப்படுவதற்கு திறமையும் அந்தத் திறமையை வளர்த்ததிற்கும் வளர்ப்பதற்கும் அடிப்படியாக இருக்கும் மொழியறிவும் தேவை. மொழியறிவில்லாதவர்கள் இருக்கும் திறமையை மேம்படுத்திக்கொள்ள முடிவதில்லை என்பதால் சேர்ந்த வேலையில் உயர்நிலையை அடையமுடிவதில்லை. மொழி ஓர் இடைஊடகம் . அதன் மூலமே அம்மொழி தெரிந்த இருவர் செய்திகளைப் பரிமாறிக்கொண்டு தெரியாதனவற்றைத் தெரிந்துகொள்ளமுடியும் . தொழிநுட்பக் கருத்துக்களைப் படித்து அறிந்து கொள்ளமுடியும்.முதலில் ஒருவருடைய அறிவிற்கும் தகுதிக்கும் ஏற்ற வேலையைக் கொடுங்கள். அதில் முன்னேறுவதற்கான வாய்ப்பு அனைவருக்கும் சமமாக இருக்கும் போது ,முன்னேறுவதற்கு எது தேவையோ அதை அவர்களாகவே தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். தகுதியில்லாதவர்கள் முன்னுரிமை பெறும் போக்கு நிலவும் போது ஒரு வேலையைப் பெறுவதற்கு குறைந்தபட்ச கல்வி கூடத்தேவையில்லை என்ற மன நிலையே மாணவர்களிடம் மேலோங்கிநிற்கின்றது. ஒரு மொழியைக்கொண்டு தன் திறமையை வளர்த்துக்கொள்ளாதவன் எத்துணை மொழிகள் படித்தாலும் திறமைகளை வளர்த்துகொள்ளத் தெரியாதவனாகவே இருப்பான் .
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது மொழியறிவு இல்லை மொழியைக்கொண்டு மக்கள் ஈட்டிய திறமைகள் தான் அதைத் தீர்மானிக்கின்றது . இந்தக் கருத்தின் அடிப்படையில் தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது தமிழ் மொழி மூலம் அறிவியலையும் ,தொழிநுட்பங்களையும் கற்றுக்கொள்ள தடைகள் இல்லாத வழிக ளை ஏற்படுத்து வதோடு , திறமையைச் சுயவிருப்பத்தோடு வளர்த்துக்கொண்ட இளைஞர்களுக்கு அவர்களுக்கான வேலையை அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேடிக்கொண்டிருக்கமால் , வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கவும் வேண்டும் .தமிழில் அறிவியல் , தொழில்நுட்பம், ஆளுமை , சட்டம் போன்ற துறைகளை மேம்படுத்த சங்கம் உருவாக்கப்படவேண்டும் . இது செலவுக்கணக்கு காட்டுவதற்காக இல்லாமல் மொழி மற்றும் நாட்டின் வளர்ச்சியில் கொண்டுள்ள உண்மையான நோக்கமாகவும் இருக்கவேண்டும்.
Monday, March 10, 2025
மைய அரசும் மாநில அரசும் போட்டிபோட்டுக்கொண்டு 50 -80 % குறைந்த விலையி,ல் மருந்துகளை அளிக்கும் கடைகளை த் திறந்துள்ளன. கல்வி பயிலும் மாணவர்களுக்காக ஏன் குறைந்த கல்விக் கட்டணத்தில் பள்ளிகளையும் கல்லூரிகளையும் போட்டிபோட்டுக்கொண்டு நிறுவக்கூடாது.? குறைந்த விலையில் அரசு உணவகங்களை எங்கும் நிறுவலாமே. மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் அரசு இருக்கும் சாலைகளை சுங்க வரியில்லா சாலைகளாக மாற்றலாமே . இருப்புக்கு குறைந்த வட்டி வழங்கும் வங்கிகள் சேமிப்புக்கணக்கில் குறைந்த இருப்பு இருந்தாலும் பணம் பிடித்தம் செய்யாமல் இருக்கலாமே. அரசின் நோக்கம் மக்கள் நலமே என்றிருக்க வேண்டும்.
Saturday, March 8, 2025
பதவி கிடைக்காமல் பரிதவிக்கும் பல மூத்த ஆரசியல்வாதிகள் , சினிமாவில் பெரும் பொருள் சம்பாதித்துவிட்டு வாய்ப்பின்றி கட்டாய ஓய்வு பெரும்நாளில் அரசியலுக்குத் தாவும் நடிகர்கள் , அரசியலில் எப்படியாவது நேர்மைத்தனத்தை புகுத்திவிட மாட்டோமா என்று நிறைவேறாத கனவுகளோடு எந்தப்பின்புலமும் இன்றி ஆழந்தெரியாமல் அரசியலில் காலைவிடும் விமர்சகர்கள் எல்லோரும் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த ஒரே செயல் முறையைத்தான் பின்பற்றி வருகின்றார்கள் .இதைக்கலாங்காலமாய் கண்டு மீண்டும் மீண்டும் ஏமாந்து போகும் மக்கள் பெரும்பாலும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவர்களுடைய பேச்சையும் செய்முறைகளை கேலிபேசுகின்றார்கள் அல்லது எதிர்வாதம் செய்கின்றார்கள் .
உடைந்த மண்பானையை ஓட்டுவது எளிதில்லை. கெட்டுப்போன சமுதாயத்தை சீர்படுத்தி நேர்மைத்தனத்தை நிலைநாட்டுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. அது உண்மையில் மற்றொரு சுதந்திரப்போராட்டமாகத்தான் இருக்கும் . சமுதாயத்தில் நேர்மைத்தனம் தேவை என்பதற்கான புரிதல் மக்களிடம் சிறிதளவும் இல்லை. சாதி ,மதம், மொழி எனப் பல்வேறு காரணங்களினால் மக்கள் காலங் காலமாய் பிரித்தாளப்பட்டு வந்திருக்கின்றார்கள் . வாழ்வாதாரம் நலிவந்தடைந்து வருவதால் நேர்மைத்தனம் அவர்களுடைய எண்ணங்களில் எள்ளளவும் இல்லை
ஊழலை ஒழிப்பதுநிச்சியமாக தனி மனிதர்களால் முடியாது. ஏனெனில் இது ஆட்சியாளர்களின் வருமானமாக இருக்கின்றது .எனவே இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால் ஆட்சியில் பங்கேற்கவேண்டும் . அரசியலில் ,சமுதாயத்தில் ஊழலை ஒழிப்பதையும் , நேர்மைத்தனத்தை வளப்படுத்துவதையும் ஒரே நாளில் நிகழ்த்திவிடமுடியாது என்பதை இவர்கள் உணரவேண்டும் . புதிதாய் அரசியலுக்கு வருபவர்கள் ஏற்கனவே அரசியலில் இருப்பவர்களை விமர்சிப்பதை மட்டுமே வெற்றிக்கான யுக்தியாக க் கொண்டுள்ளார்கள். அவர்கள் செய்த ஊழல்களை பட்டியலிடுவதால் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுவதில்லை. அதைத் தடுப்பதற்கான சட்டரீதியிலான வழிமுறைகள் எல்லோரும் அறியுமாறு செய்யவேண்டும் . ஊழலை நிரூபித்து தண்டனை வாங்கிக்கொடுக்கவேண்டும் .
புதிதாக அரசியலில் வருபவர்கள் அரசியலில் என்ன மாற்றங்களைச் செய்யப்போகின்றோம் , எப்படி செய்யப்போகின்றோம் , ஏன் செய்யப்போகின்றோம் என்ற முழுமையான விவரங்களை மக்கள் அறியச்சொல்லவேண்டும் . அதற்கான திட்டங்கள், செயல்முறைகள், நீதி போன்றவற்றைத் தெரிவிக்கும் போதுமக்களிடம் நம்பிக்கை மலர்வதை பார்ப்பீர்கள் .இதைப்பற்றி அடிக்கடி மக்களிடம் பேசுங்கள் , கடடுரைகள் எழுதி வெளியிடுங்கள். போலித்தனமான விளம்பரம் செய்யாதீர்கள் . உங்களுடைய சொற்கள் உண்மையானவை என்ற நம்பிக்கை மக்களிடம் வரும்வரை இதை மட்டுமே செய்யுங்கள் . இதற்கு எதிர்ப்பிருந்தால் அதற்கு தகுந்த விளக்கம் அளியுங்கள் . அதன் பிறகு நீங்கள் செய்ய விரும்பிய அரசியல் மாற்றங்களை நீங்கள் செய்யவேண்டியதில்லை . அதை மக்களே பார்த்துக்கொள்வார்கள். அத்தகைய மக்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் எதிர்த்தரப்பினரால் எதுவும் செய்யமுடியாது போகும் .இந்த மாற்றங்கள் மெதுவாக நடைபெறும் என்பதால் அவசரப்பட்டு செய்யும் முயற்சிகள் செயலைப் பாழ் படுத்திவிடும் .
Sunday, March 2, 2025
அரசியல் பாதையில் கொள்ளையடிப்பதை மறைக்கவே மக்களுக்கு இலவசம் வழங்குவதாக அறிவித்து ஒரு சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு மக்களை அலையவிட்டு , தங்களுக்கு அதிருஷ்டம் இல்லை அதனால் கிடைக்கவில்லை என்று அவர்களாகவே நொந்துகொள்ளுமாறு செய்கின்றார்கள். இந்த இலவசமும் சரி , ரேஷன் கடை விநியோகமும் சரி எதுவும் முழுமையாக எல்லோருக்கும் கிடைப்பதில்லை .தவறு செய்து மக்களால் பிடிபட்ட அரசு ஊழியர் உண்மைகளை உளறிக் கொட்டிவிடக்கூடாது என்று ஊதியத் தோடு விடுப்பு அளித்து விட்டு மக்களைத் திருப்திப்படுத்த பணியிடை நீக்கம் என்று மக்களை ஏமாற்றுகிறார் கள். மக்கள் ஏமாற்றினால் அரசாங்கம் அவர்களை இனமறிந்து தண்டிக்கும் . ஆட்சியாளர்கள் தவறுசெய்தால் தண்டிப்பதற்கு நம்முடைய அரசியல் அமைப்பில் வழியில்லாதிருக்கின்றது.ஆட்சி என்பது ஒரு சேவையாக இல்லாமல் ஒரு தொழிலாக இருக்கும் வரை இந்த அமைப்பினால் மக்களுக்கு மேலும் மேலும் ஏமாற்றங்களே பரிசாக அளிக்கப்படும்.
.மக்களுக்காக நேர்மையாகப் பணியாற்றும் ஆட்சியாளர்களும் அரசு ஊழியர்களும் இருப்பதற்கான ஆட்சியியல் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆட்சியில் அதிகாரத்துடன் கூடிய மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும். மையத்தில் மக்கள் சபை போல மாநிலத்திலும் ஒரு மக்கள் சபை அமைக்கலாமே . இதில் கட்சி சார்பில்லாத பலதுறை சார்ந்த அறிஞர்கள் , நன்மக்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படலாம் . பல்கலைக்கழக பேராசிரியர்கள், பரிசு பெற்ற எழுத்தாளர்கள் , ஆன்மிக வாதிகள் , எவ்வித எதிர்பார்ப்புமின்றி மக்களுக்காகத் தொண்டாற்றும் மருத்துவர்கள் , பிரதமரின் விருது பெற்ற காவலர்கள் , விளையாட்டு வீரர்கள் , என ஒரு நூறுபேர் அடங்கிய குழுவை ஏற்படுத்தி அரசின் எந்த நலத்திட்டமும் இந்தக் குழுவின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்த வேண்டும் .என்று வரைமுறைப்படுத்தலாம். For that we can reduce the number of ministers in the ministry .