Saturday, May 18, 2013

Creative Thoughts


Creative thoughts
மனித முயற்சிகளுக்கு மட்டும் தான் பலன் கிடைக்கும் .வெறும் தெய்வ நம்பிக்கைகளுக்கு ஆசிர்வாதம் மட்டும் தான் .அப்படியென்றால் தெய்வ நம்பிக்கை ஏன் ? தெய்வ நம்பிக்கை மனதைப் பண்படுத்தி மனிதர்களின் ஒழுகலாற்றை மேம்படுத்தும் .அது பின்னேற்றத்திற்கு நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் முட்டுக்கட்டை போன்றது .

எழுதுவது மூலம் கருத்தக்களை மக்களுக்கு எடுத்துச்செல்வதுதான் உன் விருப்பமென்றால் எழுதுகோல் தங்கப் பேனாவோ,சாதாரணப் பேனாவோ ,பென்சிலோ ,கரித்துண்டோ  எப்படியிருந்தால் என்ன,நன்றாக எழுதினால் சரிதான் 


செல்வந்தனாவதற்கு எளிய வழியொன்றைக் கூறுவார்கள். தேவையில்லாமல் கண்டபடி செலவழிக்காமல் சேர்த்ததை சேமித்து வைத்தாலே போதுமானது .செல்வந்தனாகி விடலாம்.கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதுதானே நமக்குப் பிடித்த பழக்கம். 

அல்லது செய்பவர்களைத் திட்டுவதை விட நல்லது செய்பவர்களைப் போற்றிப் புகழ்வது சாகாத சமுதாயத்திற்கு நல்லது .இதில் உள்ள உண்மையான சிக்கல் என்னவென்றால் யார் உண்மையிலேயே நல்லவர்கள் என்று தீர்மானிப்பதுதான்.அல்லது செய்பவர்களைத் திட்டினால் மேலும் மேலும் கெடுதலையே உண்டாக்கும்.

எல்லோரும் உனக்கு உதவி செய்யவேண்டுமென்று விரும்பினால் நீயும் எல்லோருக்கும் உதவ முன் வரவேண்டும் .உதவட்டும் பின் உதவுவோம் என்று உன்னைப்போல எல்லோரும் நினைத்தால் யாரும் யாருக்கும் உதவமுடியாது 

ஆயிரம் ரூபாயை பறிகொடுத்தவன் இன்றைக்கு பல ஆயிரம் செலவழித்தாலும் திருடனைக் கண்டுபிடித்தாலும் கண்டுபிடிக்காவிட்டாலும்,இழந்ததை முழுசாக மீட்டுப் பெறமுடியாது .அதனால் பல திருட்டுக்கள் வெளிச்சத்திற்கு வருவதேயில்லை .குற்றம் பெருகிக் கொண்டே போனால் அது சமுதாயத்திற்குப் பாதுகாப்பில்லை .இதைவிட அரசுக்கு இழுக்கு வேறில்லை .

No comments:

Post a Comment