Sunday, May 12, 2013

Creative Thoughts


Creative thoughts
உண்மையிலேயே உள்ளத்தில் நம்பிக்கை    உள்ளவர்கள்,செயலைத்  தொடங்க ஒரு கணம் கூடத் தாமதிக்க மாட்டார்கள். செய்யும் தாமதம்
அவநம்பிக்கையின் இருப்பைப் பொறுத்தது 

நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருப்பவர்கள் கடவுள் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு விட்டு அதுதான் தன்னம்பிக்கை என்று சும்மா  இருப்பார்கள்
.
நம்பிக்கை உள்ளவர்கள் தன்னம்பிக்கை ஏற்படுவதற்குத் தங்களைத் தகுதிப் படுத்திக் கொள்வார்கள் .ஒரு செயலைச் செய்ய வேண்டுமானால் எப்படிச் செய்வது ,அதைச் செய்து முடிக்க என்னென்ன முன் செய்யவேண்டும்,இடையூறுகளை எப்படி எதிர் கொள்வது ,யாரிடம் உதவி பெறுவது என அது தொடபான பல விஷயங்களைத் தெரிந்து கொண்டு செயல்படுவார்கள் .

அனுபவம் 
 என்பது பாடம் கற்கும் போதே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் ஒரு கல்வி முறை..இது பள்ளிக் கல்வி,நூலறிவை விட பலமடங்கு வலிமையானது ,பயன்தரத்தக்கது .
நீண்ட அனுபவங்களைப் பெற்றவர்களே சாதனை படிக்கும் திறமையுள்ளவர்களாக இருக்கின்றார்கள்.சாதனைக்கும் அனுபவத்திற்கும் ஒரு நெருக்கமான தொடர்பு உண்டு.

இந்த வாழ்க்கையிலிருந்து அதிகமாக நன்மைகளையும், சுகங்களையும், மகிழ்ச்சியையும் பெற்று வாழவே எல்லோரும் விரும்புவார்கள் .ஆனால் எவ்வளவு விரும்புகின்றார்களோ அவ்வளவு முயற்சியில் ஈடுபடுவதில்லை .அதற்காக தன் விருப்பங்களை விட்டுவிட மாட்டார்கள் அதன் தாக்கத்தினால் பலர் குறுக்கு வழியில் அதை நிறைவேற்றிக் கொள்ள முயல்கின்றார்கள் .சராசரி நிலையிலே என்றும் வாழவேண்டும் என்பதிலிருந்து விடுபடவே விரும்புவார்கள். இன்று வாழ்வது போலவே நாளையும் வாழ யாரும் விரும்புவதில்லை.

நம்பிக்கை இருந்தால் கடலுக்குள் குடியிருப்புகள் கட்டலாம் (துபாய்) கடலுக்குள் விமானத் தளம் அமைக்கலாம் (ஜப்பான் )கடலடியில் குழாய் மூலம் ரயில் போக்குவரத்து நிறுவலாம் (இங்கிலாந்து ),மலையைக் குடைந்து போக்குவரத்து பாதை போடலாம் ,கடல் பரப்பின் பரப்பின் மேல் நீண்ட  பாலங்கள் கட்டலாம் (சீனா,பினாங் ),செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்றலாம் (அமெரிக்கா ).
நம்பிக்கை என்பது சிற்றுளி போன்றது.பிரச்சனை மலை போன்று பெரியதாக இருக்கலாம் .ஆனால் சிற்றுளி செயல்பட்டால் மலையே ஒருநாள் காணமல் போய்விடும்
.
வாழ்கையில் எதையுமே விரும்பிய மாத்திரத்தில் பெற்றதேயில்லை.நேரான வழியில் பெற்றதெல்லாம் நெடிய முயற்சியின் பின்னணி இருந்திருக்கும் .
.
நம்பிக்கை இருக்கும் போதுதான் வழிமுறைகள் தேடப்படுகின்றன .வழிகாட்டல்களும் தாமாகத் தோன்றுகின்றன.

 நம்பிக்கை என்பது உங்களுக்காகவே உங்களுக்குள் உங்களோடு இருக்கின்ற உற்ற நண்பன் நம்பிக்கை கொண்ட ஒரு சாதாரண மனிதன் பல மனிதர்களுக்குச் சமம். நான் ஒரு முறை சொன்னால் அது ஆயிரம் முறை சொன்னது போல என்பார்கள். இது உள்ளே இருக்கும் நம்பிக்கையில் அளவு கோல் போலும் .
நம்பிக்கை மட்டுமே உங்களைச் சிவப்புக் கம்பளம் விரித்து பெருமையுடன் கைகோர்த்து அழைத்துச் செல்லும்.

உள்ளத்தில் நம்பிக்கை உண்டாகும் போது உடலில் தேவையான ஆற்றல் ஊற்றெடுக்கின்றன .எண்ணங்கள் மேலும் சுத்திகரிக்கப்படுகின்றன .வெற்றிப் பாதை மனதிற்குள்ளேயே திட்டமிடப்பட்டு வரையப்படுகின்றது
.
அவநம்பிக்கை என்பது ஓர் எதிர்மறைச் சக்தி. உன்னைப் பின்னுக்குக் கொண்டு செல்லும்.
.
நம்பிக்கையோடு உறவு கொண்டாடும் மனம்  அவநம்பிக்கையை யாரோ என்று பார்க்கும் .அதனால் அவநம்பிக்கை வந்து விட்டால், அதை நியாயப்படுத்த மனம் புறக் காரண ங்களைத் தேட ஆரம்பிக்கும் .

நம்பிக்கை எப்படி வெற்றியின் அறிகுறியோ அதுபோல அவநம்பிக்கை தோல்வியின் அறிகுறி

No comments:

Post a Comment