Sunday, May 19, 2013

Mind Without Fear


Mind Without Fear
காதலில் தோல்வி என்று இளம் பெண்களும் இளைஞர்களும் தற்கொலை செய்து கொள்வது இன்றைக்கும் கூட தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதானிருகின்றது .பெற்றோர்கள் ஒப்புக்கொள்ளாமல் காதல் தோல்வியடைந்தவர்களை விட பொருந்தாத காதல் அல்லது ஒருதலைக் காதலில் விழுந்துவிட்டவர்களே அதிகம் மரணத்தை முத்தமிட்டிருக்கின்றார்கள் .

இந்திய சமுதாயத்தில் பெரியவர்களால் நிச்சியக்கப்பட்ட திருமணங்களே காலங்கால மாய் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன .இதற்கு அடிப்படைக் காரணம் சமூகப் பாதுகாப்பு ,குலத் தொழில் முன்னேற்றம் ,உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளுதல் ,குடும்ப கௌரவம் போன்றவைகளே ஆகும்.
சமுதாயப் பாதுகாப்பை விட சமூகப் பாதுகாப்பையே பல்வேறு சூழ்நிலைகளில் மக்கள் உள்ளார்ந்து விரும்புவதிலிருந்து இதை நாம் மறுக்கமுடியாது .
ஆண்டுக் கணக்கில்,பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை ஆராய்ந்து  வாழ்க்கையின் சராசரிப் போக்கை நம் முன்னோர்கள் மிகத் துல்லியமாக வரையறுத்து வைத்திருக்கின்றார்கள் .வாழ்க்கையையே அறிவியலாகப் பார்த்தவர்கள்.அறிவியல் விதிகள் போல வாழ்க்கை இலக்கணங்களை வகுத்தவர்கள் .இத் திட்டமிடப்பட்ட சராசரிப் போக்கை அனுசரித்தால் வாழ்க்கையில் தடம் புரண்டு வீழ்வதற்கு வாய்ப்பேயில்லை .இதில் அசைக்கமுடியாத நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தடம் மாறிச் செல்வதை ஏற்றுக் கொள்வதில்லை .தங்கள் சுதந்திரத்தில் பெற்றோர்கள் தேவையில்லாமல் குறுக்கிடுவதாகவே இன்றைய இளைய தலைமுறையினர் கருதுகின்றார்கள் .
இது ஒழுங்கமைவில் ஒழுங்கீனத்தை உண்டாகுகின்றதா அல்லது ஒழுங்கமைவு மேலும் திருத்தி மேம்படுத்துகின்றதா என்பது இன்னும் சரியாகப் புரியாமல் இருப்பதால் இதில் ஒட்டியும் வெட்டியும் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதானிருக்கின்றது .
காதல் என்பது ஓர் உயிரினத்தின் சாகமைக்காக இயற்கை அளித்த வரம்.அதைத் தவிர்த்து காதலுக்கு நாம் அளிக்கும் எந்த விளக்கமும் செயற்கையூட்டப்பட்டதாகத்தான் இருக்கும்.உறவுக்கு ஒரு துணை வேண்டும். உறவே ஒரு விருப்பமாக வரும்போது காதல் மலர்கின்றது.அதுதான் மனதில் காதலைத் தூண்டுகின்றது .காதல் என்று சொன்னால் ஒருவரையொருவர் நேசிக்கின்றோம் என்று  மேற்போக்காக விளக்கம் கொடுக்கலாம் .ஆனால் உண்மையில் காதலர்கள் எதைக் காதலிக்கின்றார்கள் என்பதற்கு நேர்மையான, ஒளிவு மறைவில்லாத விளக்கம் சொல்லமாட்டார்கள். காதலியென்றால் ,காதலியின் அழகையா? அறிவையா? உடலையா? உறவையா? இல்லை பொருளையா
இயற்கைக் காதலுக்குச் செயற்கைச் சாயம் பூசப்போய் அதில் தற்கொலையும் ஏதும் புரியாமலையே உள்ளே நுழைந்துவிட்டது .காதலியுங்கள் ஆனால் இல்லற விருப்பத்துடன்,இருமனம் ஒப்ப,ஒரு புரிதலுடன் காதலியுங்கள் .வெற்றி பெறும்வரை புனிதக்காதல்,வெறுப்பு  வந்துவிட்டால் அல்லது கசந்து போனால் வேண்டாக் காதல் என்று காதலைக் கோபுரத்திலும் வைக்கவேண்டாம், குப்பையிலும் தூக்கியெறியவேண்டாம்.காதலைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் தற்கொலை செய்துகொண்டு தன்னோடு காதலுக்கும் சமாதி கட்டமாட்டார்கள்.
காதலை வெறும் சுகத்திற்காக இறைவன் தரவில்லை .அது  இனவிருத்திக்காக தெய்வமிட்ட கட்டளை .தற்கொலையால் இனவிருத்தியைக் கொலை செய்யவேண்டாமே 

No comments:

Post a Comment