Micro
aspects of developing inherent potentials
வாழ்கையில் முன்னேற்றத்தைப் பெற்று அதை நிலைபடுத்திக் கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதை சிறு வயதிலேயே முறையாகத் திட்டமிடா விட்டால் ,பந்தயத்தில் மற்றவர்களை முன்னுக்குச் செல்ல நீங்களே அனுமதி கொடுத்தது போலாகிவிடும் .இது உண்மையில் உங்களை எல்லைக் கோட்டிலிருந்து வெகு தொலைவு பின்னுக்குத் தள்ளி விடும் .
செல்லுமிடத்தை முடிவு செய்யாதவன் எப்பக்கம் சென்றாலும் செல்லும் பாதைதான் ஆனாலும் அது வெற்றிப் பாதையாக ஒருபோதும் அமைவதில்லை.செல்லுமிடத்தை முடிவு செய்யாதவர்களே பல திசைகளில் பயணிக்கும் தவறான முடிவை மேற்கொள்வார்கள் வாழ்கையின் எதிர் காலத்தைப் பற்றித் திட்டமிட வேண்டிய காலத்தை விட்டுவிட்டால் ,காலத்தை இழப்பதோடு ,எத்திறமையையும் முழுமையாக வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புக்களைத் தவறவிட வேண்டியிருக்கும் .
எல்லாத் திறமைகளும் தேவை என்று எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக் கொள்வதால் .ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் திறமையை வளர்த்துக் கொண்டவர்களுடன் போட்டி போட்டு முன்னேற முடிவதில்லை.ஒரு குறிப்பிட்ட விருப்பத் துறையை தேர்வு செய்துவிட்டால்
,அது தொடர்பான திறமைகளை வளர்த்துக் கொள்ள தொடர்ந்து பயணிப்பதுதான் வெற்றியை அடையும் எளிய வழி .கிணற்றுத் தவளையாக இருக்கும் வரை செல்லுமிடம் அறிந்திருந்தாலும் செல்லும் வழியைப் புரிந்து தேர்வு செய்யத் தெரியாது போகும் .
செல்லுமிடம்,செல்லும் வழி ,பயணிக்கும் முறை ,பயணம் மேற்கொள்ளத் தேவையான தகுதி ,பயணத்தின் போது ஏற்படும் இடையூறுகளை எதிர் கொள்ளும் வழிமுறைகள் ,செல்லுமிடத்தைச் சென்றடைந்த பின் புதிய சூழ்நிலையில் வாழ்கையை நிலைப்படுத்திக் கொள்ள மேற்கொள்ளவேண்டிய மாற்றங்கள்-இப்படிப் பல விஷயங்களை நாம் ஒவ்வொரு நிலையிலும் சரியாகத் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது .பொதுவாக இதில் செய்யும் பிழைகளை விட காட்டும் மெத்தனப் போக்கே நம்மைப் பின்னுக்குத் தள்ளி விடுகின்றது .
No comments:
Post a Comment