மகன் தந்தைக்கு ஆற்றும் ஓர் உதவி
தர்மராஜன் இலஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமை அதிகாரி .இலஞ்சம் வாங்குவது குற்றம் என்று பொதுக் கூட்டங்களில் பேசுவது அவருக்கு ரெம்பப் பிடிக்கும் ..அன்றைக்கு ஐ .ஐ டி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்திரனாராகப் பங்கேற்றுப் பேசவேண்டியிருந்தது
.
"இலஞ்சம் கொடுப்பவர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும் வாங்குபவர்கள் மறுக்கவேண்டும்
.திருந்தாத மனிதர்களைச் சட்டம் தண்டிக்கத் தவறினால் நன்மக்கள் தாம் அதைச் செய்யவேண்டும் .லஞ்சம் பிடுங்கியவரால் கொடுத்தவருக்கு ஏற்பட்ட இழப்பை அவர் மூலமாகவே ஈடு செய்வதை மக்களால் செய்யமுடியும்"
என்று உற்சாகமாகப் பேசினார் .
ஐ .ஐ.டி யில் படித்துக் கொண்டிருந்த அவருடைய மகன் ராஜராஜனுக்கு ஒரு அசாத்தியமான தைரியம் வந்தது.சில மாதங்களுக்கு முன்பு .தன் தந்தைகேட்ட இலஞ்சத்தில் பாதியைக் கையிலிருக்கும் பணத்தைக் கொண்டு கொடுத்து மீதியை வாங்கிய கடனை அடைப்பதாக இனி வாங்கப் போகும் 2 ஆண்டுகாலச் சம்பளத்திலிருந்து தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு ஓர் அரசுப் பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்த அஞ்சுகத்தைத் தேடிக் கண்டுபிடித்து பதிவுத் திருமணம் செய்துகொள்ள அந்தத் தையிரியம் உந்தித் தள்ளியது .மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல்
No comments:
Post a Comment