எழுதாத கடிதம்
மக்களிடம் வரியே வாங்காமல் ஆட்சியைத் திறம்பட நடந்ததும் நாடுகளும் தான் இருக்கின்றன .நாட்டின் கனிம வளத்தையும் ,இயற்கை வளத்தையும்.பொருள் உற்பத்தியையும் பெருக்கிக் கொள்வதால் பொருளாதாரத் தட்டுப்பாடு வருவதில்லை . கனிம வளத்தையெல்லாம் சுரண்ட விட்டுவிட்டால் மக்களிடமிருந்து எவ்வளவு வரி வாங்கினாலும் வளர்ச்சிக்குக் காணாது.
யாரும் வெறும் சம்பாதித்ததைக் கொண்டே மகளுக்குக் கல்யாணம் செய்வதில்லை..வீட்டில் இருப்பதுதான் மிகுந்த நம்பிக்கை தருகிறது .
மக்களின் வருமானத்தைப் பெருக்கிவிட்டு வருமான வரியை உயர்த்தினால் அது வளம் பெறும் நாடு. சேவையில் லாமல் கடமைகளை எல்லாம் சேவைகள் எனச் சொன்னால் அது அரசியல் இல்லை,அரசியல் வியாபாரம் .
மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள் ,இல்லாருக்கு தன்னிடம் இருப்பதையெல்லாம் பிரதிபலன் பாராது மன மகிழ்ச்சியோடு கொடுப்பார்கள் வள்ளல்கள்
தனக்கு மிஞ்சி இருப்பதைத் தானம் செய்வார்கள் நன்மக்கள் .மக்கள் ராஜ்யத்தில் சேவை வரியொன்றுமில்லை .இலக்கணங்கள் மாறும் ஜனநாயகத்தில் ஏற்கனவே எங்கும் எதிலும் சேவையில்லை.இதில் சேவை வரியென்றால் அது சேவையின் ஊழல் ஆகாதோ .
கடமைக்கும் சேவைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் .
மக்களை ஆள்வது ஒரு சேவை யென்றால் .ஆளப்படுவதற்கு உட்படுவதும் ஒரு சேவைதான் .
உங்களால் வரி விதிக்க முடியும். மக்களால் அது முடிவதில்லை.
No comments:
Post a Comment