நம்முடைய தனித்துவமான சிறப்புகள் , பாரம்பரியமான பண்பாடுகள் .மரபுகள் அழிந்துபோய்விடாமல் பாதுக்கப்படவேண்டும் ஏனெனில் அவையாவும் நம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் முகவரி. அதன் மேன்மையைக் கட்டிக்காக்க வேண்டிய காலகட்டத்தில் இன்றைய இளையதலைமுறைகள் வாழந்து வருகின்றார்கள்
திருமண முறிவு இன்றைக்கு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது . மென்மையான காரணங்களுக்காக ஏற்படும் முறிவுகளை அமைதியான மனநிலையில் பேசி தீர்வு செய்துகொள்ளலாம் .நிலம்- மேடு பள்ளம் சேர்ந்துதான் இருக்கும் . நாள்- இரவும் பகலும் கூடியதுதான் , காலம்-வெயில் ,மழை, இணைந்ததுதான் . காற்று -தென்றலும் ,புயலும் கலந்ததுதான் . கருப்பும் வெள்ளையும் சேர்ந்தால்தான் ஒரு சித்திரத்தையே உருவாக்கமுடியும் . அப்படியிருக்கையில் வாழ்க்கை மட்டும் முழுமையாக இன்பமயமானதாக இருக்குமா? இயற்கையின் ஆளுமையை யாராலும் மாற்றி அமைக்க முடியாது
.வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதான். ஒன்றைச் சுவைத்துவிட்டு மற்றொன்றை மறுப்பது என்பது
இயலாது .சின்னச் சின்ன துன்பங்களை பெரிதுபடுத்திவிட்டு த் தவறான முடிவு எடுக்கும் பழக்கத்தை
யார் எப்போது கற்றுக்கொடுத்தார்கள் ? அதை விட்டுவிடுங்கள் . வாழ்க்கை என்பது ஒருவருக்கு
கிடைத்தற்கரிய வரம் . அது எல்லோருக்கும் கிடைத்திருக்கின்றது என்பதற்காக அதைக் குறைத்து
மதிப்பிட்டுவிடவேண்டாம் . அமைதியாக இருக்கும் போது முடிவு எடுங்கள். எதையும் பெரியவர்களிடம் கலந்து
செயல்படுங்கள்.
No comments:
Post a Comment