Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Sunday, August 29, 2010
vanna vanna ennangal-12
உனக்கு மட்டும் ஓர் இரகசியம்
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ஓர் இரகசியம் சொல்வேன்
காது கொடுத்து அதைக் கேட்டு
காலத்தை நீ வெல்வாயா ?
ஒழுக்கம் உன்னிடம் குடியிருந்தால் போதும்
உயர்விற்கு வழிகள் கூடிவரும்
வெத்துப் பேச்சைக் குறைத்தால் போதும்
வேலைகள் தானாய் நிறைவேறும்
சொற்கள் சுத்தமாய் இருந்தால் போதும்
உலகம் உன்னை நம்பும்
சோம்பல் தினமும் வந்தால் போதும்
சுகமெல்லாம் பறந்து போகும்
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ஓர் இரகசியம் சொல்வேன்
காது கொடுத்து அதைக் கேட்டு
காலத்தை நீ வெல்வாயா ?
நல்லோர் அறிவுரை கேட்டால் போதும்
நல்லதே வாழ்க்கையில் நடக்கும்
தீயோரைத் தாண்டிப் போனால் போதும்
தீமைகள் விலகிப் போகும்
போராடத் துணிவு இருந்தால் போதும்
புகழோடு வாழ முடியும்
பொறுமையைக் கடைப் பிடித்தால் போதும்
உன்பங்கு உன்னைச் சேரும்
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ஓர் இரகசியம் சொல்வேன்
காது கொடுத்து அதைக் கேட்டு
காலத்தை நீ வெல்வாயா ?
தொலை நோக்கு தொடர்ந்தால் போதும்
தொல்லைகளைத் தவிர்க்க முடியும்
சிந்தனை வளம் வளர்ந்தால் போதும்
சிறப்பால் சிறக்க முடியும்
களைப்பின்றி உழைக்கத் தெரிந்தால் போதும்
களிப்பில் திளைக்க முடியும்
நம்பிக்கை நெஞ்சில் துளிர்த்தால் போதும்
எதையும் சாதித்து விடமுடியும்
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ஓர் இரகசியம் சொல்வேன்
காது கொடுத்து அதைக் கேட்டு
காலத்தை நீ வெல்வாயா ?
உற்சாகம் உறங்காமல் விழித்திருந்தால் போதும்
உலகமே உன்கையில் உறங்கும்
இறைவனை இதயத்தில் தீண்டினால் போதும்
தீயஎண்ணங்கள் தேய்ந்து போகும்
பொறாமையைப் புதைத்து விட்டால் போதும்
புகழ் உன்னைத்தேடி வரும்
தவறுகளைத் தவறாது தவிர்த்தால் போதும்
உறவுகள் உன்னோடு ஒட்டும்
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ஓர் இரகசியம் சொல்வேன்
காது கொடுத்து அதைக் கேட்டு
காலத்தை நீ வெல்வாயா ?
Saturday, August 28, 2010
Eluthatha kaditham-8
அன்பார்ந்த இந்தியப் பெருங்குடி மக்களே ,
என் பேத்தி சிங்கப்பூரில் செக் -4 படிக்கின்றாள்.அவளுடைய
வகுப்பில் சீன ,மலேசிய மற்றும் இந்திய மாணவர்கள்
படிக்கின்றார்கள் .இந்திய மாணவர்கள் பெரும்பாலும் தமிழ்
மொழியை ஒரு பாடமாகப் படிப்பார்கள் .ஒரு நாள் தமிழ்
வகுப்பில் அவளுடைய ஸ்கூல் டீச்சர் வகுப்பு மாணவர்களிடம்
எதிர்காலத்தில் என்னவாக ஆக விரும்புகின்றீர்கள் என்ற கேள்வி
கேட்டதாகவும் அதற்கு அவள் பதில் கூறியதாகவும் கூறினாள்.
அப்போது அக் கேள்விக்கு என்ன பதில் கூறினாய் என்று நான்
கேட்டேன்.எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போவதாகக்
கூறினேன் என்றும் அதற்கு டீச்சர் " அரசியலிலா ஈடுபடப்
போகின்றாய் ,அப்படியானால் உலகில் எங்கு வேண்டுமானாலும்
அரசியலில் ஈடுபடு ஆனால் இந்தியாவில் மட்டும் வேண்டாம்,
அங்கு நடப்பது அரசியலே இல்லை " என்று சொன்னார் என்றும்
பதிலளித்தாள்.பேத்தி சின்னப்பிள்ளை என்பதால் அதன் உட்பொருளை
அவளால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஆனால் அவள் என்னிடம்
அப்படிக் கூறியபோது யாரோ நெருஞ்சி முள்ளால்
நெஞ்சைக் குத்தியது போல இருந்தது.ஊர் சிரித்து உலகமே சிரிப்பதற்கு
முன்னால் நாம் விழித்துக் கொள்ளவேண்டாமா?
இந்திய அரசியலே நீ எப்பொழுது நிமிர்ந்து நிற்கப் போகின்றாய் ?
உன்னுடைய இழுக்கிற்கு யார் காரணம்?அரசியல் வாதிகளா ?
அப்பாவி மக்களா ? இந்த நிலையை அப்படியே இருக்கட்டும்
என விட்டு விடப் போகின்றாயா ?மாற்றம் செய்ய வேண்டும்
என்றால், எப்படி? எப்பொழுது? யாரால்? செய்யப் போகின்றாய் ?
என்ன செய்யவேண்டும் என்று சொல்ல கொஞ்சம் யோசியுங்க !
அன்புடன்
காவேரி

Wednesday, August 25, 2010
Arika iyarpiyal -3
அறிக இயற்பியல் - 3
இரபீந்தர நாத் தாகூர்
(1861 -1941) இந்தியத் திருநாட்டிற்கு தேசிய கீதத்தைத்
தந்தவர் . இரபீந்திர நாத் தாகூர் ஒரு சிறந்த கவிஞர்
மட்டுமில்லை ,நல்ல இசைக் கலைஞரும் ,
ஓவியம் தீட்டுவதில் வல்லவரும் ,நாவல் ,நாடகம்
எழுதுவதில் ஒரு படைப்பாளியாகவும் இருந்தார் .இவருடைய
கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக 1913 -ல் இலக்கியத்திற்கான
நோபெல் பரிசைப் பெற்றார் .சாந்தி நிகேதனில் ஒரு ஆஷ்ரமம்
நிறுவி அங்கு ஒரு மாதிரிப் பள்ளிக்கூடத்தையும் நிறுவினார் .
தாகூர் ஒரு சிறந்த படைப்பாளியாக வருவார் என்று அவருடைய
தந்தையாரான தேவேந்திர நாத் தாகூருக்குத் தெரிந்திருந்தது. அந்த
இரகசியத்தை நாமும் தெரிந்து வைத்துக் கொண்டால் நம்
பிள்ளைகளையும் ஒரு சிறந்த வெற்றியாளனாக உருவாக்க முடியுமே . தாகூர் சிறு பிள்ளையாக இருக்கும் போது கிடைக்கும் காகிதங்களில் கவிதை என்று எதையாவது கிறுக்கி
அதைத் தன் தந்தையிடம் படித்துக் காட்டுவார் . அது அபத்தமாக
இருந்தாலும், அவரது தந்தையார்அதை வெகுவாகப் பாராட்டுவார் . அத்தோடு நில்லாமல் அதற்காக ஒருகைக் கடிகாரமும் பரிசு
அளிப்பார் . இந்த மனப்பூர்வமான பாராட்டும் ,பரிசும்
அவரை எதிர்காலத்தில் ஒரு தலை சிறந்த கவிஞனாக்கிவிட்டது.
உங்கள் குழந்தையினுடைய முயற்சி சிறிதெனினும் ,அதை வெகுவாகப் பாராட்டப் பழகிக்கொள்ளுங்கள் . அதைவிட
ஒரு சிறந்த ஊக்கம் உங்கள் குழந்தைக்கு இருக்கமுடியாது .
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் -2 ல் வந்த அஜித் அல்காவும், அந்தச் சிறுவன் ஸ்ரீகாந்த்-ம் வெற்றி மேடையைத்
தொட்டதற்கு அடிப்படைக் காரணம் அவர்களுடைய
பெற்றோர்கள் தொடர்ந்து அளித்த ஊக்கம்தான் . நம்புங்கள் ,எல்லாம் நம் எண்ணத்திலும் ,கையிலும்தான் இருக்கிறது .
*****************
அலைவு தானம் மாறும் ஊசல்
ஓர் உள்ளீடற்ற உலோகக் கோளம் நீரால் நிரப்பப்பட்டு ஊசல் குண்டாகஎடுத்துக் கொள்ளப்பட்டது. அக் குண்டின் அடிப்பாகத்தில்
ஒரு சிறிய துளையை ஏற்படுத்த நீரானது மெதுவாக வெளியேறும் .
ஊசல் அலைவுறும் போது இந்த வெளியேற்றம் ஏற்பட ,
ஊசலின் அலைவு நேரத்தில் என்ன மாற்றம் நிகழும் ?
*******************
ஊசல் குண்டிலிருந்து நீர் வெளியேறும் போது ஈர்ப்பு மையம் மாறுகிறது .கோளம் முழுதும் நீரால் நிரப்பப்பட்டிருக்கும்
போது அதன் ஈர்ப்பு மையம் கோளத்தின் மையமாக இருக்கும் .
நீர் துளை வழியாக வெளியேறும் போது பாதியளவு நீர் வெளியேறும் வரை ஈர்ப்பு மையம் கீழிறங்க ,ஊசலின்உண்மையான நீளம் அதிகரிக்கிறது .அதனால் அலைவு நேரம் தொடர்ந்து
அதிகரிக்கிறது . அதாவது ஊசல் மெதுவாக அலைவுறுகிறது .மீதி நீர்
வெளியேறும் போது வெற்றுக் கோளமாகும் வரை அதன் ஈர்ப்பு மையம் மேலேறிக் கோளத்தின் மித்தை மீண்டும் அடைகிறது . அப்போது அலைவு நேரம் தொடர்ந்து அதிகரித்து தொடக்கநிலை மதிப்பை எட்டுகிறது .
*****************
Tuesday, August 24, 2010
vanna vanna ennangal-11
11.இட்டலித் தத்துவம்
"காவேரி"
இன்றைக்கு வேண்டும் எனக்கு
இட்டலி என்றல்
என்றைக்கும் அதுவொன்றும்
மந்திரத்தில் விளைவதில்லை
கடைதெரு போய்
கடை கடையாய் ஏறி
கல்லில்லாத அரிசி வாங்கி
கருப்பில்லாத உளுந்தும் வாங்கி
அளந்தெடுத்து ஊறவைத்து
ஆட்டுக் கல்லிலிட்டு அரைத்து
இரண்டையும் ஒன்று கலந்து
இத்துணை உப்பிட்டு
அரைநாள் நொதிக்கவிட்டால்
அடுத்தநாள் மாவு ரெடி
அகன்ற சட்டியில் கொஞ்சம்
தண்ணீர் எடுத்து
ஆவிவர அடுப்பிலேற்றி
துணைத் தட்டில் ஈரத்
துண்டை விரித்து
சின்னச்சின்ன குழிகளில்
சிறிதளவு மாவை ஊற்றி
ஆறேழு நிமிடம்
ஆவியில் வெந்தபின்
ஊசி முனையில் பதம் பார்த்து
உரித் தெடுத்தால்
வெள்ளை இட்டலிப்பூக்கள்
வெம்மையிலும் பூத்திருக்கும்
தினம் உண்ணும்
இட்டலிக்கே நிலை
இதுவென்றால்
உன் எதிர்காலக் கனவுகளுக்கு
உருவமென்ன உடனேயா
வந்துவிடும் ?
உருவாக்கம் எதுவும்
உடனடி நிகழ்வில்லை
உருவமில்லாக் கனவுகள்
உண்மை நிகழ்வுகளாகப் பூக்க
எண்ணங்களுக்கு உரம் வேண்டும்
உழைக்க உறுதி வேண்டும்
பக்குவம் வர வேண்டும்
படிப்படியாய் உயர வேண்டும்.
"காவேரி"
இன்றைக்கு வேண்டும் எனக்கு
இட்டலி என்றல்
என்றைக்கும் அதுவொன்றும்
மந்திரத்தில் விளைவதில்லை
கடைதெரு போய்
கடை கடையாய் ஏறி
கல்லில்லாத அரிசி வாங்கி
கருப்பில்லாத உளுந்தும் வாங்கி
அளந்தெடுத்து ஊறவைத்து
ஆட்டுக் கல்லிலிட்டு அரைத்து
இரண்டையும் ஒன்று கலந்து
இத்துணை உப்பிட்டு
அரைநாள் நொதிக்கவிட்டால்
அடுத்தநாள் மாவு ரெடி
அகன்ற சட்டியில் கொஞ்சம்
தண்ணீர் எடுத்து
ஆவிவர அடுப்பிலேற்றி
துணைத் தட்டில் ஈரத்
துண்டை விரித்து
சின்னச்சின்ன குழிகளில்
சிறிதளவு மாவை ஊற்றி
ஆறேழு நிமிடம்
ஆவியில் வெந்தபின்
ஊசி முனையில் பதம் பார்த்து
உரித் தெடுத்தால்
வெள்ளை இட்டலிப்பூக்கள்
வெம்மையிலும் பூத்திருக்கும்
தினம் உண்ணும்
இட்டலிக்கே நிலை
இதுவென்றால்
உன் எதிர்காலக் கனவுகளுக்கு
உருவமென்ன உடனேயா
வந்துவிடும் ?
உருவாக்கம் எதுவும்
உடனடி நிகழ்வில்லை
உருவமில்லாக் கனவுகள்
உண்மை நிகழ்வுகளாகப் பூக்க
எண்ணங்களுக்கு உரம் வேண்டும்
உழைக்க உறுதி வேண்டும்
பக்குவம் வர வேண்டும்
படிப்படியாய் உயர வேண்டும்.
Sunday, August 22, 2010
Arika iyarpiyal -2
அறிக இயற்பியல் -2
ஓர் அரசியல்வாதி விட்டுச் சென்ற இடத்தைப் பிடிப்பதற்கு
நான் ,நீ என்று போட்டப் போட்டி .ஆனால் ஓர் அறிவியல்
விஞ்ஞானி விட்டுச் சென்ற இடம் வெகு காலமானாலும்
வெற்றிடமாகவே இருக்கிறது . இதற்குக் காரணம் நான்
சொல்லித் தெரிய வேண்டியதில்லை .
ஜார்ஜ் காமோவ் (George Gamow )என்றொரு விஞ்ஞானி.இரஷ்யாவின்
உக்ரெயினில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர் . அணுக்கரு
விற்கு திரவத் துளி மாதிரியைப் பற்றியும் ,அல்பா சிதைவுவிற்கு
விளக்கமும்.பேரண்ட பெரு வெடிப்புக் கொள்கை பற்றியும்
தெரிவித்தவர் .இவர் எழுதிய பல அறிவியல் நூல்கள் மக்களிடையே
மிகவும் பிரபலமானவை .
மக்களால் கண் மூடித்தனமாகப் பின்பற்றப்படும் மதவாதிகளின்
கருத்துகள் பல இயற்கைக்குப் புறம்பாக இருக்கிறன என்று
சிறு வயது முதற்கொண்டு காமோவ் அடிக்கடி சிந்திப்பார் .
அதை உறுதிப்படுதுவதற்கான வாய்ப்பை எப்பொழுதும் எதிர்
பார்த்துக் கொண்டே இருந்தார் . ஒரு சமயம் தேவாலயத்தில்
ஒரு ஆன்மிகச் சொற்பொழிவாளர்,தேவனால் ஆசிர்வதிக்கப்பட்ட
சிவப்பு ஒயினும் ,ரொட்டித் துண்டும் ஏசுவின் இரத்தமாகவும்
சதையாகவும் மாறுகிறது என்று சொல்லி ஒவ்வொருவருக்கும்
கொஞ்சம் ஒயினும் ஒரு ரொட்டித் துண்டும் கொடுத்தார் .
தனக்கு அளிக்கப்பட்ட ஆசிர்வதிக்கப்பட்ட ஒயினையும் .
ரொட்டித் துண்டையும் விழுங்காமல் வாயில் வைத்துக் கொண்டு
விரைந்து வீட்டிற்கு ஓடி , அந்த ரொட்டித் துண்டை எடுத்து ,
தன்னிடமுள்ள ஒரு பொம்மை நுண்ணோக்கியால் ஆர்வத்துடன்
ஆராய்ந்து பார்த்தார். அது வழக்கமான ரொட்டித் துண்டு போலவே
இருந்தது . இந்த அறிவியல் பூர்வமான சோதனையே பின்னாளில்
தன்னை ஒரு விஞ்ஞானியாக்கியது என்று காமோவ் ஒருமுறை
சொல்லியிருக்கிறார் .
ஆம் ,உண்மைதான் . நீயும் இயற்கையைக் கூர்ந்து கவனித்துவந்தால்
நீயும் கூட சத்தியமாய் ஒரு விஞ்ஞானிதான்.
கேள்வி .2
தானாகக் கீழே விழும் கனமான ,இலேசான குண்டுகள்
கலிலியோ ,தானாகக் கீழே விழும் பொருட்களைப் பற்றி
ஆராய்ந்த போது,கனமான பொருளும்,இலேசான பொருளும்
சம உயரத்தை சம காலத்தில் கடந்து ஒரே நேரத்தில்
தரையில் விழுகின்றன என்பதைக் கண்டறிந்தார் .அதாவது
தானாகக் கீழே விழும் பொருளின் முடுக்கம் அவற்றின்
நிறையோடு தொடர்புடையதாக இல்லை. வெவ்வேறு
நிறையுடைய எல்லாப் பொருட்களும் ஒரே அளவு
முடுக்கத்தையே பெறுகின்றன
கனமான இரும்புக் குண்டு இலேசான மரக்குண்டை விடக்
கூடுதலான ஈர்ப்பு விசையுடன் ஈர்க்கப்பட்டலும் அது தான்
ஏற்படுத்துகின்ற கூடுதலான நிலைமத் தடையால் வேக
மாற்றத்தைக் கட்டுப்படுத்தி எல்லாப் பொருள்களும்
ஒரே மாதிரியான வேக மாற்றத்துடன் விழுவதைப்போல் விழுகின்றன .இந்த சுய கட்டுப்பாடு ஈர்ப்புப்புலத்தில்
மட்டுமே காணப் படுகின்றது.
எல்லா வகையிலும் ஒத்த இரு பந்துகளில் ஒன்று கனமானது ,மற்றொன்று இலேசானது .ஒரு குறிப்பிட்ட
உயரத்திலிருந்து ஒரே நேரத்தில் அவற்றைத் தானாகக்
கீழே விழுமாறு செய்ய ,கனமான பந்து முதலில் தரையை
அடைவதைக் காண்கிறோம். இதற்குக் காரணம் என்ன?
****************
தானாகக் கீழே விழும் பொருட்களுக்கு வளிமமண்டலத்திலுள்ள
காற்றினால் இயக்கத் தடை ஏற்படுகின்றது .இந்த எதிர் முடுக்க
விசை பொருளின் நிறையைச் சார்திருப்பதில்லை .இது பருமனை
யும் ,புறப்பரப்பின் தன்மையையும் பொருத்திருகிறது. எனவே
எதிர் முடுக்க விசை இரு பந்துகளுக்கும் சமமாகும் . ஆனால் எதிர் முடுக்கம் என்பது எதிர் முடுக்க விசைக்கும் நிறைக்கும் உள்ள
தகவாகும் . எனவே கனமான பந்து குறைவான எதிர் முடுக்கத்தையும்,இலேசான பந்து மிகுதியான எதிர் முடுக்கத்தையும் பெறுவதால் கனமான பந்து முதலில் தரையை அடைகிறது .

Eluthatha kaditham-7
எழுதாத கடிதம் -7
அன்பார்ந்த தமிழக நூல் வெளியீட்டாளர்களே
தமிழ் மொழி தமிழகத்தில் மட்டுமில்லாது உலகெங்கும் வளர்ந்து
வருவதற்கு உங்கள் பணி இன்றியமையாதது . அதற்காகத் தமிழ்
மொழி உங்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கும்.நீங்கள்
நூல்களை கஷ்டப்பட்டு வெளியிட்டாலும் ,இஷ்டப்பட்டு வெளியிட்டாலும்
பெரும்பாலும் நல்ல இலாபங்களையே சம்பாதித்துவருகின்றீர்கள்.
ஆனால் நீங்கள் நூல் வெளியிடுவதற்குக் காரணமாக இருக்கும்
ஆசிரியர்களையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் .
ஒரு சில பிரபலமான எழுத்தாளர்களைத் தவிர பிற எழுத்தாளர்கள்
எழுதி, அதற்குரிய நியாயமான வெகுமதியைப் பெறுவதில்லை .நூல்
வெளியீட்டாளர்களால் தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்ற எண்ணமே
அவர்களிடம் இறுதியில் எஞ்சி நிற்கிறது . நடைமுறையில் நூலை
எழுதிய ஆசிரியருக்கு ராயல்டியாக விற்பனை வருமானத்தில்
7 .5 முதல் 15 % வழங்குவது உலக வழக்கமாக இருந்து வருகிறது .
ஆனால் இதைப் பெறுவதற்கு ஆசிரியர்கள் படும் பாடு அவர்களுடைய
நெஞ்சிலேயே புதைக்கப்பட்ட ஒரு சோக கீதம் .
நூலை எழுதி வெளியிடுவதற்காக அனுப்பி வைத்த பின்னர் அதை
வெளியிட ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்பது கடைசி வரை
தெரியாது . பல முறை கடிதம் எழுதியும் , நேரில் சந்தித்தும் கேட்டுக்
கொண்டபிறகு அதை ஒருவழியாக வெளியிடுவார்கள். நூல்
வெளியிடும் போது முறையான ஒப்பந்தம் செய்யப்படுவதில்லை .
முழு உரிமையை வெகு இலவசமாக அபகரித்துக் கொண்டுவிடுவார்கள் .
இதில் இலவசமாக புரூப் திருத்தம் வேறு செய்துகொடுக்க வேண்டும்
ஆசிரியரும் தன்னுடைய நூல் வெளிவந்தால் போதும் என்ற
ஆர்வத்தில் தன்னுடைய உரிமையை விட்டு விடுவார் . ஆசிரியருக்கு
கொடுக்க வேண்டிய சன்மானமும் உடனேயே கொடுக்கப்படுவதில்லை .
பலமுறை நினைவூட்டி நீண்ட காலத்திற்குப் பிறகே அதையும்
ஒரு ஆசிரியர் பெறுகிறார் .முழு உரிமைக்கான சன்மானம் எவ்வளவு என்று நினைக்கின்றீர்கள், வெறும் Rs .1000 லிருந்து 6000 வரைதான். தன்னுடைய எழுத்துக்களை வரலாற்றுப் பதிவு செய்து விட்டோம் என்ற நிம்மதி மட்டும் ஒரு ஆசிரியருக்குக் கிடைகிறது .சங்க காலத்திலிருந்தே மொழி வளர்க்கும் பெரும்பாலான புலவர்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை .புலவர்களின் வறுமை என்பது மொழியின் வளர்ச்சியை மட்டுப்படுத்தி விடும் .அவர்களின் வயிற்றைப் போல எழுதுகோலும் வற்றிப்போனால் படைப்புத்தொழிலும் அழிந்து போகாதா .
இதைக் கண்ணுறும் போது எனக்கொரு யோசனை தோன்றுகிறது .இதில்
நான் முன்பே ஈடுபடாததற்குக் காரணம் நூல்களை சந்தைப்படுத்தும்
வழிமுறை இல்லாததுதான் .
எழுத்தாளர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பொதுவான அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் தங்களுடைய படைப்புகளை வெளியிடலாமே . முதலீடும் ,இலாபமும் எல்லோருக்கும் சமமாகப் பகிர்ந்து கொள்ளலாம் . கூட்டு வியாபாரம் என்பதில் சிலசிக்கல்கள் இருக்கவே செய்கின்றன .எனினும் மிகச் சரியாக முன் திட்டமிட்டு ,
நேர்மையாகச் செய்தால் எல்லோருக்கும் நலமே . உழவர் சந்தை போல ,நூல்சந்தையும் ஆங்காங்கே தோன்றினால் நாட்டுக்கும் நல்லது மொழிக்கும் நல்லது.
எழுத்தாளர்களே கொஞ்சம் சிந்தியுங்க !
அன்புடன்
காவேரி .

Saturday, August 21, 2010
Arika iyarpiyal
இன்றைய உலகம் பெரிதும் மாறிப் போயிருக்கின்றது என்றால் அதற்குக் காரணம் வளர்ந்து வரும் அறிவியல் தான்.நிர்வாகம்,பொருள் உற்பத்தி ,மருத்துவம் ,விவசாயம் கட்டுமானம் ,போக்கு
வரத்து ,பொழுது போக்கு என எத்துறையை எடுத்துக்கொண்டாலும்
அதற்கும் அறிவியலுக்கும் நெருக்கமான தொடர்பிருப்பதால்
அறிவியலைப் புறக்கணித்துவிட்டு எந்த நாடும் முன்னேறிவிட
முடியாது .அறிவியல் என்பது ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப
வளர்ச்சிக்கும் ஆதாரமானது.இந்த அறிவியலை,அறிவியலுக்காகப்
படிப்போர் இன்றைக்கு இளைய தலைமுறையினரிடையே அருகிக்
கொண்டே வருகின்றார்கள் . இதற்குக் காரணம் அலைபாயும்
எண்ணங்களைத் தடுமாறச் செய்து, செல்லும் திசையைத் திருப்பி விடும் காரணிகள் சமுதாயத்தில் பெருகி வருவதுதான்.எண்ணங்கள்
தடுமாறுவதற்கு முன்னரே குறிக்கோளில் மனதை நிலைப்படுத்தி
விட்டால் மறைவாய்,மௌனமாய்ப் பெருகும் தவறான போக்குகளை மட்டுப் படுத்திவிட முடியும் .இதையும் இளம்வயதிலிருந்தே தொடங்கும் போது விளையும் பிற்பயன் முழு அளவினதாக இருக்கும் .அறிவியலை அறிவியலுக்காகப் படிக்கும் போது ,அதை முழுமையாகப் புரிந்துகொள்வது என்பது இயலுவதாகின்றது. கதை படிப்பது போலில்லை அறிவியலைக்
கற்பது. அதில் பல துறை சார்ந்த கருத்துகள் ஒருங்கிணைந்துள்ளன . ஒரு கருத்துதெரியாமல் மற்றொரு கருத்தைப் புரிந்து கொள்ள முடியாது என்பதால் ,மேலோட்டமாக விரைந்து கற்றுக்கொள்ள இயலாது .மனதில் எழும் ஐயங்கள் நம்பிக்கையின்மையைத் துண்டுவதால் ,பல சமயங்களில் ஆர்வம் தடைப் பட்டுப் போவதுமுண்டு. அறியும் அறிவியலை
ஐயமறக் கற்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும் . இதற்குப் பல பொது அறிவியல் நூல்கள் துணை புரிகின்றன . 'அறிக இயற்பியல்' எனும் தலைப்பில் எழுதப்படவிருக்கிற செய்திகள் பயனுள்ளதாக இருக்கும்
என நம்புகிறேன் .
ஓடும் இரயிலில் பந்து விளையாட்டு
நாம் பலமுறை இரயிலில் பயணம் செய்திருக்கிறோம் .சும்மா
உட்கார்ந்துகொண்டு அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டும்
அரட்டை யடித்துக் கொண்டும் இருப்போம் . ஒருமுறை கூட
பயண நேரத்தைப் பயனுள்ளதாகப் பயன்படுத்திக்கொள்ள
முயற்சிப்பதில்லை. படிக்கலாம், படித்ததைச் சிந்திக்கலாம் ,
சிந்தித்ததை பதிவு செய்யலாமே .
ஒருவர் ஓடும் இரயிலில் உட்கார்ந்து கொண்டு மேல்நோக்கி ஒரு
சிறிய பந்தைத் தூக்கி எறிகின்றார் . அந்தப் பந்து சிறிது தொலைவு
மேல் நோக்கிச் சென்ற பிறகு பின் திரும்பி கீழே விழுகின்றது .
வானத்தை நோக்கி விட்டெறிந்த கல் போல அந்தப் பந்து,
எறிந்தவர் மீதே வந்து விழுமா அல்லது பந்து காற்று வெளியில்
பயணித்த போது இரயில் சிறிது தொலைவு இயக்கம் காரணமாக
நகர்ந்து சென்றதால் பின்னால் போய் விழுமா?
ஓடும் இரயில் பெட்டியில் மேல் நோக்கி எறிந்த பந்து மீண்டும்
எறிந்தவர் மீதே விழும் இரயிலின் இயக்கம் என்பது இரயில் பெட்டிகளின் இயக்கம் மட்டுமல்ல .இரயில் பெட்டிக்குள் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும்தான் .அவற்றின் நிலைமம்
(inertia) காரணமாக பந்தின் கிடைமட்ட திசைவேகக் கூறு ,இரயில்
செல்லும் திக்கில் இரயிலின் வேகமாக இருக்கும் . மேல் நோக்கி எறியப்பட்ட பந்தின் கிடைமட்டத் திசை வேகம் மாறுவதில்லை
என்பதால் ஒரே கிடைமட்டத்திசை வேகம் கொண்ட பந்திற்கும், எறிபவருக்கும் இடைப்பட்ட சார்பு வேகம் சுழியாகும் . எனவே பந்து எறிபவரைச் சென்றடைகிறது .

Subscribe to:
Posts (Atom)