எழுதாத கடிதம்
கற்பனையில் ஒரு கணக்கீடு
இந்தியா நம் நாடு.அதன் வளம் எல்லோருக்கும் பொதுவானது.கற்பனையாக இந்தியாவில் உங்கள் பங்கு எவ்வளவு என்று என்றைக்காவது கணக்குப் போட்டுப் பார்த்தீர்களா? அரசியல் வாதிகள் நூறு பேர் .தொழில் அதிபர்கள் நூறு பேர் ,அரசு அதிகாரிகள் நூறு பேர் நடுத்தர மக்கள் நூறு பேர், வறுமைக் கோட்டுக்கும் கீழ் நூறு பேர் எனத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஒவ்வொருவரும் வெளிப்படையாகவும் ,இரகசியமாகவும் சம்பாதித்த சேர்த்த ,சுருட்டிய சொத்துக்களை எல்லாம் இரகசியமாக திரட்டி சராசரி மதிப்பை முதலில் அளவிட்டறி.அந்த மதிப்பின் சதவீதம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பங்கு என்பதைத் தெரிவிக்கும் அளவீடாகக் கொள்ளலாம். இதன்படி அரசியல் தலைவர்கள் அரசியல்வாதிகளை விட அதிகமாகவும் ,வருவாய்த் துறை அரசு அதிகாரிகள், கீழ் நிலை அதிகாரிகளை விடவும், நடுத்தர மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழ் உள்ளோரை விடவும் கூடுதலான பங்கைப் பெற்றிருந்தாலும் இங்கு சராசரி மதிப்பின் நெடுக்கை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.அரசியல்வாதிகள் - 30-35 % தொழில் அதிபர்கள் 36 -37 அரசு அதிகாரிகள் 25-15 %,மக்கள் 9 -13 %. இது ஏறக்குறைய மன்னர் ஆட்சிக் காலத்தில் இது போன்ற கணக்கீடுசெய்தால் கிடைக்கும் புள்ளி விவரம் போல இருக்கிறது. என்றாலும் அங்கே மக்களின் பங்கு அதிகமாகவும் ,அரசு அதிகாரிகளின் பங்கு மிகக் குறைவாகவும் இருந்தது என்பது ஒரு முக்கிய வேறுபாடு. இதில் இந்திய மக்களின் பொருளாதாரம் மேம்பட எந்த அரசியல்வாதிகள் தங்களை அர்பணித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது கண்ணுக்கு எட்டிய தூரம் வரைச் சரியாகத் தெரியவில்லை.
பின் குறிப்பு
இந்தக் கணக்கீடு தோராயமானதுதான் என்றாலும் பெரும் வேறுபாடுகள் இருக்காது என்றே நம்புகின்றேன் .
No comments:
Post a Comment