Monday, November 26, 2012

Kavithai


திருந்த ஒருவர் தோன்ற வேண்டும்

தப்புத் தப்பாய் தாய்மொழி பேசினேன்

திருத்தம் செய்ய பெற்றோர் ருந்தனர்  

கோணல் கோணலாய் எழுத்தை எழுதினேன்

திருத்தம் செய்ய  குரு ருந்தார்

மிதி வண்டி பழக கீழே விழுந்தேன்

திருத்தம் செய்ய பழக்குனர் இருந்தார்

சின்னத் தப்புகள் நிறையச் செய்தேன்

திருத்தம் செய்ய சான்றோர் இருந்தனர்.

கல்லாது விடைகளைத் தப்பாய் தந்தேன்

திருத்தம் செய்ய ஆசிரியர் இருந்தார்

பருவத்தில் ஒழுக்கம் தவறி நடந்தேன்

திருத்தம் செய்ய பண்பாளர்கள் இருந்தனர்.

இல்லறத்தில் பொல்லாமை செய்யத் துணிந்தேன்

திருத்தம் செய்ய இல்லாள் இருந்தாள்

வீதியில் வண்டியை வேகமாய் ஓட்டினேன்

திருத்தம் செய்ய காவலர் இருந்தார்

தேர்தலில் ஜெயிக்க பிறவழி முயன்றேன்

திருத்தம் செய்ய அதிகாரி இருந்தார்

அரசியலில் நுழைந்து அனைத்தும் செய்தேன்

திருத்தம் செய்ய அங்கே யாருமில்லை

திருந்தவே முடியாத சமுதாயம் இருந்து

காலத்தால் சீரழிந்து போனதே சரித்திரம்

திருந்துவோர் தாங்களாய்த் திருந்தா விட்டால்

திருத்தம் செய்ய வழியே இல்லை  

No comments:

Post a Comment