விண்வெளியில் உலா
தப்ஹி(Dubhe) எனப் பெயரிடப்பட்ட ஆல்பா அர்சா மேசோரிஸ் 1.81 ஒளிப் பொலிவெண் கொண்ட ஆரஞ்சு நிறமுடைய பெரு விண்மீன் .இது நம்முடைய சூரியனை விட குளிர்ச்சியாக புறப்பரப்பு வெப்ப நிலையாக 5000 டிகிரி C யைக் கொண்டுள்ளது .தப்ஹி யைத் தவிர்த்த பிற அகைப்பை வடிவ விண்மீன்கள் யாவும் வெப்ப மிக்க வெண்ணிறமான பெரு விண்மீன் களாகும். இவற்றின் புற வெப்பநிலை 10,௦௦௦ டிகிரி C க்கும் குறைவில்லை. .மிராக் (Merak) என்ற பீட்டா அர்சா மேஜோரிஸ்ஸையும் தப்ஹியையும் இணைக்கும் நேர்கோடு ,அர்சா மைனர் வட்டாரத்திலுள்ள போலாரிஸ் என்ற துருவ விண்மீனுக்கு வழி காட்டுவது போலிருக்கிறது. இதன் ஒளிப் பொலி வெண் 2.37 ஆகும் 2.44 ஒளிப் பொலி வெண் கொண்ட காமா அர்சா மேஜோரிஸ்ஸை ஃ பாடு (Phad) எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். இதையும் டெல்ட்டா அர்சா மேசோரிஸ்ஸையும் இணைக்கும் நேர்கோடு லியோ வட்டாரத்திலுள்ள ரெகுலஸ் விண்மீனுக்கு வழி காட்டுகின்றது
அலியோத்(Aliyoth) அகைப்பை விண்மீன்களுள் மிகத் தொலைவில் இருப்பதாகும். இது மிக அருகில் இருக்கும் பெநெட் நாஷ் (Benet nasch ) என்றும் அல்கைடு(Alkaid ) என்றும் அழைக்கப்படும் ஈட்டா அரசா மேஜோரிஸ் விண்மீனை விட நான்கு மடங்கு தொளிவு தள்ளி அமைந்துள்ளது. வெகு தொலைவு இருப்பினும் ,சம தொலைவில் இருப்பதாக அமைத்து ஒப்பிட்டால் அலியோத் அகைப்பை வடிவ விண்மீன்களுள் பிரகாசமானதாகும் .ஈட்டா அர்சா மேஜோரிஸ் சின் பிரகாசம் சற்றேறக் குறைய தப்ஹி யின் பிரகாசத்திற்குச் சமமாக உள்ளது. அகப்பையின் கைப்பிடியில் இரண்டாவதாக உள்ள மிசார் (Mizar ) என்ற சீட்டா அர்சா மேஜோரிஸ் இரு விண்மீன்களால்லான இணை விண்மீனாகும்.அல்ஜாட் (Al -Jat) என்றும் அல்கோர் (al cor) என்றும் அரேபியர்களால் அழைக்கப்பட்ட துணை விண்மீன் மிகவும் மங்கலானது. இதன் ஒளிப்பொலிவெண் 5 ஆக உள்ளது மிசாரும் அல்கோரும் முறையே 78 ,81 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. ஒருவருக்கு கூர்மையான பார்வை இருக்கிறதா என்பதை அறிய பழங்காலத்தில் இவ்விணை விண்மீனைப் பயன்படுத்திக் கொண்டார்கள். உண்மையில் மிசார் ஓர் இரட்டை விண்மீனாகவும் .அல்கோர் அதனுடன் தொடர்பற்று அருகிலுள்ள விண்மீனாகவும் உள்ளன. மிசாருக்கும் அல்கோருக்கும் உள்ள கோண இடைவெளி 12 நிமிடங்களாகும். அதாவது அவைகளுக்கு இடைப்பட்ட தொலைவு 17000 வானவியல் அலகாகும். இது 2.5 x 10 12 கிமீ க்குச் சமம். ஒரு காலத்தில் மிசாரும் அல்கோரும் மில்லியன் ஆண்டுகளுக் கொருமுறை சுற்றி வரும் இரட்டை விண்மீன்கள் என நம்பப் பட்டது. .மிசார் ஓர் இரட்டை விண்மீன் எனபதை கலிலியோ காலத்திய வானவியலாரான ரிக்கியோலி(Riccioli) என்பார் கண்டறிந்தார் மிசார் A , மிசார் B என்ற இவையிரண்டும் வெப்பமிக்க விண்மீன்களாகும்..இதன் சுற்றுக் காலம் 20000 ஆண்டுகள் என மதிப்பிட்டுள்ளனர். பின்னர் மிசார் பல விண்மீன்களால் இணைந்த ஒரு தொகுப்பு என அறிந்தனர். மிசார் A ஓர் இரட்டை விண்மீன் என்றும் இதன் சுற்றுக் காலம் 20 .5 நாட்கள் என்றும் நிறமாலைப் பகுப்பாய்வு மூலம் கண்டறிந்தனர். மிசாரையும் அல்கோரையும் இணைக்கும் நேர்கோடு ஆல்பா பூட்டிஸ் என்ற ஆர்க்டூரஸ் விண்மீனுக்கு வழி காட்டுகிறது
அகைப்பை வடிவில் அமைந்துள்ள விண்மீன்கள் யாவும் தனித்த தன்னியக்கம் கொண்டுள்ளன. விளிம்பு விண்மீன் களான தப்ஹியும் பெநெட் நாஷ் ம் ஒரு குறிப்பிட்ட திசையில் நகர்ந்து செல்ல பிற விண்மீன்கள் இதற்கு எதிர் திசையில் விலகிச் செல்கின்றன. .இதனால் அகப்பையின் வடிவம் காலத்தால் மெதுவாக மாற்றம் பெற்று வருகிறது.
No comments:
Post a Comment