ஒளியும் இருளும்
இருப்பது ஒளியென்றால் இல்லாமை இருள்
அறிவு ஒளியென்றால் அறியாமை இருள்
வெண்மை ஒளியென்றால் கருமை இருள்
பிறப்பு ஒளியென்றால் இறப்பு இருள்
உறவு ஒளியென்றால் பிரிவு இருள்
பொருள் ஒளியென்றால் வெறுமை இருள்
ஒளி பாய்ந்தால் இருள் இல்லை
இருள் படர்ந்தால் ஒளி இல்லை
இரண்டும் இணைந்தே இருப்பதில்லை
ஒன்றிருந்தால் மற்றொன்றில்லை ஒன்றுக்கொன்று பகையுமில்லை ஏனெனில் ஒளியும் இருளும் வேறில்லை
ஒளியின் உறக்கமே இருளானது
அறிவின் மயக்கமே அறியாமையானது
நிறத்தின் நீக்கமே கருமையானது
பிறப்பின் முடிவே இறப்பானது
உறவின் முறிவே பிரிவானது
பொருளின் மறைவே வெறுமையானது
இருள் எங்கும் படர்ந்து இருப்பது. இதன் மூலம் ஒளியின்மையே
அறியாமை இயல்பாய் இருப்பது
இதன் மூலம் அறிவின்மையே
ஒளி வர இருள் மறையும்
அறிவு வளர அறியாமை மங்கும்
No comments:
Post a Comment