Creative Thoughts
குதிரையைக் காட்டிலும் வேகமாக ஓடும். குரங்கைக் காட்டிலும் விரைவாய்த் தாவும் .மொழியின்றிச் செய்திகளைப் பரிமாறும் .எஜமானரையே கட்டுப்படுத்த ஆர்வப்படும் .முரட்டுத்தனம் வந்துவிட்டால் ,காட்டு விலங்கையும் மிஞ்சும் .இது மனித மனத்தை விட வேறு என்னவாக இருக்க முடியும் .
மனிதன் ஒரு பொம்மையானால் மனம் ஒரு மந்திரச் சாவி .இந்தச் சாவியை யாரும் தொலைக்க முடியாது .ஏனெனில் இதற்கு மாற்றுச் சாவியும் இல்லை ,கள்ளச் சாவியும் இல்லை .
ஒரு பொருள் வேகமாக இயங்கிச் செல்ல அதன் ஓய்வு நிறை மாறாவிட்டாலும் ,அதன் இயக்க நிறை அதிகரிக்கின்றது .இந்த நிறை அதிகரிப்பு இயக்க வேகத்திற்கு ஏற்ப இருக்கின்றது .அது போல மனம் இயல்பாக பஞ்சு போன்று எடை இல்லாது இருக்கின்றது .தவறான எண்ணங்களினால் மனம் கனத்துப் போகின்றது .
புரிந்து கொள்ள முடியாததை புரிந்து கொண்டதன் மூலம் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்பதால் புரிந்து கொண்டதை நாம் முழுமையாகப் புரிந்து வைத்திருக்க
வேண்டும்.இல்லாவிட்டால் புரியாதது எப்போதும் புரியாததாகவே இருக்கும்.
மனம் ஒரு முரட்டுக் குதிரை போன்றது .முறையாகப் பயிற்சி அளிக்காமல் சவாரி செய்ய நினைத்தால் கீழே விழுந்து காயப் பட வேண்டியிருக்கும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் நெருக்கமான நண்பனும் நெருக்கமான எதிரியும் அவர்களுடைய மனம் தான் .நண்பனாக இருப்பதும் ,எதிரியாக இருப்பதும் மனதை எப்படிக் கையாளுகின்றோம் என்பதைப் பொருந்து அமைகின்றது .
No comments:
Post a Comment