Creative Thoughts
வாழ்கையில் ஒருவர் போலியான நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்ள நாமே ஒரு காரணமாக இருக்கக் கூடாது .அரசு வழங்கும் இலவசப் பொருட்கள் ,தனி மனிதர்கள் வழங்கும் இலவசப் பொருட்கள் மக்கள் மனதில் இத்தைகைய நம்பிக்கையையே ஊட்டி வளர்கின்றது .
நிரூபிக்க முடியாது என்ற சூழல் இருக்கும் போது குற்றங்கள் அரியணை ஏறிவிடுகின்றன .தவறுகள் செய்யத் தெரியாதவன் கூட அதைச் செய்யத் துணிவு கொள்கின்றான் .
வாழ்கையில் சாதிக்க வேண்டும் என்று தீர்மானமாய் இருந்தால் ஏதாவது ஒரு வழியில் மக்களுக்குப் பயன்தரக்கூடிய ஒரு செயலைக் கண்டுபிடித்து அதை விஞ்சியவாறு செய்தே ஆகவேண்டும் அது சாதித்துக் காட்டுவதற்கு இருக்கக் கூடிய வழிகளில் மிகவும் எளிமையானது .
பிரார்த்தனை செய் .கடவுளை நீ சென்றடையலாம் .மக்களுக்கு உதவி செய்து மகிழ் .கடவுளே உன்னிடம் வந்து சேருவார் .
இந்த உலகை விட்டுப் போகப் போகின்றோம் என்ற நிலை வரும்போது தான் சேர்த்த பொருட்களை எடுத்துக் கொண்டு போக முடியாது என்று உணர்ந்து பலர் வருத்தத்தோடு விடை பெற்றுச் செல்கின்றார்கள் .சேர்த்த பொருள் ஒரு சுமை என்பதை அவர்கள் இறுதிவரை அறிவதே இல்லை
காலத்தை வீண் விரயமாகும் செயலை விட முட்டாள்தனமான செயல் வேறெதுவும் இல்லை . சிறுவயதிலிருந்தே நேரத்தை பயனுள்ளவாறு செலவிடக் கற்றுக் கொள்ளாவிட்டால் பிற்பாதியில் அதன் பாதிப்பிலிருந்து தப்பிப்பது கடினம் .
பொன்னான காலத்தை வீணடித்து விட்டு ஏமாற்றங்களுக்கு பிறரை நொந்து கொள்ளும் மனப் போக்கு இன்றைக்கு வளரும் இளம் தலைமுறையினரிடம் வளர்ந்து வருகின்றது .
வாழ்கையில் இனிமையின் பெரும் பங்கு எளிமையில் தான் இருக்கின்றது
எழுதுவதற்கு விஷயங்களே இல்லை என்பதால் பெரும்பாலானோர் தங்கள் சுய சரித்திரத்தை எழுத விரும்புவதில்லை .உண்மையில் ஒருவர் தன் சுய சரித்திரத்தை எழுத முயலும் போதுதான் வாழ்கையை எப்படியெல்லாம் வீணடித்து விட்டோம் என்பதைத் தெரிந்து கொள்கின்றார்.
ஒரு மரம்,இலை,பூ,காய்,கனி போன்றவற்றை அதிகமாய்த் தரலாம்.ஆனால் வேறொரு வகையான இலை,பூ,காய்,கனி போன்றவற்றைத் தரவே முடியாது .பலவகையான சுவையுள்ள கனிகளைத் தரக்கூடிய மரம் தேவலோகத்தில் கூட இல்லை. மனிதர்களும் அப்படித்தான்.ஒவ்வொரு மனிதரிடத்திலும் ஒரு சில திறமைகள் மட்டுமே மிகுந்திருக்கிறது.ஒரு திறமை கொண்ட மனிதரிடம் வேறொரு திறமையை எதிர்பார்க்க முடியாது.
No comments:
Post a Comment