எழுதாத கடிதம்
ஒரு நாடு முன்னேற என்ன வேண்டும் ? நன்மக்கள் வேண்டும்.ஒருவர் இருவர் என்றில்லாது எல்லோரும் .மக்கள் நன்மக்களாய் வாழ என்ன வேண்டும் ?மக்களிடம் சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் வேண்டும் . நிறைந்த மகிழ்ச்சியுடன் வாழ முடியாவிட்டாலும் துன்பமின்றி வாழ சமுதாய அமைப்புக்கள் துணை செய்ய வேண்டும் .சமுதாய அமைப்புகள் அப்படி இருக்க என்ன செய்ய வேண்டும் ? சமுதாயக் காவலர்கள் நல்லவர்களாய் இருக்கவேண்டும் ஒருவர் இருவர் என்றில்லாது எல்லோரும்.நேர்மையும் தூய்மையும் நடுவு நிலைமையும் ,செயல் வல்லமையும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும். சமுதாயக் காவலர்கள் நல்லவர்களாய் இருக்க என்ன வேண்டும் ? நல்லவர்களாய்ப் பார்த்து பதவி கொடுக்க வேண்டும் இதில் நாம் செய்யும் தவறுகள் நம்மையே பாதிக்கின்றன.
பதவி என்பது மக்களாய்ப் பார்த்து கொடுப்பது .அவர்களாக எடுத்துக் கொள்வதற்கில்லை சமுதாயக் காவல் என்பது ஒரு தொண்டு அது ஒரு தொழில் இல்லை,மக்கள் அடிமைகளும் இல்லை ஆள்வதால் காவலர்கள் எஜமானர்களும் இல்லை. இதைப் புரிந்து கொண்டு மக்கள் செயல்பட்டால் அவர்கள் தங்களுக்கு மோசமான எஜமானர்களைத் தேர்ந்தெடுப்பதைவிட .நல்ல காவலர்களைத் தேர்வு செய்வார்கள்.அப்போது சமுதாய ம் தானாகவே முன்னேறுகின்றது. சமுதாயத்தை முன்னேற்றி அதன் மூலம் நாட்டையே முன்னேற்ற இதுவே இயற்கையான வழி. இந்த இயற்கை வழி இயற்கையாகத் தூண்டப்பட மக்கள் இயற்கையாகச் செயல்படும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும், ஓரிரு நாட்கள் இல்லை, வாழ்க்கை முழுதும் .
பாராட்டப்பட வேண்டியவர்களை பாராட்டுங்கள் .தேவையில்லாமல் எல்லோரையும் பாராட்டிக் கொண்டே இருக்காதீர்கள் .பாராட்டத் தகுதி இல்லாதவர்களை பாராட்டாதீர்கள்.மக்களுக்காக நல்ல பணிகளைத் தானாகச் செய்வோரை பாராட்டிப் பரிசுகள் வழங்குங்கள்.அப்போது நிச்சியம் ஒரு மறுமலர்ச்சி பிறக்கும் .அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களால் மேற்கொள்ளப்படும் இது போன்ற செயல்கள் மௌனமாய் மகத்தான மாற்றங்களைச் செய்யும். சீரழிந்து போன அரசியல் அமைப்பை இது செம்மைப்படுத்த ஒரு காரணமாகவும் அமையலாம்.
No comments:
Post a Comment