மனித முயற்சிகளின்றி எந்தவொரு செயலும் தானாக நிகழ்வதில்லை .சில செயல்கள் தானாக நிகழ்ந்தது போலத் தோன்றினாலும் உண்மையில் அவையாவும் அது அப்படி நிகழ்ந்ததில்லை. அறியப்படாத மனிதர்களின் பின்னணியில் அல்லது இயற்கையின் ஆற்றல் மூலங்களின் ஆக்கத்தில்; நிகழ்ந்தவையாகத்தான் இருக்கும் .கடவுள் அனைத்துச் செயல்களையும் மனிதர்கள் மூலமாகவோ அல்லது இயற்கையின் பரந்த ஆற்றல் மூலங்களின் வாயிலாகவோ செய்து முடிக்கின்றார். அறிவியலுக்கு அப்பாற்பட்டு எதுவும் நிகழ்வதில்லை . அறிவியலுக்கு உப்பட்ட செயல்களை மனிதர்கள் செய்துமுடிக்கின்றார்கள் என்றும் அப்பாற்பட்ட செயல்களை கடவுள் செய்கின்றார் என்றும் நமக்கு நாமே முடிவு செய்துவைத்திருக்கின்றோம். செயல்கள் இயற்கையால் செய்யப்படும்போது அது தானாக நிகழ்ந்தது போலத் தோன்றினாலும் அவையாவும் முன்திட்டமிட்ட ஒரு நெறிமுறைக்கு உட்பட்ட ,எங்கும் நிறைந்த இயற்கையின் பரந்த ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன .அதன் பலனைத் தனதாக்கிக்கொள்ள மனித முயற்சிகள் வேண்டும். அது இயற்கைக்கு முரண்பட்டதாக இருந்தால் , அதன் பலனை அனுபவிக்க முடியாமல்போகும் மனிதர்களின் எதிர்ப்பால் முயற்சிகளில் தடை தவிர்க்க இயலாததாக இருக்கும்
No comments:
Post a Comment