பள்ளிகளிலும் ,கல்லூரிகளும் மாணவர்களுக்கு வாரம் 5 -1/2 நாட்கள் வகுப்பு, சனிக்கிழமை காலையில் 1/4 th மாணவர்களுக்கு வளாகத்தை தூய்மைப்படுத்துதல் ,மரம்,செடிகளை நட்டுப் பராமரித்தல், உள்ளூர் கோயில்களில் உழவாரப்பணி , போன்றகள வெளிப்புலப் பணிகளைச் செய்யலாம்..மீதி மாணவர்களுக்கு ஆளுமைத் திறமை பயிற்சி, தொழில் நுட்பப் பயிற்சி , அவசர காலச் சேவை பயிற்சி , தீயணைக்கும் பயிற்சி , கைத்தொழில் பயிற்சி,யோகா பயிற்சி ,விளையாட்டுப் பயிற்சி நிறுவனத்திற்குள்ளேயே அளிக்கவேண்டும் .இதை ஒரு சுற்று முறையில் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும்படி செய்யவேண்டும் .மாணவர்கள் படிப்பு முடிந்து பணியில் சேருவதற்கு முன்னர் குறைந்தது ஓராண்டு இராணுவத்தில் பணி புரியவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கவேண்டும் .ஓய்வூதியதார்கள் குறைந்தது ஓராண்டு காலம் அரசின் நிர்வாகத்திற்கு சேவை செய்ய வேண்டும்...
வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்யும் நிறுவங்களின் பணிபுரியும் தொழிலார்கள் ஒரு பகுதியினர் வளாகத்தை த் தூய்மைப்படுத்துதல் , மாசுகளை அகற்றுதல் போன்ற பணிகளை செய்யவேண்டும் . .இதை ஒரு சுற்று முறையில் அனைத்துத் தொழிலாளர்களும் பங்கேற்கும்படி செய்யவேண்டும்.
அரசாங்கம் மக்கள் செய்யும் குற்றங்களைக் கவனிக்கும் அளவில் 10 % கூட நிர்வாகம் செய்யும் குற்றங்களைக் கண்காணிப்பதில்லை குற்றம் செய்ய உள்ளார்ந்த விருப்பம் இருந்தாலும் மக்களில் மக்கட்தொகையில் 10 -20 சதவீதத்தினருக்கே விருப்பப்பட்ட குற்றங்களைச் செய்யாக்கூடிய வாய்ப்பும் , செய்து முடிக்கக் கூடிய திறமையும் இருக்கின்றது. ஆனால் அரசியல்வாதிகள் ,உயர் அதிகாரிகள் ,வருவாய்த் துறை ஊழியர்ககளில் இந்த சதவீதம் 90 ஐ நெருங்கியிருக்கின்றது
மக்கள் தங்கள் தேவைகளைத் தேடிக்கொண்டால் அது உழைப்பு மட்டுமின்றி ,வளர்ச்சியும் கூட அதை அரசாங்கம் கொடுத்தால் அது விலையில்லாப்பொருள்.ஒருவருடைய அன்றாடத் தேவைகளையே விலையில்லாப் பொருட்கள் பூர்த்திசெய்துவிடுமானால் ,அவர் உழைக்க விரும்பமாட்டார்..உழைப்புக்கேற்ற தேவைகள் இல்லாததால் தேவைகளின் அளவை எல்லையற்றதாக வளளர்த்துக்கொள்ளும் மனநிலையைப் பெறுகின்றார்.ஒரு மனிதன் உழைத்து வாழ்வதற்காகக் கொடுக்கப்பட்ட உடலிலுள்ள அனைத்துக் கருவிகளும் .தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளப்படாதபோது அந்தக் கருவிகளின் பயனுறுதிறனை காலப்போக்கில் இழந்துவிடுவான்.கருவிகளைக் கொண்டு பயனீட்டத் தெரியாதவன் பிறருக்கு பயன் கொடுக்கத் தெரியாதவனாக இருப்பதோடு,பாரமாகவும் இருப்பான்.
அரசியல் என்பது மக்களை அனைவரையும் தன் வசப்படுத்தி தங்கு தடையில்லாமல் நாட்டை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்வதாகும்..அரசியல் என்பது ஒரு தொழிலில்லை அது உண்மையில் மக்களுக்காக நாட்டுக்குச் செய்யும் சேவையாகும்..அரசியல் இன்றைக்கு ஒரு தொழிலாக மாறிவருவது அரசியலின் புனிதத் தன்மையை சீரழித்து வருகின்றது.இதைத் தடுக்கவேண்டும் என்று விரும்புவதைவிட அதில் பங்கேற்று ஆதாயம் அடைய விரும்புவர்களே அதிகம் என்பதால் சீரழிவு எல்லோருடைய ஒப்புதலுடன் தொடர்வது தவிர்க்கயியலாததாக இருக்கின்றது.
உழைக்காமல் கிடைக்கும் எதுவும் சில காலம் பயன்தரலாம் . ஆனால் வாழ்க்கை முழுதும் பயன்தருவதில்லை .மகிழ்ச்சியை த் தொலைத்துவிட்டு அச்சப்பட்டுக் கொண்டே வாழும் மனநிலையை ஏற்படுத்திவிடும் .
பேச்சு வழக்கில் நாம் பலவற்றை மிக எளிதாக ஒப்புக்கொள்கின்றோம் .ஆனால் செயல் நிலைக்கு வரும்போது நாம் ஒப்புக் கொண்டதைக் கூட நாமே ஏற்றுக்கொள்வதில்லை. தனக்காக ஒரு எண்ணம் ,பிறருக்காக வேறொரு எண்ணம் கொண்டு வாழும் போக்கு இன்றைக்கு மக்களிடையே மிகுந்துவருகின்றது.இதனால் இன்றைக்கு யார் நல்லவர் , யார் தீயவர் என்று அறிந்துகொள்ள முடியாதிருக்கின்றது
No comments:
Post a Comment