தவறு ,குற்றம் செய்வதற்கும் ,அவற்றை மறைப்பதற்கும் கிடைக்கும் வாய்ப்பும் ,ஒத்துழைப்பும் நேர்மைக்குக் கிடைப்பதில்லை அதனால் நேர்மை எண்ணத்திலும் ,குற்றம் செயலிலும் இருக்கின்றது
நிரூபணம் இல்லாமல் எந்தக் குற்றத்தையும் செய்ய மக்கள் தயாராக இருக்கின்றார்கள்.இவர்களுக்குச் சமுதாயத்தில் மலிந்து வரும் குற்றச் செயல்களே வழிகாட்டியாக இருக்கின்றன.
தவறுகளைத் தவறுகளால் திருத்தினால் திருத்தும் தவற்றைத் திருத்தவே முடியாது .ஏனெனில் யாரும் பார்க்கவில்லை யாராலும் கண்டுபிடித்து நிரூபிக்க முடியாது என்ற எண்ணம் இருக்கும் போது தவறுகள் விருப்பச் செயல்களாகிவிடுகின்றன.
ஏமாற்றப்படுகின்றவர்கள் அதிகமாகி வருகின்றார்கள் என்றால் ஏமாற்றுகின்றவர்கள் அதிகமாகி வருகின்றார்கள் என்பதும் ,வாழ்வாதாரமின்றி மக்கள் உயிர் வாழப் போராட்டம் மேற்கொள்வதும் தான்.மக்களில் ஒரு பிரிவினரின் அறியாமையால் மற்றொரு பிரிவினரின் அதிகாரத்தால் ஏமாற்றப்படுவது தடுக்கப்படவேண்டும் .இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நல்ல அரசுக்கு உண்டு .ஏமாற்றினால் மதி ஏமாந்தால் அது விதி .விதியை மதி வெல்லும் என்பது இதுதானோ .இது மதியுமில்லை விதியுமில்லை.. கேட்பார் கேட்காததினால் கெடுவார் கெட்டு தீச் செயல் புரிந்தார் .வலியாரை எதிர்க்க வலிமையின்றி அதை மௌ னமாய் ஏற்றுக்கொண்டார்,
மக்கள் நலத்திற்கும் நாட்டு நலத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் பொதுவாக சட்டம் புரிந்து கொள்வதில்லை
அரசியல் ஒரு தொழிலல்ல .அது மக்களுக்குச் செய்யவேண்டிய தன்னலமற்ற சேவைகளுக்காகச் செய்யும் அர்ப்பணிப்பு இதை அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் உணரவேண்டும் .அரசாங்கம் தரும் பாதுகாப்பு குற்றங்கள் செய்யும் துணிவையும் ,அதை மறைக்கும் அதிகாரத்தையும் தருகின்றது என்பதற்காக நாட்டைத் தவறான வழியில் வழிநடத்திச் செல்லக்கூடாது. அதிகாரம் குற்றங்கள் செய்வதற்காகயில்லை குற்றங்கள் செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக .
வெளிப்படைத் தன்மை யில்லையின்றால் விதிமுறைகள் மீறப்படுவதற்கான வாய்ப்புகள் எங்கோ திட்டமிடப்படுகின்றன என்றும் அர்த்தப்படும்
No comments:
Post a Comment