ஊழலற்ற சமுதாயம் -6
அரசுப் பணியில் இருந்து கொண்டு வேறொரு தொழிலை தொழிலைத் தனக்காகத் தொடங்குபவர்கள் பெரும்பாலும் அவர்களுடைய மனைவி ,பிள்ளைகள் மற்றும் நெருக்கிய குடும்பத்தினர் பேரில் பதிவு செய்திருப்பார்கள். எனினும் தொழில் நிர்வாகம் ,முழுதும் இவர்களுடைய கையில் தானிருக்கும். இவர்களால் தொடங்கப்படும் தொழில் துறையில் புதிய இடர்பாடுகள் காணப்படுவதுண்டு. படித்து முடித்த வுடன் வாய்ப்பும் திறமையும் உள்ளவர்கள் தைரியமாகத் தொழில் தொடங்கி தொழிமுனைவோர்களாக ஆகிவிடுகிறார்கள். தைரியம் இல்லாதவர்களே வேலை வாய்ப்புத் தேடி பணியில் அமர்கிறார்கள்.தொழில் தொடங்கத் தைரியம் இல்லாதவர்கள் கையில் தவறான வழியில் பொருள் கிடைத்துவிட்டது என்பதற்காகத் தொழில் தொடங்கினால் அது நிச்சியமாக ஒரு குருட்டுத் தைரியமாகத்தான் இருக்கும் .தொழிலோடு தொடர்புடைய பல்வேறு இரகசியங்களைத் தெரிந்து கொள்ளாமல் அவர்களால் தொழிலில் தொடர்ந்து வெற்றிகரமாக ஈடுபடமுடிவதில்லை .
ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஈடுபடுவதற்கும் ,அதில் தடையில்லாத முன்னேற்றம் காண்பதற்கும் அக் குறிப்பிட்ட தொழிலில் தனித்த திறமையை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். போதிய திறமை இல்லாவிட்டால் அத்தகைய திறமைகள் உள்ளவர்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். தொழில் செய்வதற்கு நல்ல ஆளுமைத் திறன் அவசியம். ஆளுமைத் திறனின்றி வெறும் பணத்தாலேயே எல்லாப்பிரச்சனைகளையும் தீர்வு செய்துவிடமுடியும் என்று நம்பி தொழிலில் இறங்குபவர்கள் இடைநிலையில் தடுமாறுகிறார்கள். .ஆளுமைத் திறன் என்பது உரிமையுள்ள அறிவு மட்டுமல்ல அது ஒழுக்கம் மற்றும் உளவியல் சார்ந்த பல அம்சங்களை க் கொண்டுள்ளது. நல்லொழுக்கம் ,நேர்மை, வாய்மை, நேர்நதவறாமை , பண்புடைமை .பணிவு , கடமை தவறாமை , ஒருபாற்கோடாமை ,திட்டமிட்டு செயலில் ஈடுபடுதல் , சமுதாய நலன் காத்தல் போன்ற பல்வேறு பொருண்மைகளை உள்ளடக்கியது .இவற்றையெல்லாம் அனுபவத்தால் மட்டுமே வளப்படுத்திக் கொள்ள முடியும், பணத்தால் பெறவே முடியாது .
சம்பளத்திற்காக ஒரு வேலையையும் சம்பாத்தியத்திற்காக மற்றொரு வேலையையும் ஒரே சமயத்தில் இருவேறு பணிகளில் ஈடுபடும்போது கவனக் குறைவு வெகு இயல்பாகிவிடுகின்றது . இது ஆளுமைத் திறனை வெகுவாக மட்டுப்படுத்திவிடுகின்றது
தவறான வழியில் பொருளீட்டி தொழில் தொடங்குவோர் தொழிற்சசாலையில் பணிபுரிவோர் காலப்போக்கில் நேர்மையானவர்களாக இருக்கமாட்டார்கள். முதலாளிகளின் ஊழல் பற்றிய விவரங்கள் அவர்களுக்கும் தெரிய வர , நேர்மையின்மை பற்றிக் கொள்ளும் தீயைப்போல சட்டெனெத் தொற்றிக்கொண்டு விடுகின்றது..அவர்களும் குற்றச் செயலில் ஈடுபட வாய்ப்புத் தேடிக்கொண்டிருப்பார்கள்.பெரும்பாலும் தவறான வழியில் சம்பாதித்த பணத்தால் தொடங்கப்பட்ட தொழிற்சசாலைகளில் பணியாற்றும் தொழிலாளிகள் முதலாளிகளுக்கு உள்ளெதிரிகளாகவே இருப்பார்கள். எப்போது முதலாளியைக் காலைவாரிவிடுவார்கள் என்பது யாருக்கும் தெரியாது.இதனால் முதலாளி - தொழிலாளி உறவு மேம்படு வதில்லை . .இது தொழில் வளர்ச்சியைப் பாதித்து நஷ்டத்தை ஏற்படுத்த ஒரு வலிமையான காரணமாக இருக்கின்றது .
.

No comments:
Post a Comment