குழந்தைத் தொழிலாளர்கள் மிகுந்து வருவது ஒரு நாட்டின் பொருளாதார மந்த நிலையைச் சுட்டிக்காட்டும் ஒரு காரணியாக இருக்கின்றது. பிள்ளைகளை வேலைக்குப் பெற்றோர்கள் அனுப்புகின்றறார்கள் என்றால் குடும்பம் கூடுதல் வசதியுடன் வாழவேண்டும் என்ற எண்ணத்தை விட வறுமையின் பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்ற போராட்டத்தின் ஒரு முடிவே. ஒருவர் வறுமையில் தள்ளப்படுவதற்கு திறமையின்மை , அல்லது திறமையை வெளிக்காட்டிப் பயன்படுத்திக் கொள்ள முடியாமை ,எழுத்தறிவின்மையைப் பயன்படுத்தி மற்றவர்களால் ஏமாற்றப்படுதல் ,குறைந்த வருவாய் அதிக குழந்தைகள் ,போதைப் பொருள் பழக்கம். ,உல்லாச வாழக்கைகளில் ஈடுபாடு எனப் பல காரணங்களைக் குறிப்பிடலாம் .இதில் ஏதாவதொரு காரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் வளரும் குழந்தைகளே ,குடும்பத்தின் வறுமையைப் போக்கும் பொருட்டு குழந்தைத் தொழிலாளிகளாக ஆக்கப் படுகின்றார்கள் . குடும்பத்தின் வறுமை காரணமாகப் பிள்ளைகளைப் படிக்க கல்விக்கூடங்களுக்கு அனுப்பாமல் கடிய வேலை செய்து குறைந்த சம்பளம் வாங்கத் தொழில்கூடங்களுக்கு அனுப்புகிறார்கள் .இதனால் பிள்ளைகள் எதிர்காலத்தை வளப்படுத்துவதற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியாது போகின்றது மேலும் அந்த வாய்ப்பை நிரந்தரமாக இழந்துவிடுவதால் எதிர்காலத்திலும் வறுமையின் பிடியிலிருந்து விடுபட முடியாமல் போகின்றது.இதனால் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியத் தேவையான திறமைகளை ஒரு நாடு நிரந்தரமாக இழந்துவிடுகிறது. தேவைப்படும் திறைமைகளுக்கு எப்பொழுதும் பிற நாட்டினரையே எதிர்பார்க்கவேண்டிய கட்டாய நிலை ஏற்படுவதால் முன்னேற்றம் பின்தங்கிவிடுகின்றது அல்லது ஒரு நாட்டின் முன்னேற்றம் பிற நாட்டினரால் தீர்மானிக்கப்படுகின்றது
.அதிக வேலைக்குக் குறைந்த ஊதியம் கொடுத்தால் போதுமானது , தொழிலாளர் பிரச்சனை என்று சிக்கல்கள் இல்லை , தொழிலார்களை விட குழந்தைகளிடம் காணப்படும் கூடுதல் நேர்மைத்தன்மை தவிர்க்கமுடியாத இழப்புக்களைத் தருவதில்லை போன்ற பல பயன்களைத் தரக்கூடியது என்பதால் தொழில் செய்வோர் குழந்தைத் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.
இன்றைக்கு குழந்தை தொழிலாளர்கள் ,உணவருந்திய மேஜை , சாப்பிட்ட தட்டுக்களையும் ,குவளைகளையும் எடுத்து சுத்தம் செய்ய , இடத்தைப் பெருக்கி மொழுகி சுத்தம் செய்ய ,உணவகங்களிலும் ,வயல் வேலை செய்ய , ஆடு மாடு மேய்க்க , குளிப்பாட்ட ,தோட்டம், கழிவறை சுத்தம் செய்ய , வீடு கூட்டி மொழுகி பண்டம் பாத்திரம் கழுவ ,துணி துவைக்க ,கார் வண்டி கழுவ ,கடைக்குப் [போய் வேண்டிய பொருள் வாங்கி வர வீடுகளிலும் , சரக்கு வாங்கிவர, வரும் சரக்குகளை இறக்கி வைக்க ,பொருட்களை க் கொண்டு போய்க் கொடுக்க,,கடையில் அமர்ந்து கொண்டு பொருட்களை விற்பனை செய்ய ,,கடையைச் சுத்தம் செய்ய கடைகளிலும் ,பட்டாசு உற்பத்தி போன்ற ஆபத்தான தொழில் செய்ய , இயந்திரங்கள் செய்யும் கடினமான வேலைகளைச் செய்ய தொழிற்கூடங்களிலும் .பயன்படுத்தப்படுகின்றார்கள். ஆதரவற்ற குலத்தைகளைக் கொண்டு சில சமுதாயக் குற்றவாளிகள் பிச்சை எடுக்கவும், போதைப் பொருள் விற்கவும்,கடத்தவும் பயன்டுத்துகின்றார்கள் .
திறமைகளை வளர்த்துக் கொள்ளப் படிக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் பொன் முட்டையிடும் கோழிகள் , கோழிகுஞ்சுகளைக் கொன்று கரிக்காக விற்கும் கூட்டத்தால் அரசுக்குக் கிடைப்பது சொற்ப வருவாய் மட்டுமே . அரசியல்வாதிகளிடம் நாட்டுக்காக ஏமாந்து போனோம் என்று வருத்தத்தைவிட குழந்தைத் தொழிலார்களைத் தடுக்கும் ,கண்காணிப்பு வேலை செய்யாமல் சும்மா இருக்கும் மகிழ்ச்சியே அதிகம் காணப்படுகின்றது
No comments:
Post a Comment