போலிப்பொருட்கள் அரசாங்க அதிகாரிகளின் அனுமதியின்றி உற்பத்தி செய்யவோ அனைத்து தொடர்ந்து சந்தைப்படுத்தவோ முடியாது. .எனவே போலிப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதும் ,சந்தைப் படுத்தப்படுவதும் தடையின்றி நடைபெறுகின்றது என்றால் அதில் எதோ ஒரு வகையில் ஆட்சியாளர்களும் ,அரசாங்க அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என்றே முடிவு செய்ய வேண்டியிருக்கின்றது .
பொருட்களை வாங்கும் போது போலிப்பொருட்களை இனமறித்து கொள்ளும் திறமை பெரும்பாலான மக்களுக்கு இருப்பதில்லை. அதனால் போலிப்பொருட்கள் வாங்கப்படுவதைத் தவிர்த்துக் கொள்ள முடிவதில்லை .அதனால் அப்படிப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதையும் சந்தைப்படுத்தப்படும்போது ஏமாற்றப்படுவதையும் மக்களுக்காக மக்களால் மட்டும் தடுத்துக் கொள்ள முடிவதில்லை . எனவே நாட்டில் போலிப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதையும் ,அவை சந்தைப்படுத்தைப்படுவதையும் உடனுக்குடன் கண்டறிந்து தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் .அது அரசாங்கம் மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் செய்யவேண்டிய கடமையுமாகும்.
மக்கள் பொருளின் பயன்பாட்டின் மூலமும் விளம்பரத்தாலும் பொருளை வாங்கும் பழக்கமுள்ளவர்களாக இருக்கின்றார்கள் ,அது போலியான பொருள் என்பதை வாங்கிப் பயன்படுத்தியபின்னரே மக்களால் தெரிந்து கொள்ள முடிகின்றது. தரக் கட்டுப்[பாடுகள் பற்றிய நுட்ப அறிவு இல்லாதிருப்பதால் பொருட்களின் போலித்தன்மையை முழுமையாக அறியாதிற்கும் நிலையே நீடித்திருக்கும். தரக்கட்டுப்பாடுகளைத் தெரியப்படுத்தி விட்டதால் அது எங்கும் பின்பற்றப்படுவது என்று நம்பிக்கைகொள்வது போதுமானதில்லை. அது பின்பற்றப்படுகின்றதா என்பதை கவனிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு மட்டுமே உண்டு.போலிப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவது தொடருமானால் அது தொழில் வளர்ச்சியை முடக்கிவிடும் .அது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட ஒரு வலிமையான காரணமாகும் .
No comments:
Post a Comment