Monday, May 9, 2022

 

டாட்போல் அண்டம் (Tadpole Galaxy)

 

        ட்ராகோ (Draco) வட்டார விண்மீன்கள்  தொகுதியில் ஏறக்குறைய 420 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு புதுவகையான சீரற்ற அண்டமொன்றை முதன் முதலாக 1781ம் ஆண்டில்  கண்டனர். இதை டாட்போல் அண்டம் என அழைக்கின்றார்கள் . இதை UGC 10214   என்று படத்தொகுப்பில்  குறிப்பிடுகின்றார்கள். இதன் அருகாமையில் நீலநிறங் கொண்ட விண்மீன்களாலான ஒரு சிறிய அண்டம்  காணப்படுகின்றது . இது நிறைமிக்க சுருள்புய வடிவிலுள்ள டாட்போல் அண்டத்தைக் குறுக்கிட ,அவற்றின் மோதல் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இதன் தோற்றத்தில் காணப்படும் மாற்றங்கள் அண்டங்களின் மோதலால் ஏற்படுகின்ற பின் விளைவுகளாகும். சுருள் புய அண்டத்தின் வலிமையான ஈர்ப்பு விசை மோத வரும் அண்டத்திலுள்ள விண்மீன்கள் மற்றும் வெடித்துச் சிதறிய விண் மீன்களினால் உண்டான வளிமம் இவற்றால் நம்பமுடியாத அளவிற்கு ஒரு நீண்ட வால் போன்ற பகுதியை உருவாக்கியிருக்கிறது . இந்த வால்  அண்டத்திலிருந்து சுமார் 280,000 ஒளியாண்டுகள் தொலைவு வரை நீண்டிருக்கின்றது இளமையான நீல வண்ண  விண்மீன்கள் மற்றும் விண்மீன் கூட்டங்கள் போன்றவை சுருள் புயங்களிலும் நீண்ட வால் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இதிலுள்ள விண்மீன் கூட்டத்தில் ஒரு மில்லியன் விண்மீன்கள் வரை உள்ளன. காலப்போக்கில் இவை சிவப்பாக மாறி கோளகக் கொத்து  விண்மீன் கூட்டங்களாக உருமாறும் என்று கூறுகின்றார்கள் . இது போல இரட்டை அண்டங்களில்  நிகழ்வதை அறிந்துவைத்திருக் கின்றார்கள்..  வால் பகுதிகளில் உள்ள விண்மீன்கள் வயதாக வயதாக அண்டத்தின் தடித்த சுருள் புயத்தால் உட்கிரகிக்கப்பட்டுவிடும் என்று கூறுகின்றார்கள். NGC 




10214 டாட்போல் அண்டம்

 

சீர்குலைந்து பிளவுற்ற சுருள் புயங்களைக் கொண்டிருக்கும் . தலைப் பிரட்டையின் வளர்ச்சிப் படிபோல இதன் உருவமும் விண்மீன்களின் உருவாக்கமும் இருந்ததால் இதற்கு டாட் போல் அண்டம் எனப் பெயரிட்டனர். இது ஒரு பெரிய  அண்டம் உடைந்து சிதைந்து புதிய சிறிய அண்டங்களாக நிலைமாற்றம் பெறும் இடைநிலையாகும்.. 2002 ல் UGC 10214 ஆக இருந்தது 2018 ல் பல சிறிய அண்டங்களின் தொகுதியாக நிலைமாறிப் போயிருக்கின்றது. இதை  HCG098 என்று சுட்டுகிறார்கள்,

 NGC 10214 டாட்போல் அண்டம்

 

சீர்குலைந்து பிளவுற்ற சுருள் புயங்களைக் கொண்டிருக்கும் . தலைப் பிரட்டையின் வளர்ச்சிப் படிபோல இதன் உருவமும் விண்மீன்களின் உருவாக்கமும் இருந்ததால் இதற்கு டாட் போல் அண்டம் எனப் பெயரிட்டனர். இது ஒரு பெரிய  அண்டம் உடைந்து சிதைந்து புதிய சிறிய அண்டங்களாக நிலைமாற்றம் பெறும் இடைநிலையாகும்.. 2002 ல் UGC 10214 ஆக இருந்தது 2018 ல் பல சிறிய அண்டங்களின் தொகுதியாக நிலைமாறிப் போயிருக்கின்றது. இதை  HCG098 என்று சுட்டுகிறார்கள்,

Sunday, May 8, 2022

circular wave trains-II

ஆற்றல் எவ்வளவாக இருந்தாலும் அது வட்ட அலையாக நிலைமாற்றம் பெறமுடியும்  எனினும் அது குவாண்டம் கொள்கையைப் போல ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருக்கவேண்டும் அதவாது வட்டப்பாதையில் நீளம் அலைநீளத்தின் முழு மடங்காக இருக்கவேண்டும் . அப்பொழுதுதான் வட்டப்பாதையில் அந்த அலைக்கற்றை ஒரு தொடர் அலைபோலத் தொடர்ந்து இயங்கி ஒரு நிலைப்புத் தன்மையைப் பெறமுடியும். இது போன்ற கருத்துக்கள் குவாண்டம் கொள்கையின் அடிப்படியாக இருக்கின்றது . ஹைட்ரஜன் அணுவின் கட்டமைப்பை நிறுவும்போது நீல்ஸ் போர்  எலக்ட்ரான்களின் அனுமதிக்கப்பட்ட  வட்டப்பாதைகள் யாவும் லூயிஸ் டிபிராக்களி நிறுவிய அதன்  பொருளலையின்  அலைநீளத்தின் முழுமடங்காக மட்டுமே இருக்கின்றது என்பதும் , ஒரு பாதையிலிளியில் வட்ட அலைகளால் இது சாத்தியமாகின்றது

      நேரலை வட்ட அலையாக மாறும்போது தன் கூடுதல் ஆற்றலை இழக்கின்றது.. தனித்த வட்ட அலையின் ஆற்றல் அந்த அமைப்பின் அடிமட்ட ஆற்றல்நிலையாக இருப்பதால் இந்த ஆற்றல் இழப்பு ஏற்படுகின்றது வட்ட அலைக்கு ஆற்றலூட்டப்பட்டால் அது மீண்டும்  நேரலையாகிவிடுகின்றது. பொதுவாக வட்ட அலை தனக்குத் தானே துகள் - எதிர்த்துகள் போலச் செயல்படுவதால் அது எந்த நிலையிலும் தன்னைத் தானே அழித்துக்கொள் கின்றது. அப்போது வட்ட அலைகள் தனித்த நேரலைகளாக மாறிவிடுகின்றன வட்டஅலை அது சுற்றும் முறையால் இரு வகைப்படுகின்றன . கருவற்ற ஒரு மையத்தைச் சுற்றி  ஒரு அலை  ஒரு குறுகிய வட்ட அலையாக இயங்கும்போது  அது கடிகாரச் சுற்று முறையிலோ அல்லது எதிர் கடிகாரச் சுற்று முறையிலோ அமையலாம்.. ஒரு வட்டஅலை தானே துகள் தானே எதிர்த்துக்கள் போலச் செயல்பாட அது ஒரு ஒற்றை வட்ட  வட்டஅலையாக இருக்கமுடியாது ..வட்ட அலை உருவாகும்போதே அது 8 வடிவில் இரட்டை வட்ட வட்டஅலையாக மாறுகின்றது. இதிலுள்ள ஒரு கூடுதல் அனுகூலம் அதைத்  துகள்=எதிர்த்துகளாக்கி விடுகின்றது. வட்ட அலை இப்படி  அமையும் போது ஒரு வட்டம் கடிகாரச் சுற்று முறையிலும் அண்டை வட்டம் எதிர்கடிகாரச் சுற்று முறையிலும் இயல்பாக அமைகின்றன,.இது கோண உந்தம் மாறாக் கோட்பாட்டிற்கு இணக்கமாக இருக்கின்றது என்பதால் இயற்கையால் அனுமதிக்கப்படுகிறது. 

          வட்ட அலைகள் ஆற்றலின் திரள்சி .என்றாலும் பருப்பொருளாக்க முயற்சியின் ஒரு விளைவு என்றாலும் வட்ட அலைகள் மட்டுமே பருப்பொருளைத் தந்துவிடுவதில்லை . ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அதிகமான ஆற்றல் மட்டுமே பருப்பொருள் வடிவிலான துகள்களைத் தருகின்றன இதை வினைச் சிறும ஆற்றல் (threshold energy) என்று கூறுவார்கள்.  அவ்வாற்றலுக்குக் குறைவான ஆற்றலுடைய தனித்த ஒளிக்கற்றை  தன் நிலைப்புத் தன்மையை அதிகரித்துக்கொள்ள வட்ட அலைகளாக மட்டுமே மாறுகின்றது துகள்களாக மாறுவதில்லை, இந்த வட்ட அலைகள் துகளிடைப் பிணைவாற்றலாக உறைவதற்குத் துணை செய்கின்றன   மேலும் ஆற்றலிலிருந்து துகள்கள் உருவாகும் போது  ஆற்றல் மாறாக் கோட்பாட்டிற்கு உட்பட்டிருந்தாலும்  தனியொரு துகள் மட்டுமே உருவாவதில்லை. இதற்குக் காரணம் துகள் உருவாகும்போது அதனுடன் ஒரு மின்னூட்டமும் ஏற்றப்படுகின்றது. . மின்னூட்டம் என்பது துகளின் உள்ளார்ந்த கட்டமைப்பின் தனித்துவம் . மின்னூட்டம் மாறாக்கோட்பாடு  பருப்பொருளாக்கத்தின் போது உருவாகும் துகள்கள், துகள்- எதிர்த்துகளாக, இரட்டைத் துகள்களாக இருப்பதை கட்டாயப்படுத்துகின்றது. பருப்பொருளாகத்தின் போது ஆற்றலிலிருந்து எப்போதும்ப்படுத்தியுள்ளன. 

 

 வான வெடி அண்டம் Fireworks galaxy) 

             ஏறக்குறைய 22 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பாலுள்ள NGC  6946 என்று குறிப்பிடும் இந்த அண்டம் நடுத்தரமான சுருள்புயத்துடனும்  குறுக்குவெட்டுத் தோற்றத்துடனும் தோற்றமளிக்கும் ஒரு அண்டமாகும். இதன் சுருள்புயத்தில் வெடித்துச் சிதறும் குறைந்தது 10- சூப்பர்நோவா விண்மீன்களைக் கண்டறிந்துள்ளனர் இதில் உள்ள ஒரு சில வயதான சூப்பர்நோவாக்கள் இந்த அண்டத்தின் வான வெடித் தோற்றத்திற்குக் காரணமாக இருப்பதாகக் கூறுகின்றார்கள். நம்முடைய அண்டத்தோடு ஒப்பிட நமது அண்டத்தில் ஒரு சில நூறாண்டுகளுக்கு ஒரு சூப்பர்நோவா தோன்றுவதாகக் கூறுகின்றார்கள். இதன் இடைநிலைச் சுருள்புயம் ,சுருள்புய அண்டம் Sb வகையிலிருந்து Sc  வகைக்கு நிலைமாற்றம் பெறுவதையும் அதில் காணப்படும் திடீர் மாற்றங்கள் மிக அதிக அளவில் விண்மீன்கள் உருவாவதையும் சுட்டுகின்றன


   1798  ம் ஆண்டில் வில்லியம் ஹெர்சல் என்பாரால் கண்டுபிடிக்கப்பட்ட இது 25.2 மில்லியன் (7.72 Mpc)  ஒளியாண்டுகளுக்கு அப்பால் அன்ன வடிவ (Swan)  அண்டமான து நிறை மிக்க விண்மீன்களைக் ல்.ளம் விண்மீன்கள் நிறைந்த ஒரு பெரிய கொத்துக் கூட்டம் என்று நம்பப் பட்டது .2017 வாக்கில் NGC 6946 அண்டமும் ஒரு குறு அண்டமும் மேற்கொள்ளும்    குறுக்கீட்டு வினைகளால் ஏற்படுகின்றது என்பதை அனுமானித்துள்ளனர் . கடந்த நூறாண்டு காலத்தில் இந்த அண்டத்தில் மட்டும் 10 குபேர நோவாக்களைக் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாகவே இது வான வெடி அண்டம் என்று விண்வெளி ஆராச்சியாளர்களால் குறிப்பிடப்படுகின்றது 

           2004 ம் ஆண்டில் இவ்வண்டத்தில் 15.2 ஒளிபொலிவெண்ணுடன் கூடிய  ஒரு சூப்பர்நோவா கட்புலனுணர் ஒளியின் நெடுக்கையில் 12.7 ஒளிபொலிவெண்ணைக் கொண்டிருப்பதைக் கண்டனர் . இந்த அண்டத்தை ஒரு சில நாட்களுக்கு முன்னர்  எடுத்த பதிவுகள் அவ்விடத்தில் ஒரு சூப்பர்நோவா வெடித்துச் சிதறியிருப்பத்தைச் சுட்டிக்காட்டியது. இது சூப்பர்நோவாவிற்கு முன்னோடியாக இருந்த விண்ணுறுப்பை இனங்காட்டியுள்ளது. வெடிப்புக்கு முன்னும் பின்னும் உள்ள விண்ணுறுப்புகளை இதுவரை 7 முறை மட்டுமே பதிவுசெய்திருக்கிறார்கள். இங்கு சூப்பர்நோவாவின் முன்னோடி 15 சூரிய நிறை கொண்ட ஒரு பெரிய செம்மீனும்  நீல நிறம் கொண்ட ஒரு பெரிய விண்மீனும் இரட்டை இணை விண்மீன்களாக இடையீட்டுச் செயல் புரியும் ஒரு அமைப்பாகும்

 

          2009  ம் ஆண்டில் இந்த அண்டத்திலுள்ள ஒரு பிரகாசமான விண்மீன் திடீரென்று பிரகாசமாக ஒளிரத்  தொடங்கி சில மாதங்கள் வரை தொடர்ந்தது அப்போது அதன் பிரகாசம் சூரியனைவிடஒரு மில்லியன் மடங்கு அதிகமாக இருந்தது  . அதன் பிறகு அதன் பிரகாசம் விரைந்து மங்கத் தொடங்கியது. 2017 ல்  ஹபள் தொலைநோக்கி முலம் ஆராய்ந்த போது அந்த சூப்பர்நோவா அவ்விடத்தில் தற்பொழுது அங்கில்லாததை அறிந்துகொண்டனர் அங்குள்ள எச்சம் அகச்சிவப்புக் கதிர்களை உமிழ்ந்துகொண்டிருக்கின்றன . விண்மீன் அழிவுற்றபோது உருவான கருந்துளை விண்மீன் அருகாமையிலுள்ள பொருளை உட்கவருவதால் இந்த கதிர்வீச்சு ஏற்படுகின்றது என்று கருதுகின்றார்கள்




Saturday, May 7, 2022

Circular wave train- I

 A revolutionary thought in the fundamental physics which links both micro and macro world.

வட்ட அலை-I       

      ஒளி அலை ஊடகத்தில் ஊடுருவிச் செல்லும் போது அது ஒன்றன்பின் ஒன்றாக இடைவெளியின்றி ஒரு சங்கிலித் தொடர் போலப்  பரவிச் செல்கின்றன அப்படிப் பரவிச் செல்லும் போது ஒவ்வொரு அலைக்கும்  முந்திய அலை வழிகாட்ட பிந்தைய அலை ஒரு உந்துதலைத் தருகின்றது ஒளிஅலைகள்  மின்காந்த அலைகளாகும் என்று மாக்ஸ்வெல்  நிறுவினார் அதில் மின்புல அலைகளும் காந்தப்புல அலைகளும் பரவிச் செல்லும் திசைக்குச்  செங்குத்தாகவும் ஒன்றுக்கொன்று செங்குத்தாகவும் இருப்பதாகக் கண்டறிந் துள்ளார் . ஒளியை விட வேகமாகச் செல்லக்கூடிய பொருள் இம்பிரபஞ்சத்தில் எதுவுமில்லை என்று இன்றுவரை நம்பப்படுகின்றது. ஒளியின் திசை வேகம் வினாடிக்கு 3 லட்சம் கிமீ. 

      ஒளி அலைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை ஒளிமூலத்துடன் மட்டும் தொடர்புகொண்டவை , ஒளி வாங்கியுடன் மட்டும் தொடர்புகொண்டவை , மற்றும் இவற்றோடு தொடர்பின்றி தனித்து விடப்பட்ட ஒளிக்கற்றை  ஆகும்.. பொதுவாக ஒளிஅலைகள் நீண்ட தொலைவு கடந்து செல்லும் போது தன் ஆற்றலை இயக்கத்தின் காரணமாக இழக்கின்றது . அதனால் அவை பெருந்தொலைவு கடந்தபின்பு மெலிந்து காணாமற் போய்விடுகின்றது . ஒளிமூலத்துடன் தொடர்புடைய ஒளி அலைகள் பரவலின் காரணமாக இழக்கும் ஆற்றலை ஓரளவு புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றது. அதனால் அவை கூடுதல் தொலைவு கடந்து செல்கின்றன இலக்கு நோக்கிய பயணத்தில் புலக்குறுக்கீடு இல்லாதவரை அவை நேரலைகளாகவே பயணிக்கின்றன. ஆனால் துண்டிக்கப்பட்டு தனித்து விடப்பட்ட ஒளி அலைக்கு இந்த வாய்ப்பு இல்லை. இந்த அலைக்கற்றை அலை மூலத்துடன் தொடர்பில்லாமலும் ,சென்றடையும் இலக்குடன்  தொடர்பில்லாமலும்  ரயில் வண்டித் தொடர்போல ஊடகத்தில் ஒரு நேர்கோட்டுப் பாதையில் ஊடுருவிச் செல்ல முடியும்.  ஆனால் அலைகள் போல ஒரு தனித்த அலை இயக்கிச் செல்ல பிற அலைகளின் உந்துதல் இல்லை .அதனால் அது  நிலைப்புத் தன்மையை தனக்குத் தானே தேடிக்கொள்கின்றது. தன்னைத் தானே தொடரும் ஒரு அலையாக ஒரு குறுகிய வட்ட அலையாக நிலைமாற்றிக்கொள்கின்றது.. அதனால் அது ஒரு நேரலை போல ஆற்றல் இழப்பின்றித் தொடர்ந்து  இயக்கத்தில் ஈடுபடுகின்றது இந்த நிலைமாற்றம் ஒரு தனி அலைக்கு நீண்ட கால நிலைப்புத்தன்மையைத் தருகின்றது

 

                                                                              நேரலையும் வட்டலையும்


  


                                

Vinveliyil Ulaa

 

செளரோனின் விழி அண்டம்  (EWye of Sauron) 



  NGC 4151  செளரோனின் விழி அண்டம்

 கணையாழிகளின் கடவுளில்  (LOr of rings) வரும் செளரோன்  என்ற கதாபாத்திரத்தின் கொடூரமான விழி போல இருந்தததால் இவ்வண்டத்தை செளரோனின் விழி அண்டம் என்றே அழைக்கின்றார்கள்.. NGC 4151  என்று வரைபடத் தொகுப்பில் குறிப்பிடப்படுகின்ற இவ்வண்டம் 62 மில்லியன் ஒளியாண்டுகள் (19 Mpc) தொலைவில் கானஸ் வெனாட்சி (Canes Venatici) என்ற விண்மீன் வட்டாரத் தொகுப்பில் அமைந்துள்ளது. இது இடைநிலையில் உள்ள ஒரு சுருள்புய செய் பெர்ட்  அண்டமாகும் .  1787 ம் ஆண்டில் வில்லியம் ஹெர் சல் என்பாரால் கண்டு பிடிக்கப் பட்ட  இதன் உட்புற புயம் மிகவும் நலிவடைந்து காணப்படுகின்றது

செளரோன் கண்ணின் கண்மணிப் பகுதியில் காணப்படும் நீல நிறம் எக்ஸ் கதிர்களை உமிழும் அயனிக்கப்பட்ட ஹைட்ரஜன் வளிமத்தையும் செந்நிறம் இயற்கை ஹைட்ரஜன் வளிமத்தையும் குறிப்பிடுகின்றது இந்த இயற்கை ஹைட்ரஜன் NGC 4151 அண்ட மையத்தின் கட்டமைப்பில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றது . இது அண்டத்தின் பிற பகுதிகளுடன் மேற்கொள்ளும் ஈர்ப்பு வினையால் சீர்குலைந்து போயிருக்கின்றது . இதன் விளைவாக புறவெளியிலிருந்து வளிமங்களும் தூசுகளும் இந்த அண்டத்தின் மையத்தை நோக்கி விரைந்து வந்து உட்பகுதியில் விழுகின்றன. அப்போது அணுக்களில் உள்ள எலெக்ட்ரான்கள் நீக்கப்பட்டு அயனிக்கப்பட்டுவிடுகின்றன. இப்பகுதியில் காணப்படும் மஞ்சள் நிறக் கொப்பளங்கள் , அப்பகுதியில் புதிதாக உருவாகும் விண்மீன்களைக்  குறிப்பிடுகின்றது. இந்த அண்டத்தின் மையத்திலிருந்து செறிவுள்ள எக்ஸ் கதிர் உமிழப்படுகின்றது என்பதை அதன் நிறமாலை தெரிவித்துள்ளது. .அண்டத்தின் மையத்தில் உள்ள  நிறைமிக்க கருந்துளை விண்மீனால் தூண்டப்பட்டு வெடித்துச் சிதறும் விண்மீன்களால் எக்ஸ் கதிர் உமிழ்வு  இருக்கலாம் என்று கூறுகின்றார்கள். ஹைட்ரஜன் அயனி எலெக்ட்ரானை உட்கவரும்போது  எக்ஸ் கதிர்கள் உமிழப்படுகின்றது.  

      செளரோனின் விழி அண்டம் விண்வெளியில் உள்ள அண்டங்களின் தொலைவைக் கண்டறிய ஒரு புதிய வழிமுறையைக் காட்டியுள்ளது. பூமியிலிருந்து தொலைவிலுள்ள ஒரு பொருளின் உருவ அளவை அதன் தோற்ற மற்றும் கோண வடிவியலைக் கொண்டு      மதிப்பிடும் நில அளவீட்டாளர் பின்பற்றும் வழிமுறையை இது பெரிதும் ஓத்திருக்கின்றது .           

பல மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் அண்டங்களின் தொலைவையும் , மையக் கருவாக உள்ள கருந்துளை விண்மீனின் நிறையையும் 90 சதவீதம் திருத்தமாக அளவிட்டறிய இது பயனுள்ளதாக இருக்கின்றது. .இதனால் ஏற்கனவே மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்கள் சரிநுட்பமாகத்  திருத்தப்பட்டன.. இது தொடர்ந்து விரிவடைந்து கொண்டேயிருக்கும் பேரண்டத்தைப் பற்றிக் கூடுதல் விவரங்களைத் தெரிவிக்கின்றது