வாழ்க்கை
வாழ்க்கை என்ற தேரின் இரு சக்கரங்கள் கணவனும் மனைவியும். ஒரு சக்கரம் பழுதுற்றாலும் தேர் ஓடாது
சிறந்த வாழ்க்கை என்பது மிகுதியைப் பொருள் குவிப்பதில்லை எல்லாவற்றையும் துறந்து துறவியாக இருப்பதுமில்லை .அறிஞராக அல்லது சாதனையாளராக வருவதுமில்லை ஒன்றுக்கும் பயனில்லாமல் சும்மா இருப்பதுமில்லை .வாழ்கையை வாழ்க்கையாக வாழ வேண்டும் .மனிதர்களுக்கு மட்டுமின்றி எல்லா உயிரினங்களுக்கும் உதவுவது .இயற்கையை உணர்ந்து இயல் வாழ்க்கை வாழ்வது ,தான் வாழுமிடத்தில் பிறரும் பின்வருவோரும் வாழ நம்பிக்கை அளிப்பது ,அதன் மூலம் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான் சிறந்த வாழ்கை .
எவர் இயற்கையான வாழ்கையை நேசிக்கின்றார்களோ அவர்களே சிறந்த வாழ்கையைப் பெறமுடியும் .எவர் இயற்கை எதிர்பார்க்கின்ற வாழ்க்கையைக் கடைப் பிடிக்கின்றார்களோ அவர்களே சிறந்த வாழ்கையை மேற்கொள்கின்றார்கள் .
போராட்டாம் தான் வாழ்க்கை என்பது இயற்கை. வலிமையானவர்களே தொடர்ந்து வாழ முடியும் ஆனால் இயற்கைப் போராட்டத்தில் செயற்கைப் போராட்டம் வேதனைதான்
பிறப்பு என்பது நீ கேட்டுத் தரப்பட்டதில்லை .நீ மறுத்து வேண்டாம் என்று சொல்ல முடியாது .இறப்பிலும் உன் மறுப்பு ஏற்கப்படாது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலமே உனக்குத் தரப்பட்டிருக்கிறது .அதை நல்லதாக்கிக் கொள்வதும் அல்லதாக்கிக் கொள்வதும் உன் கையில் தான் இருக்கிறது .
நேரம் பின்னோக்கிச் செல்வதில்லை .சும்மா இருந்தாலே நேரம் கடந்துவிடும் .வாழ்கையும் அப்படித்தான் .நேரத்தைக் கழிப்பதற்காக நாம் பிறக்கவில்லை.குறுகிய வாழ்க்கைக்குள் அரிய காரியங்களைச் செய்து முடிக்கும் குறிக்கோள் இருக்க வேண்டும் .
இலை உதிர்ந்து கீழே விழப் போகின்றோமே என்று வாடி வருத்தம் கொள்வதில்லை .மரத்திற்கு மீண்டும் உரமாகப் போகின்றோம் என்ற மகிழ்ச்சியோடு உற்சாகமாக விழுகிறது .வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்ச்சியில் அதற்கிருக்கும் நம்பிக்கையில் சிறிதளவு கூட நமக்கில்லையே .
அளவுக்கு மீறிய நம்பிக்கை கூட சில சமயங்களில் தவறான முடிவை மேற்கொள்ளத் தூண்டுகிறது .அனுபவத்தின் அடிப்படையிலோ அல்லது அறிவியல் முறைப்படியோ நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்ளாததின் விளைவே இது
No comments:
Post a Comment