Tuesday, January 8, 2013

Arika Iyarpiyal


அறிக இயற்பியல்

ஒத்த மின்னூட்டங் கொண்ட துகள்கள் ஒன்றையொன்று விலக்கிக் கொள்ளவும்,மாறுபட்ட மின்னூட்டங் கொண்ட துகள்கள் கவரவும் செய்கின்றன.மின் விசையானது கூலும் விதிக்கு உட்பட்டு மாறுபடுகின்றது என்பதை நாம் நன்கு அறிவோம்.ஒரு வகை மின்னூட்டங் கொண்ட இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட துகள்கள் விலகிச் செல்லும் போது,ஒரு மாறு வகை மின்னூட்டங் கொண்ட துகளை பொது மையத்தில் வைத்து துகள்கள் அனைத்தையும் நிலையாக இருக்குமாறு செய்யமுடியும்.அந்நிலையில் ஒவ்வொரு துகள் மீதும் செயல்படும் மொத்த விசை சுழியாக இருக்கும்.எடுத்துக்காட்டாக q என்ற எதிர் மின்னூட்டங் கொண்ட இரு துகள்கள் r என்ற இடைவெளியுடன் வைக்கப் பட்டிருக்கும் போது அவற்றின் மையத்தில் Q என்ற நேர் மின்னூட்டங் கொண்ட துகளை வைத்து சமநிலையை ப் பெறலாம். சமநிலைக்கு Q =q /4 என்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

r என்ற பக்க நீளமுள்ள ஒரு சமபக்க முக்கோணத்தின் உச்சிப் புள்ளிகளில் q என்ற எதிர் அல்லது நேர் மின்னூட்டங்களை அம் முக்கோணத்தின் பொது மையத்தில் Q என்ற நேர் அல்லது எதிர் மின்னூட்டத்தை வைத்து ஒரு சமநிலையில் இருக்குமாறு செய்ய முடியும் .மின்னூட்டங்கள் சமநிலையில் இருக்க q விற்கும் Q விற்கும் உள்ள தொடர்பு என்ன ?




                                      

ஒரு முனையில் உள்ள எதிர் மின்னூட்டத்திற்கும் பொது மையத்திலுள்ள நேர் மின்னூட்டத்திற்கும் இடைப்பட்ட தொலைவு r /31/2 எனவே கவர்ச்சி விசை 3q Q /Kr 2. இதில் K என்பது ஊடகத்தைப் பொறுத்த ஒரு மாறிலி .இரு எதிர் மின்னூட்டங்களுக்கு இடைப்பட்ட விலகு விசை q 2/Kr2 .ஒவ்வொரு எதிர் மின்னூட்டத்துகள் மீதும் இரு விலகு விசைகள் 6 0 டிகிரி கோணத்துடன் செயல்படுவதால்அவற்றில் கூடுதலை F =[ F 12 + F 2 2 + 2F1  F 2 cos 60 ]1/2 என்ற தொடர்பின் மூலம் அறியலாம் . இதில் F1=F 2=q 2/Kr2 என்பதால் F = 31/2 q 2/K r2. சமநிலையில் இருக்க விலகு விசையும் கவர்ச்சி விசையும் சமமாக இருக்க வேண்டும் .இது q = 31/2 Q நிபந்தனையைத் தருகிறது .

No comments:

Post a Comment